குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு
தண்டபாணி சுவாமிகள்
6. சருவசாதனக்காரன் வகுப்பு7 / 8
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு · தண்டபாணி சுவாமிகள்
6. சருவசாதனக்காரன் வகுப்பு
6தந்தனா தனனதன - தந்தனத் தானன✓
அன்பரா மவர்கருது கின்றசீர் ருருவமுடன்
அங்குபோய் வருசகுண - பாவனைக் காரனும்
அந்தமா தியும்நடுவும் இன்றிநா டரியபல
அண்டகோ ளிகளின்நிறை - ஆகரக் காரனும்
அஞ்சும்ஏ றியபிரமன் விண்டநான் மறைமுடிகள்
அண்டொணா நிலையுதவு - தாரகக் காரனும்
அம்புயா தனைகணவன் உம்பரா தியர்களுடன்
அன்றுகூ றியபெருமை - வாசகக் காரனும்
அந்திவான் மதிநிலவு செஞ்சடா டவிஅமலன்
அங்கணால் உதவும்அதி - மான்மியக் காரனும்
ஐந்துபூ மருவுகழை கொண்டநா ரணியின்முதல்
அங்கமா மெனஒளிரும் - வேல்வலிக் காரனும்
அம்பரா திபன்மகளும் வென்றிவே டுவர்குயிலும்
அன்றில்சேர் பெடையைநிக - ராகுமெய்க் காரனும்
அந்துலா வியசிறுநெல் என்றுவா டியஅமரர்
அஞ்சிடா தமர்பொருத - சேவகக் காரனும்
✓
வன்பராம் அவுணர்குல பங்கம்நா டியதவள
மந்தரா சலமனைய - வாரணக் காரனும்
மங்குல்போல் உருமிஅழல் கொண்டநா ரதன்வெருள
வந்தஆ டதன்முதுகில் - ஏறுமற் காரனும்
வஞ்சமீ றியசமண ருந்த(ள்)ளா தணிகலப
வண்குலா வுறும்நெடிய - கேகயக் காரனும்
வண்டறா இதழிபுனை சிம்புளே அனையதிறல்
மண்டுசே வலையெழுது - கேதனக் காரனும்
மந்தமா ருதம்உலவு குன்றின்மா முனியனைய
மங்களா கரர்உணரும் - ஓர்பொருட் காரனும்
வம்பனால் ஒருகரம்இ ழந்தபோ தினும்நினையும்
மங்கைபால் விரைவில்வரும் - ஆதரக் காரனும்
மண்டலீ கருமிகவ ணங்குகீ ரனைஅளவில்
மைந்தரோ டருளும்நலம் - ஆர்புகழ்க் காரனும்
வந்தியேன் எனும்ஒருவன் முன்புபா லையில்எயின
வண்டனா வருகபட - நாடகக் காரனும்
✓
மின்படம் அணியுமத தந்திஊர் பவன்உறையும்
விண்புகா மலரினொடு - மீள்கிளிக் காரனும்
வென்றிவேல் வழுதியென வந்தநா ளினும்நினையும்
விந்தையா வையும்நடவு - தோள்நிரைக் காரனும்
வெங்கண்வாள் அரவெனஎ திர்ந்தசா ரணமுனிவர்
விண்டவா தறவெகுளும் - வீரியக் காரனும்
விண்டுவோ டவன்உதவும் மைந்தனா கியமதனும்
வெம்பிநா ணுறஇலகு - கோமளக் காரனும்
மிஞ்சுசீ யனையசினம் ஒன்றுசூர் முதல்நுவலும்
மிண்டர்மாய் வுறநொடியில் - மோதுகைக் காரனும்
விம்பம்நே ரிருமகளிர் பங்கில்மே வலின அவர்தம்
வெண்பல்வாள் நகைவிழையும் - வேதனைக் காரனும்
விஞ்சையோ கியரு(ம்)மட மங்கைமார் களும்நனிவி
ரும்புசீர் திகழ்வசிய - மோகனக் காரனும்
விந்துநா தமும்விரவு தண்டையார் கழலிடைவி
ளைந்தசீர் மலையில்விடு - கேவலக் காரனும்
✓
இன்பசா கரநடுஎ ழுந்தபே ரமுதமென
எந்தலோ கரும்அறிய - நீடிசைக் காரனும்
எண்கைவே தியன்விதி,என் அன்பர்பால் வருவதிலை
என்றுமார் தொடும்இணையில் - ஆணவக் காரனும்
இண்டலூ டியைஅனைய நந்திநா யகன்வெருள
என்சொனாய் எனமுனிவு - கூர்அடக் காரனும்
எந்தைநீ யலதுதுணை ஒன்றிலேம் எனமறுகும்
எங்கள்கா ரிய(ம்)முழுவி - சாரணைக் காரனும்
இம்பரார் உயிரிலுயர் செம்பொன்மால் பெருகுதலின்
இந்தவா றுழலவிடு - சோதனைக் காரனும்
எஞ்சுறா விழைவினொடு வந்துபா டுதியெனஇ
யம்பநா ணறுபழைய - வாசனைக் காரனும்
என்று(ம்)மா மதியும்நுழை யுந்தண்வேய் வனநகரி
டங்கொள்வான் எழுதுகவி - மாலிகைக் காரனும்
இந்திரா தியர்பரவு குன்றைமா நகரினிடை
என்று(ம்)மே வியசருவ - சாதனக் காரனே.