முருகன் App
நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
க. சொக்கன் (சொக்கலிங்கம்)
கறை கழுவும் கந்தப் பெருமான்4 / 8
நல்லூர்க் கந்தன் திருப்புகழ் · க. சொக்கன் (சொக்கலிங்கம்)

கறை கழுவும் கந்தப் பெருமான்

✓
தெளிதமிழி னாலும் மறைகள்பல வாலும்
தெரிவரிய ஞானப் பெருமான்காண்
திகழுமதி யாலும் அறிவுநிதி யாலும்
தெளிவுபெற லாகாப் பெருமான்காண்
கிளியனைய மாதர் ஒருவுவத னாலும்
கெழுமியுற வாடாப் பெருமான்காண்
கிடுகிடென நல்ல துதிகள்பொழி வாலும்
கெடுதிகளை யாத பெருமான்காண்
நளிமலரி னாலும் இனியஅவி யாலும்
நலமருள லாகாப் பெருமான்காண்
நகைமருவி நீசர் எமதுமன நேர்மை
நவையுறுதல் தேரும் பெருமான்காண்
களிமிகுதி யோடே உளமதனை ஈவார்
கருதுவதை ஈயும் பெருமான்காண்
கவினுறுநல் லூரி னிடைமருவி நாளும்
கறைகழுவு கந்தப் பெருமானே!