முருகன் App
நல்லூர்க் கந்தன் திருப்புகழ்
க. சொக்கன் (சொக்கலிங்கம்)
நச்சும் நகர் நல்லைப் பெருமான்7 / 8
நல்லூர்க் கந்தன் திருப்புகழ் · க. சொக்கன் (சொக்கலிங்கம்)

நச்சும் நகர் நல்லைப் பெருமான்

✓
பிச்சுக் குன்றமொழி நச்சுக் குறுவிழி
அச்சப் படுமிடை அதனாலே
இச்சைப் படவென உச்சக் கலையெழில்
வைச்சுத் தருமவள் வலைவீசி
மச்சத் தசையதை எச்சிற் படவென
நிச்சம் சுவைபல தருவாளைக்
கொச்சைப் படுமொழி மிச்சம் மிகையது
எச்சம் இலையென எடுத்தோதிக்
கச்சிற் றிமிறிடு பச்சைப் பசுமுலைக்
கொச்சம் இலனென மிகநாடிப்
பிச்சைப் பயலிவன் சிச்சி எனப்பலர்
பிச்சுப் பிடுங்கிய பெரும்பாவி
விச்சை இலனென திச்சை தவிர்த்திடு
நச்சும் நகர்நல்லைப் பெருமானே!