முருகன் App
நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
க. சொக்கன் (சொக்கலிங்கம்)
நல்லூர்ப் பதிதங்கும் கந்தப் பெருமான்3 / 8
நல்லூர்க் கந்தன் திருப்புகழ் · க. சொக்கன் (சொக்கலிங்கம்)

நல்லூர்ப் பதிதங்கும் கந்தப் பெருமான்

✓
உலகினில் அன்பு நிலைபெறல் ஒன்றே
உயர்விளை என்றும் தகுமென்றே
ஒளிமதி யாளர் பலர்பலர் சொன்னார்
ஒருவரும் இன்று கருதார்காள்
அலைஅலை யாகத் துயரெனும் ஆழி
அடித்தடித் தார்க்கும் நிலைதன்னில்
அடிதடி கொள்ளை கொலையுழி வல்லால்
அமைதியை உலகில் எவர்கண்டார்?
✓
நிலையறு வாழ்வை நிலைபெறச் செய்தல்
நினைத்திட லில்லா மடவோர்க்கு
நிமலனின் மைந்தா! ஒருகணம் உன்றன்
நினைவினை ஈந்தே அருள்வாயே!
தலைமையை வேண்டித் தலைபழு தான
தகைமையி லாளர் தளைநீங்கத்
தலமுயர் நல்லைப் பதியினில் என்றும்
தயவளி கந்தப் பெருமானே.