குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு
தண்டபாணி சுவாமிகள்
3. திருவருட்சத்தி வகுப்பு4 / 8
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு · தண்டபாணி சுவாமிகள்
3. திருவருட்சத்தி வகுப்பு
தனதனத் தத்ததன - தனதனத் தத்தனா✓
உளதெனப் பற்றுநரும் இலையெனத் தர்க்கமிடும்
உரைபடித் தெய்ப்பவரும் - இலகவைத் திட்டதே
உலகவுற் பத்திசெயும் அயனெனப் புட்பமிசை
உயர்மொழிச் சத்தியொடு - தினமுறத் தக்கதே
உததியிற் பச்சைமுகில் அனையபொற் புற்றரவொ(டு)
உரகமெத் தைக்கண்நனி - துயிலுறத் தக்கதே
உழையணிக் கைப்பரமன் எனவுருப் பெற்றினையில்
உமையிடத் திற்றிகழ - விடையுகைத் துற்றதே
உருவெனச் செப்புநரும் அருவெனத் தக்கவரும்
உணர்வினுக் கொத்தபடி - மிகஅருச் சிப்பதே
ஒளிமலர்ச் செச்சைசூடி வளர்கடப் பத்தொடையல்
உறுபுயத் திற்பொருவில் - அயிலெனத் துற்றதே
உவகைமுற் றித்தவள இபமெடுக் கக்குளிரும்
உதகபுட் பத்தவிசில் - மதலையிற் புக்கதே
உரியவிற் கைக்குறவர் பரணிடத் திற்குயிலொ(டு)
உறழ்வனப் புச்சிறுமி - யெனவுறக் கற்றதே
✓
களபமெத் தப்புனையும் முலைவனப் புற்றசசி
கணவன்முற் பட்டஅம - ரரைவதைத் தற்றைநாள்
கனகவெற் பிற்கரவு பனவனுக் குச்சிறிது
கருணைவைத் துப்பழைய - படியிரட் சித்ததே
கடலடைத் துப்பரிதி மதிபெயர்த் துத்துருவ
கரமணிச் சக்கரம் - தனைமுறித் துச்சிலோர்
களிபெறப் பற்பலர்தம் வசமறச் செப்பரிய
ககனவட் டத்தைஅரை - நொடியினிற் சுற்றுமே
கவலைவிட் டுக்கொடிய பொறியடக் கச்சிறிது
கருதுநர்க் குச்சிறிய - பதமெனக் கிட்டுமே
கனிதமிழ்ச் சொற்கள்கொடு பனுவல்செப் பிப்பரவு
கவிஞரைச் சுற்றிஅழ - லெனமிகச் சுட்டதோர்
கலியொழித் துப்பதும மகள்இணக் கத்தில்மகிழ்
கருமுகிற் கொத்துபுகழ் - உறமுயற் சிக்குமே
கடுகெனத் தக்கபொருள் தரவுநட் பற்றபல
கயவர்முற் றுட்டர்செயும் - இகல்மிகக் கொட்டுமே
✓
தளமிகுத் துக்கமழும் மலர்முகத் துற்றவிதி
தனைஅதட் டிப்பெரிது - முறையிடக் குட்டுமே
தகுவரைச் செற்றமரர் குலமுவக் கச்செயுமொர்
தழலொளிச் சக்கரம் - தனையரத் திட்டுவாழ்
தடமருப் புக்களிறு பொருகளத் திற்பகைவர்
தமதுமுற் பட்டலறி - விழவுறுத் திட்டதே
சபதமிட் டுக்குதிகொள் அரிமுகற்(கு) அச்சமொடு
தளர்வுறச் சத்தமிடு-மகிமையைப் பெற்றதே
சலதியிற் புக்குவெளி முகடுமுட் டிக்கறுவு
தனிமரத் துக்குருதி - சொரிதரக் குத்துமே
சகுணபத் தித்துறையி னிடைநடத் திப்பொருவில்
தவமுடிக் கத்துணியும் - அவருளத் திச்சையே
சகலர்அற் பக்குணமொர் பொருளெனற் கொப்புகிலர்
சரதசித் தித்திரளி - னதுவிதைக் கொத்ததே
தடிமுரட் டுக்குணமொ டுயிர்வதைத் துட்கொள்பவர்
சமயமொத் தத்தினையும் - ஒருவுமெய்க் கற்பதே
3✓
வளமெனப் பட்டவைகள் முழுதுமுற் றுத்திகழும்
மலைகளுக் குக்குவடு - தொறும்வியப் புய்ப்பதே
வறுமைமுற் செப்பபல பிணியொழித் துத்தினமும்
மனதிலிச் சித்தபடி - பெரிதுதித் திப்பதே
மறியறுத் துக்குருதி அரிசியிட் டுப்பிசையும்
வகைபடித் திட்டபுல - வனும்உயத் தொட்டதே
வளரொளிக் கற்பகமும் நிதிகள்முற் பட்டனவும்
வலியினைக் கக்கொடையை - நிதம்நடப் பித்ததே
வனசமொக் குட்புரையும் முலையினர்க் குட்டளரும்
மகவினுக் குக்கிளியின் - உருவமைத் திட்டதே
மலையவெற் புக்கருகில் நிலவுபொற் புற்றகழை
வனமதிற் பத்தனொடு - பிழைமிகச் சொற்றதே
மறைகளுக் கெட்டரிய செயல்படைத் துச்சமய
வழிகள்கற் பித்தபல - குரவரைத் துய்த்ததே
மயில்வரைச் சுப்பிரம ணியனெழிற் கட்கடையில்
விதிதரப் பெற்றதொரு - திருவருட் சத்தியே.