முருகன் App
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு
தண்டபாணி சுவாமிகள்
1. குன்றக்குடித்தல வகுப்பு2 / 8
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு · தண்டபாணி சுவாமிகள்

1. குன்றக்குடித்தல வகுப்பு

1தந்ததன தந்ததன-தந்தத் தனத்தனா✓
அம்புவிம டந்தையணி யுந்திலக மென்றுணரும்
அன்பர்கள்வி ரும்பும்வரம் - மிஞ்சக் கொடுப்பது,மேல்
அண்டபகி ரண்டமும்நி றைந்தகுகன் என்றுதினம்
அஞ்சலிசெய் கின்றவர்கள் - நெஞ்சத் தைஒப்பது,மால்
அன்றவுணன் முன்புவிய னந்திடவ ளர்ந்திலகும்
அந்தவுரு வம்பொருசி - லம்புற்ற பொற்பினதே
அஞ்சமொடு சங்கினமும் வண்டு(ம்)மது வும்பொலியும்
அம்புயம லர்ந்ததடம் - ஒன்றிச் சிறப்பதுவே
ஐங்கணையு டன்கழைநெ டுஞ்சிலைகொ டெங்கும்அடர்
அங்கசனை வென்றவரும் - வந்தித் திடப்பெறுமே
அந்தமுத லின்றிநிறை யுங்கலைமின் இன்பநுகர்
அந்தணன்வ ரைந்தவிதி - யும்பிற் படச்செயுமே
அண்டலர்நி ணங்குருதி உண்டுமகி ழும்படையொ(டு)
அங்குறுக ணம்பலநெ - ருங்கித் துதிப்பதுவே
அந்தரர்வெ ருண்டழவெ குண்டமுசு குந்தன்இணை
யன்றியிலை யென்றுளதொ - ரும்பர்க் குவப்பினதே
✓
சிம்புள்உரு வங்கொடுபி றந்துவெறி கொண்டுளதொர்
சிங்கம்நுக ரும்பரன்உ - ணர்ந்துற்ற தைத்தருமே
செண்டுகொடு தங்கமலை அஞ்சமுனி யும்பெருமை
சிந்தையில்தி னைந்திடினும் - இன்புற் றிடற்கிடமே
செங்கணர வின்குலம்வ ருந்தஅக வுந்தொனிகொள்
செஞ்சிகிவி ழைந்தபடி - அன்றெக் களிப்புறலே
திண்புவிவ கிர்ந்தநகம் ஒன்றுபுள்வ ரைந்தகொடி
திங்கள்தொறும் அம்பொனவிர் - கம்பத் திடத்தகுமே
தென்றிசையி டங்குகொள் அந்தகன்வி டுங்கொடியர்
சென்றுயிர்க வர்ந்திடுவி - தஞ்சற்றும் அற்றுளதே
சிந்துநுவல் புங்கவன்அ ருந்தமிழ்உ ணர்ந்தபலர்
சிந்துரமு ழங்கலின்மு - ழங்கிக் குதிப்பதுவே
தின்பனவும் உண்பனவும் இன்றியவ ரும்பழுதில்
செந்திருவ மைந்தமரும் - அம்பெற் றிமைத்திடலே
சிங்களக லிங்ககுட(கு) அங்கமுதல் எங்குமுளர்
தெண்டிரைகொ ணர்ந்தளவு - பொன்குப்பை துற்றுதுவே
✓
கம்புநிக ருங்கலம்இ யைந்தகுற மங்கையர்கள்
கங்குல்பக லும்பறைய - றைந்திட் டிசைப்பதுவே
கந்தனிரு செஞ்சரணம் நம்புவது நன்றெனுமெய்
கண்டவரில் விண்டவர்க - ளுஞ்சித் தியற்றுவதே
கஞ்சமுத வுஞ்சதுமு கன்றன்வத னங்கள்தரு
கண்டுறழ்பெ ருஞ்சுருதி - யின்சத்த முற்றியதே
கங்கையணி யுஞ்சடில நம்பர்மொழி கின்றபல
கண்டமுள தந்திரம்வி - ளங்கிப் புகழ்ப்படுமே
கண்கள்மலி யும்பொருவில் அங்கமுறும் இந்திரர்கள்
கம்பமத தந்திமிசை - வந்துற்று மெச்சுவதே
கந்தரமெ னும்படித ருந்தொழில்மு யன்றவர்கள்
கன்றலில்சு கம்பெறவ - ழங்கத் தொடுத்ததுவே
கஞ்சுகம ணிந்தமுலை கொண்டமயி லென்றவிர்சு
கந்தியர்ந டஞ்செயும்அ - ரங்கத் துயர்ச்சியதே
கந்துகம்அ னந்தமும்வெ ருண்டிடம கஞ்செய்பவர்
கண்பொரமுன் வந்ததகர் - ஒன்றிற் கிருக்கை,விணோர்
✓
கொம்புதவு மைந்தர்புரை யுங்கரும விஞ்சையினர்
கொண்டநினை வுஞ்சரதம் - என்கச்செய் பெட்பினதே
குஞ்சரமி கும்பொழில்வ ளந்திகழ்கு றிஞ்சிகமழ்
குங்குமப தம்புனைசி - லம்புத்தொ னிக்கொள்வதே
கொன்றிரையு ணுஞ்சிலர்கு - றுங்குடில்வ ளர்ந்தகுயில்
கும்பிதரு மைந்தர்நிகர் - தொண்டர்க் குயிர்த்துணையே
கொஞ்சமும்இ ரங்கலில்ம னங்கொள்ஒரு வன்பிளவை
குன்றிடமு யன்றஅருள் - பொங்கிக் கிடப்பதுவே
கொந்தவிழ்க டம்புகுர வம்பொரும ரங்கள்பல
கும்பன்முதல் அன்பரென - நின்றிட்ட சுற்றினதே
கொன்றைஅண வுங்கவினு றுங்கழைவ னந்தருமொர்
கொண்டலுற ழுங்கவியை - வஞ்சித் தழைத்ததுவே
கும்பலென வந்துபல்அ னந்தர்சொலி னும்பெருகு
கொள்கொடுது லங்குவது - வென்றித் திருக்கைவைவேல்
குண்டகரெ னுந்தகுவர் தங்களூயிர் உண்கவிடு
குஞ்சரு வுறுங்கடவுள் - குன்றக் குடித்தலமே.