முருகன் App
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு
தண்டபாணி சுவாமிகள்
2. முருகேசன் ஆடல் வகுப்பு3 / 8
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு · தண்டபாணி சுவாமிகள்

2. முருகேசன் ஆடல் வகுப்பு

2தனனதன தானதன - தனதான தானனா✓
இருடியர்அ னேகர்பர வியபரம னார்நுதலின்
எரிவிழியில் நீடுபொறி - யினமாகி வீழுமே
இமையவரெ லோருமகிழ் வுறவனச வாவிநடு
இளமதலை யாமுருவம் - உடனேகு லாவுமே
இமகிரணன் ஆர்வமிகும் உடுமகளிர் மூவிருவர்
இதயமெலி யாதவர்கள் - மடிதோறும் மேவுமே
இடபமிசை யேறிஅகல் ககனவெளி யூடுவரும்
இருவரிடை நாளுமவர் - உயிர்போல்நி லாவுமே
இகபரமும் வாழவொரு மயில்முதுகில் ஏறியினி(து)
எழுகடலும் ஏழுவிதம் - உறுதீவும் ஏகுமே
எமன்முதலி னோரும்வழி படுதகுவர் சூழவரும்
இபமுகனை மாயமலை - யொடுதூளி காணுமே
இறைவன்மொழி தேறிஒரு சபதம்நுவல் சீயமுகன்
எளியதெனும் ஓர்குலிசம் - அதைமாய வீசுமே
இடிவெருளும் ஓசையொடு வருகொடிய சூரனெனும்
இருள்நசியு மாறுகதிர் - வடிவேலை ஏவுமே
✓
அருவபர மோனிகளும் உருவபர யோகியரும்
அறிவரிய தானபொது - அறுபூதி யீவதே
அரவணிம யேசுரனும் மலயமலை யாதிபனும்
அருணகிரி நாதனிகர் - பெரியோரும் நாடலே
அலகையத னால்மெலியும் அவர்பலரும் ஓர்குகையில்
அடிபரவு கீரனொடு - களிகூர நேருமே
அதிரசமும் மோதகமும் வடையுறு தோசைமுதல்
அனையனவும் வாரிநுகர் - பவன்நாண நீடுமே
அலர்கமல நாண்மலரின் மிசைகுலவும் நான்முகனை
அழுதவற மோதிஒரு - குகையூடு போடுமே
அகிலமுண வாம்ஒருவன், வசமழியும் வானவர்கள்
அகமகிழ வேசமர்செய் - களமீது பேசலே
அழிவில்அம ராபதியின் முதல்வனுறும் வேயுருவம்
அதுதவிர மாமகுடம் - முடிசூடும் நீரதே
அலையுநதி நீர்பருகு முகிலினமெ லாமுலவும்
அசலமொடு சாரலினும் - அகலாது சார்வதே
✓
ஒருகயிலை நாலுபத மொடுதிரிதல் போல்நிலவும்
உருவமத வேழமகள் - அநுராக சீலமே
உழையுநவ வேடர்சிறு குடியில்வளர் வாள்கலப
உடைதழுவு தேர்கருதி - முதியோனும் ஆனதே
உயருமறை நூல்களுணர் கவுணியர்க ளொடொருவன்
உயிரனைய சேயெனவும் - வருமேன்மை தோய்வதே
உறியிலுறு பாலுடையர் கரமருவு பீலியுடன்
ஒளிர்கழுவி லேறிமடி - தரவாது கூறலே
உலகமுழு தாளும்வலி பெறும்வழுதி யாகிஅரன்
உறையுமக மேருஅழ - இடிபோல மோதலே
உரகபட மேயனைய கடிதடமி னாள்சிறுகை
உதவமயில் மீதுநொடி - யிடைபோகி மீளுமே
உரைதவறி ஆசைகொடு மனைவிமக வாதியரொ(டு)
உணமுடுகி னான்உணவு. - கெடுமாறு தேறலே
உருளுமொரு தூண்டியில் - மரணபயம் ஏதும்இல(து)
உறுதியுட னேதலையை - இடுவாளை ஆள்வதே
✓
கருமபர வாதியர்கள் அறிவிலறி யாதநிலை
கருதும்அடி யார்களது - நினைவூடு லாவலே
கனல்வரைகு லாவும்முது நகரிலொரு தூணினிடை
கலபமயி லேறிவரு - வதுகோதில் நீதிசேர்
கரியநெடு மாலனைய அரசொருவன் வாள்விழிகள்
கழியஉடன் வேறுவிழி - பெறுமாறு காணலே
கனிதமிழ்வி னோதமுறு கிளியைமதி யாமலிகழ்
கயவர்களை நூறிஅவர் - குலமீது சீறுமே
கவிகள்பல பாடிஅன லொடுபனலி லேஇடுமொர்
கடையனுடன் ஈயுமொழி - சொலநாணு றாததே
கனவிசன மோடுமலை மிசையுருளும் நாளிலுடல்
கழுகினம்உ ணாதநல - முறநாடி யீகையோர்
கடைகள்தொறும் ஏகவிடு வதுபெரிய பாறையிடை
கவின்மருவும் ஓர்கிணறு - தொடுமாண்பை சேர்வதே
கவுரிதரு பாலன்அறு முககுமரன் ஈடில்பர
கதிதரும யூரைகிரி - முருகேசன் ஆடலே.