சங்கப் பாடல்களில் முருகன்
பரிபாடல் ஒன்பது4 / 13
சங்கப் பாடல்களில் முருகன்
பரிபாடல் ஒன்பது
குன்றம்பூதனார்
✓
இசையமைத்தவர்: மருத்துவன் நல்லச்சுதனார்.பண்: பாலையாழ்.
இருநிலந் துளங்காமை வடவயி னிவந்தோங்கி
அருநிலை யுயர்தெய்வத் தணங்குசா றலைகாக்கும்
உருமுச்சூழ் சேட்சிமை யுயர்ந்தவ ருடம்பட
எரிமலர்த் தாமரை யிறை வீழ்த்த பெருவாரி
விரிசடைப் பொறையுழ்த்து விழுநிகர் மலரேயப்பத்
தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய்நீ
மையிருநூற் றிமையுண்கண் மான்மறிதோண் மணந்தஞான்
றையிருநூற்று மெய்ந்நயனத் தவன்மகண் மலருண்கண்
மணிமழை தலைஇயென மாவேனில் காரேற்றுத்
தணிமழை தலையின்று தண்பரங் குன்று.
நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது
காதற் காமங் காமத்துச் சிறந்தது.
விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தலிற் சிறந்தது கற்பே யதுதான்
இரத்தலு மீதலு மிவையுள் ளீடாப்
பரத்தையுள் ளதுவே பண்புறு கழறல்
தோள்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற
நாளணிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே
கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை
சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுவே, அதனால்,
அகற லறியா வணியிழை நல்லார்
இகறலைக் கொண்டு துனிக்குந் தவறிலரித்
தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலார்
கொள்ளாரிக் குன்று பயன்
ஊழாரத் தோய் கரை நூக்கிப் புனறந்த
காழாரத் தம்புகை சுற்றிய தார்மார்பிற்
கேழாரம் பொற்ப வருவானைத் தொழாஅ
வாழிய மாயாநின் றவறிலை யெம்போலும்
கேழிலார் மாணல முண்கோ திருவுடையர்
மென்றோண்மே லல்கி நல்கலு மின்று
வையையிற் றெய்யா மகளிர் திறமினிப்
பெய்ய வுழக்கு மழைக்காமற் றைய
கரையாவெந் நோக்கத்தாற் கைகட்டிப் பெண்டிண்
இகலி னிகந்தாளை யவ்வே டலைக்கண்ணி
திருந்தடி தோயத் திறைகொடுப் பானை
வருந்த லெனவவற்கு மார்பளிப் பாளைக்
குறுகலென் றொள்ளிழை கோதைகோ லாக
இறுகிறுக யாத்துப் புடைப்ப
ஒருவர் மயிலொருவ ரொண் மயிலோ டேல
இருவர் வான்கிளி யேற்பின் மழலை
செறிகொண்டை மேல்வண்டு சென்றுபாய்ந் தன்றே
வெறிகொண்டான் குன்றத்து வண்டு.
தார்தார் பிணக்குவார் கண்ணியோச்சித் தடுமாறுவார்
மார்பணி கொங்கைவார் மத்திகையாப் புடைப்பார்
கோதை வரிப்பந்து கொண்டெறிவார்
பேதை மடநோக்கம் பிறிதாக வூத
நுடங்கு நொசிநுசுப்பார் நூழி றலைக்கொள்ளக்
கயம்படு கமழ்சென்னிக் களிற்றியல்கைம் மாறுவார்
வயம்படு பரிப்புரவி மார்க்கம் வருவார்
தேரணி யணிகயிறு தெரிபு வருவார்
வரிசிலை வளைய மார்புற வாங்குவார்
வாளி வாளிக ணிலைபெற மறலுவார்
தோள்வளை யாழி சுழற்றுவார்
மென்சீர் மயிலிய லவர்.
வாண்மிகு வயமொய்ம்பின்
வரையகலத்தவனை வானவன்மகள்
மாணெழின் மலருண்கண்.
மடமொழியவ ருடன்சுற்றிக்
கடிசுனையுட் குளித்தாடுநரும்
அறையணிந்த வருஞ்சுனையான்
நறவுண் வண்டாய் நரம்புளர்நரும்
சிகைமயிலாய்த் தொகைவிரித்தாடுநரும்
கோகுலமாய்க் கூவுநரும்
ஆகுல மாகுநரும்
குறிஞ்சிக் குன்றவர் மறங்கெழு வள்ளிதமர்
வித்தகத் தும்பை விளைத்தலான் வென்வேலாற்
கொத்தன்று தண்பரங் குன்று.
கடுஞ்சூர் மாமுத றடிந்துறுத்தவேல்
அடும்போ ராளநின் குன்றின்மிசை
ஆட னவின்றோ ரவர்போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்
வல்லாரை வல்லார் செறுப்பவும்
அல்லாரை யல்லார் செறுப்பவு மோர்சொல்லாய்
செம்மைப் புதுப்புனற்
றடாக மேற்ற தண்சுனைப் பாங்கர்ப்
படாகை நின்றன்று
மேல வெஃகினவை
வென்றுயர்த்தகொடி விறல்சான்றவை
கற்பிணை நெறியு டற்பிணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர!
வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத்தலை நினையா
நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை
பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே.