முருகன் App
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு
தண்டபாணி சுவாமிகள்
5. பாதாரவிந்த வகுப்பு6 / 8
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வகுப்பு · தண்டபாணி சுவாமிகள்

5. பாதாரவிந்த வகுப்பு

5தானான தந்ததன - தானான தந்தனா✓
ஆநாத விஞ்சைதிகழ் வேதாக மங்கள்மிசை
ஆறாறும் இன்றியது - தானாகி நின்றதே
ஆனேறி அம்பிகைமி னோடேவ ரும்பரமன்
ஆறேறு செஞ்சடில - மீதேக மழ்ந்ததே
ஆகாயம் ஒன்றும்இம வானால்வ ளர்ந்தமகள்
ஆர்தானை அம்பொன்முடி - மீதேயி ருந்ததே
ஆழாழி யின்றலையில் வாழ்மாசு ணன்றன்மிசை
ஆவான்வி ரிஞ்சன்முத - லோர்பேணு கின்றதே
ஆராயும் அங்கியித னூடேஎ ழுந்துருமும்
ஆடேறி அந்தண்உல-கீரேழும் வந்ததே
ஆயாச மின்றிமகிழ் மேலோர்ம னம்புரைவ
தாம்வாவி ஒன்றில்நடு - மேனாள்ம லர்ந்ததே
ஆலால வெம்பணிகள் வாழ்பாத லங்குலைய
ஆடோர்சி கண்டிமுது - கூடேப திந்ததே
ஆவேசம் ஒன்றிமத நீரால்ந னைந்துலவும்
ஆண்வேழம் ஒன்றின்அகல் - காதாடு(உ) தைந்ததே
✓
கானாறு டன்குலவு சீர்சால்கு றிஞ்சியிடை
கார்வேட ரும்பணிய - மாறாதி லங்குமே
காமாயு தம்பொருத தோளால்வி ளைந்ததினை
காவாஇ ருந்தசிறி - யாள்பால் நடந்ததே
காவாளி தந்தமக ளாம்ஆனை மங்கைகுறை
காணாது செங்கைமல - ராலேபி சைந்ததே
கால்வேலை யுண்டமுனி யேபோலும் அன்பர்பலர்
காகாள னுஞ்சொலுட - னேநாடு பண்பதே
காசுக னுஞ்சமய நூலால்ம யங்கியுயிர்
காதாந லந்தருத - யாவால்உ யர்ந்ததே
காயாம ரம்பொருவும் மாலோப வஞ்சரெதிர்
காய்வார் வனைந்தபல - பாமாலை கொண்டதே
காயாச முந்தவள நீறாதி யுங்கொளும
காமோன தந்திரருள் - ஓவாத மைந்ததே
காளாமு கன்பொருவில் வீராக மன்கொடிய
காபாலி யென்பவரும் - ஏசாத பண்டமே
✓
ஊனார்உ டம்(பு)உயிரில் வேறாம்எ னுஞ்சரதம்
ஓராத அன்றுமுத - லாநான்வி ழைந்ததே
ஊழாம்அ யன்கைவிதி பாழாம்வி தஞ்செய்திறல்
ஓவாத தென்றருணை - வாழ்சாரு விண்டதே
ஓகார மென்றதுட னேகூடும் விந்துநடு
ஊடாடி டும்பொருள - தாநூல்ப யின்றதே
ஊறேதும் இன்றியகு ணாதீத முங்குணமும்
ஓயாதெ ழுந்துபிற - ழாதேபி றழ்ந்ததே
ஊர்தோறி றந்தலைகு வேன்ஈன நெஞ்சினிலும்
ஓர்வேளை வந்துவிளை - யாடாம றைந்ததே
ஊனாவ தன்றழையி னாலேவ ணங்கும்எளி
யோர்தாமும் இந்திரனில் - வாழ்வான்மு யன்றதே
ஓடாது வண்டுபயில் கூதாள முங்குரவ
மோடார மும்புனலி - நேர்பூவும் ஒன்றுமே
ஓதாது ணர்ந்தபெரி யோர்காமு றுங்கழல்கொ(டு)
ஊணாகு மென்றவரை - நாடோறும் உண்பதே
✓
மானாமெ னுங்கண்மட மாதேசல் கண்டுருவம்
மாறாடி யுங்கயல்கொ(டு) - ஓர்நாள்வி ரைந்ததே
வாயால்மொ ழிந்தவிதம் நாடாத தொண்டன்மனை
மாவுண்வி ழைந்துமுதி - யோனானு ழைந்ததே
வாளார்க ருங்கண்உமை பாலாஎ னுஞ்சொல்பகர்
வார்போய்வ ரும்பல்வழி - தோறேகு கின்றதே
மாடாடு கொன்றுநுகர் வார் தீம கங்கள்அறு
மாறேமு யன்றுருகு - வார்தேறு பண்பதே
வானாதி ஐந்துவித பூதாக ரங்கள்மகம்
மாயாம லங்களெனும் - வீண்வாதொ ழிந்ததே
மாணார்த டம்பொழில்கொள் சீகாழி யின்கண்ஒரு
மாவேதி யன்றன்மனை - யாள்தோள்அ ணிந்ததே
வாசாக யிங்கரிய மாயேமு யன்றிடினும்
மாதாவில் வந்துசின - வாதாளும் நன்றதே
வாடாத வென்றிமலி சீர்மேவு குன்றைநகர்
வாழ்வான கந்தனிரு - பாதார விந்தமே.