முருகன் App
சங்கப் பாடல்களில் முருகன்
பரிபாடல் பத்தொன்பது8 / 13
சங்கப் பாடல்களில் முருகன்

பரிபாடல் பத்தொன்பது

நப்பண்ணனார்
✓
நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து
புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்
தருமுனி மரபி னான்றவர் நுகர்ச்சிமன்
இருநிலத் தோரு மியைகென வீத்தநின்
தண்பரங் குன்றத் தியலணி நின்மருங்கு
சாறுகொ டுறக்கத் தவளொடு
மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை
புலத்தினும் போரினும் போர்தோலாக கூடற்
கலப்போ டியைந்த விரவுத்தீ ரெல்லை
அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார்
சிறந்தோ ருலகம் படருநர் போல
உரிமாண் புனைகல மொண்டுகி றாங்கிப்
புரிமாண் புரவியர் போக்கமை தேரர்
தெரிமலர்த் தாரர் தெருவிருள் சீப்பநின்
குன்றொடு கூட லிடையெல்லா மொன்றுபு
நேர்பு நிறைபெய் திருநிலம் பூட்டிய
தார்போலு மாலைத் தலைநிறையாற் றண்மணல்
ஆர்வேலை யாத்திரைசெல் யாறு.
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
புடைவரு சூழல் புலமாண் வழுதி
மடமயி லோரு மனையவ ரோடும்
கடனறி காரியக் கண்ணவ ரோடுநின்
சூருறை குன்றிற் றடவரை யேறிமேற்
பாடு வலந்திரி பண்பிற் பழமதிச்
சூடி யசையுஞ் சுவன்மிசைத் தானையிற்
பாடிய நாவிற் பரந்த வுவகையின்
நாடு நகரு மடைய வடைந்தனைத்தே
படுமணி யானை நெடியாய்நீ மேய
கடிநகர் சூழ்நுவலுங் கால்.
தும்பி தொடர்கதுப்ப தும்பி தொடராட்டி
வம்பணி பூங்கயிற்று வாங்கி மரனசைப்பார்
வண்டார்ப் புரவி வழிநீங்க வாங்குவார்
திண்டேர் வழியிற் செலநிறுப்பார் கண்டக்
கரும்பு கவழ மடுப்பார் நிரந்து
பரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே
குருநெறி வேலோய்நின் குன்றக்கீழ் நின்ற
இடைநிலம் யாமேத்து மாறு.
குரங்கருந்து பண்ணியங் கொடுப்போரும்
கரும்பு கருமுகக் கணக்களிப் போரும்
தெய்வப் பிரமஞ் செய்கு வோரும்
கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரு
மியாழி னிளிகுரல் சமங்கொள் வோரும்
வேள்வியி னழகியல் விளம்பு வோரும்
கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப
ஊழுற முரசி னொலிசெய் வோரும்
என்றூ ழுறவரு மிருசுடர் நேமி
ஒன்றிய சுடர்நிலை யுள்படு வோரும்
இரதி காம னிவளிவ னெனாஅ
விரகியர் வினவ வினாவுறுப் போரும்
இந்திரன் பூசை யிவளக லிகையிவன்
சென்ற கவுதமன் சினனுறக் கல்லுரு
ஒன்றிய படியிதென் றுரைசெய் வோரும்
இன்ன பலபல வெழுத்துநிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவுஞ் சுட்டறி வுறுத்தவும்
நேர்வரை விரியறை வியலிடத் திழைக்கச்
சோபன நிலையது துணிபரங் குன்றத்து
மாஅன் மருகன் மாட மருங்கு.
பிறந்த தமரிற் பெயர்ந்தொரு பேதை
பிறங்க லிடையிடைப் புக்குப் பிறழ்ந்தியான்
வந்த நெறியு மறந்தேன் சிறந்தவர்
ஏஎ யோஒ வெனவிளி யேற்பிக்க
ஏஎ யோஒவென் றேலா வவ்விலி
அவ்விசை முழையேற் றழைப்ப வழைத்துழிச்
செல்குவ ளாங்குத் தமர்க்கா ணாமை
மீட்சியுங் கூஉக்கூஉ மேவு மடமைத்தே
வாழ்த்துவப்பான் குன்றின் வகை.
நனிநுனி நயவரு சாய்ப்பி னாறிணர்ச்
சினைபோழ் பல்லவந் தீஞ்சுனை யுதிர்ப்ப
உதிர்த்த சுனையி னெடுத்த தலைய
அலர்முகிழுற வவைகிடப்பத்
தெரிமலர் நனையுறுவ
ஐந்தலை யவிர்பொறி யரவ மூத்த
மைந்த னருகொன்று மற்றிளம் பார்ப்பென
வாங்கின மகளிர் மருளப் பாங்கர்
பசும்பிடி யிளமுகிழ் நெகிழ்ந்தவா யாம்பல்
கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள்
எருவை நறுந்தோ டெரியிணர் வேங்கை
உருவமிகு தோன்றி யூழிணர் நறவம்
பருவமில் கோங்கம் பகைமல ரிலவம்
நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க
மணந்தவை போல வரைமலை யெல்லாம்
நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும்
விடியல் வியல்வானம் போலப் பொலியும்
நெடியாய்நின் குன்றின் மிசை.
நினயானைச் சென்னி நிறங்குங்கு மத்தாற்
புனையாய்பு நீரூட்டிப் புனைகவரி சார்த்தாப்
பொற்பவழப் பூங்காம்பிற் பொற்குடை யேற்றி
மலிவுடை யுள்ளத்தான் வந்துசெய் வேள்வியுட்
பன்மண மன்னு பின்னிருங் கூந்தலர்
கன்னிமை கனிந்த காலத் தார்நின்
கொடியேற்று வாரணங் கொள்கவழ மிச்சில்
மறுவற்ற மைந்தர்தோ ளெய்தார் மணந்தார்
முறுவற் றலையளி யெய்தார்நின் குன்றம்
குறுகிச் சிறப்புணாக் கால்.
குறப்பிணாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச்
சிறப்புணாக் கேட்டி செவி.
உடையு மொலியலுஞ் செய்யைமற் றாங்கே
படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்
உருவு முருவத்தீ யொத்தி முகனும்
விரிகதிர் முற்றா விரிசுட ரொத்தி
எவ்வத் தொவ்வா மாமுத றடிந்து
தெவ்வுக் குன்றத்துத் திருந்துவே லழுத்தி
அவ்வரை யுடைத்தோய்நீ யிவ்வரை மருங்கிற்
கடம்பம ரணிநிலை பகர்ந்தேம்
உடங்கம ராயமொ டேத்தினந் தொழுதே.
இசையமைத்தவர்: மருத்துவன் நல்லச்சுதனார்.
பண்: காந்தாரம்.