முருகன் App
சங்கப் பாடல்களில் முருகன்
பரிபாடல் இருபத்தொன்று9 / 13
சங்கப் பாடல்களில் முருகன்

பரிபாடல் இருபத்தொன்று

நல்லச்சுதனார்
✓
ஊர்ந்ததை, எரிபுரை யோடை யிடையிமைக்குஞ் சென்னிப்
பொருசமங் கடந்த புகழ்சால் வேழம்
தொட்டதை, தைப்பமை சருமத்திற் றாளியை தாமரை
துப்பமை துவர்நீர்த் துறைமறை யழுத்திய
வெரிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த
வரிமலி யரவுரி வள்புகண் டன்ன
புரிமென் பீலிப் போழ்புனை யடையல்
கையதை, கொள்ளாத் தெவ்வர்கொண் மாமுத றடிந்து
புள்ளொடு பெயரிய பொருப்புப்புடை திறந்தவேல்
பூண்டதை, சுருளுடை வள்ளி யிடையிடு பிழைத்த
உருளிணர்க் கடம்பி னொன்றுபடு கமழ்தார்
அமர்ந்ததை, புரையோர் நாவிற் புகழ்நல முற்றி
நிரையே முடுக்கிய நீளிலைப் பாலை
அரைவரை மேகலை யணிநீர்ச் சுழித்
தரைவிசும் புகந்த தண்பரங் குன்றம்
குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும்
வென்றிக் கொடியணி செல்வநிற் றொழுது.
சுடுபொன் ஞெகிழத்து முத்தரிசென் றார்ப்பத்
துடியி னடிபெயர்த்துத் தோளசைத்துத் தூக்கி
அடுநறா மகிழ்தட்ப வாடுவா டகைமையின்
நுனையிலங் கெஃகெனச் சிவந்த நோக்கமொடு
துணையணை கேள்வனைத் துனிப்பவ ணிலையும்
நிழல்காண் மண்டில நோக்கி
அழல்புனை யவிரிழை திருத்துவாள் குறிப்பும்
பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம்
உதிர்த்துப் பின்னுற வூட்டுவாள் விருப்பும்
பல்லூ ழிவையிவை நினைப்பின் வல்லோன்
ஓவத் தெழுதெழில் போலு மாதடிந்
திட்டோய்நின் குன்றின் மிசை.
மிசைபடு சாந்தாற்றி போல வெழிலி
இசைபடு பக்க மிருபாலுங் கோலி
விடுபொறி மஞ்ஞை பெயர்புட னாட
விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப
முரல்குரற் றும்பி யவிழ்மல ரூத
யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப்
பாணி முழவிசை யருவிநீர் ததும்ப
ஒருங்கு பரந்தவை யெல்லா மொலிக்கும்
இரங்கு முரசினான் குன்று.
தாழ்நீ ரிமிழ்சுனை நாப்பட் குளித்தவண்
மீநீர் நிவந்த விறலிழை கேள்வனை
வேய்நீ ரழுந்துதன் கையின் விடுகெனப்
பூநீர்பெய் வட்ட மெறியப் புணைபெறா
தருநிலை நீரி னவளுயர் கண்டு
கொழுநன் மகிழ்தூங்கிக் கொய்பூம் புனல்வீழ்ந்து
தழுவுந் தகைவகைத்துத் தண்பரங் குன்று.
வண்டார் பிறங்கன் மைந்தர் நீவிய
தண்கமழ் சாந்தந் தைஇய வளியும்
கயல்புரை கண்ணியர் கமழ்குக ளுதிர்த்த
புயல்புரை கதுப்பக முளரிய வளியும்
உருளிணர்க் கடம்பி னெடுவேட் கெடுத்த
முருகு கமழ்புகை நுழைந்த வளியும்
அசும்பு மருவி யருவிடர்ப் பரந்த
பசும்பூட் சேஎய்நின் குன்றநன் குடைத்து.
கண்ணொளிர் திகழட ரிடுசுடர் படர்கொடி மின்னுப்போல்
ஒண்ணகை தகைவகை நெறிபெற விடையிடை யிழைத்தி யாத்த
செண்ணிகைக் கோதை கதுப்போ டியல
மணிமரு டேண்மகிழ் தட்ப வொல்கிப்
பிணிநெகிழ்பு பைந்துகி னோக்கஞ் சிவப்புறப்
பூங்கொடி போல நுடங்குவா ளாங்குத்தன்
சீர்தகு கேள்வ னுருட்டுந் துடிச்சீராற்
கோடணிந்த முத்தார மொல்க வொசிபவளேர்
ஆடை யசைய வணியசையத் தானசையும்
வாடை யுளர்கொம்பர் போன்ம்.
வாளி புரள்பவை போலுந் துடிச்சீர்க்குத்
தோளும் பெயர்பவள் கண்.
மாறம ரட்டவை மறவேல் பெயர்ப்பவை
ஆறிரு தோளவை யறுமுகம் விரித்தவை
நன்றம ராயமோ டொருங்குநின் னடியுறை
இன்றுபோ லியை கெனப் பரவுதும்
ஒன்றார்த் தேய்த்த செல்வநிற் றொழுதே.
இசையமைத்தவர்: கண்ணகனார்.
பண்: காந்தாரம்.