முருகன் App
நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
க. சொக்கன் (சொக்கலிங்கம்)
காப்பு விநாயகர் துதி1 / 8
நல்லூர்க் கந்தன் திருப்புகழ் · க. சொக்கன் (சொக்கலிங்கம்)

காப்பு விநாயகர் துதி

✓
நித்தனரு ளாலுதித்து நிறைவான
நித்தியத்தை நாடுதற்கு நெறிகாட்டிப்
பத்திசெயும் பேர்களுக்குப் பரஞானம்
பற்றுறுத்துப் பூரணமாய்ப் பதிவித்தெம்
சித்தமதிற் பொற்றவிசிட் டமர்வோனே!
சித்திபுத்தி வல்லபைக்கு மணவாளா!
அத்தன்நல்லைக் கந்தனண்ணா! அருளாளா!
அத்திமுக வித்தகநற் பெருமானே!