முருகன் App
நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
க. சொக்கன் (சொக்கலிங்கம்)
நல்லையை உகந்த கந்தப் பெருமான்6 / 8
நல்லூர்க் கந்தன் திருப்புகழ் · க. சொக்கன் (சொக்கலிங்கம்)

நல்லையை உகந்த கந்தப் பெருமான்

✓
கரையி லாதுல கந்தனி லாசைகள்
கனக்க வாகிட நாள்தோறும் தீமைகள்
கதித்தெ ழுந்தன மாந்தரி லேபலர் கடையோராய்க்
கடுத்த சொற்களும் எந்தவோர் போதிலும்
கணக்கி லாதபொ றாமையும் பொய்களும்
கலக்க அஞ்சுதல் அற்றிடு பேய்களாய்க் கதிகாணார்
✓
இரையெ னச்சிறி யோர்களை நாள்தொறும்
இழித்து மேகொலும் காலர்க ளாகியே
இகந்த னைநர காக்குதல் சாலுமோ? இவராலே
இளைத்த பேர்களும் நல்லவர் தாமுமின்
றிடர்கள் பெற்றுவ ருந்துவ துன்விழிக்
கிலக்க தாகுதல் இல்லையோ சொல்லுவாய் இளையோனே
✓
புரைக ளால்நிறைந் தின்றைய வாழ்வுதான்
பொருள தற்றதாய் மாறிய தாலினிப்
புலமை யாளருக் கிங்கிட மில்லையாம் புகழ்வேலா
புதுமை செய்திடத் தீமையைக் காய்ந்திடப்
புலைமை கொன்றிட வேற்படை கொண்டுநீ
புவியி லேயொரு கால்வர வேண்டுவோம்புலவோனே
✓
வரையி லேகதித் தாடுதல் விட்டுநீ
மண்ணி லேபதம் வைத்துமே வந்துமே
மாய்த்தி டுந்தீமை தீய்த்திடு வாய்ஐயா மயில்வீரா
வனிதை தெய்வவத குஞ்சரி வள்ளியாம்
மங்கை மாரிரு பங்கை உகந்திட
மாட்சி சால்நல்லை நீயுகந் தாய்கந்தப் பெருமானே