மேதினி சுற்றிய சேலையெ னத்தகும்
வேலையும் வற்றிடு - மாறேகியதே
வேள்விம லைக்கரு கானபு னத்துறும்
வேடர்வி ழிச்செயும் - ஓராடலதே
வேசிம யக்குறு வான்வகிர் வெற்றிலை
மீதும்உ ருக்கொள - நாணாததுவே
மேதிந டத்தும்அ கோரப லச்சிமன்
வேகம றப்புகழ் - வார்பால்உறுமே
மேதகு சத்திய சீலர்த மக்குயர்
வீடுமு தற்றரும் - ஞானாகரமே
வீரர்மு தற்பல பூதர்க ளுக்குறும்
வேதனை யைச்சுடும் - வீறார்வதுவே
வீசுத டக்கையில் ஓர்கனி பற்றிய
வேழவ யிற்றிடை - போய்மீள்வதுவே
வேணதி ருப்புகழ் பாடுமொ ருத்தன்நெல்
வேலியி னிற்செயும் - மாபூசையதே