முருகன் App
நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
க. சொக்கன் (சொக்கலிங்கம்)
பதிநல்லையினிற் பயிலும் பெருமான்2 / 8
நல்லூர்க் கந்தன் திருப்புகழ் · க. சொக்கன் (சொக்கலிங்கம்)

பதிநல்லையினிற் பயிலும் பெருமான்

✓
அழகு தமிழின் நிலவும் இனிமை
அறிய அருளும் முருகோனே!
அரிய நறிய மணமும் ஒளியும்
அருளும் உலவுந் திருமார்பா!
விழையும் அடியர் உயிரும் உளமும்
விரவி அருளைப் பொழிவோனே
மிகவும் இழிவு மலியும் அசுரர்
வெதிர அயிலை விடுவோனே!
✓
குழையை அளவும் நெடிய விழியள்
குழலின் இனிய மொழியாளைக்
குறவ ரிடையிற் கவர முதிய
கிழவன் உருவில் வருவோனே!
பழையன் எனினும் இளமை நிலவும்
பகர அரிய எழிலோனே!
பரமன் அருளப் பதிநல் லையினிற்
பயிலும் எமது பெருமானே!