முருகன் App
சங்கப் பாடல்களில் முருகன்
பரிபாடல் பதினெட்டு7 / 13
சங்கப் பாடல்களில் முருகன்

பரிபாடல் பதினெட்டு

குன்றம்பூதனார்
✓
போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தபக்
காரெதிர்ந் தேற்ற கமஞ்சு லெழிலிபோல்
நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச்
சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்நின்
சீர்நிரந் தேந்திய குன்றோடு நேர்நிரந்
தேறுமா றேற்குமிக் குன்று.
ஒள்ளொளி மணிப்பொறி யான்மஞ்ஞை நோக்கித்தன்
உள்ளத்து நினைப்பானைக் கண்டன டிருநுதல்
உள்ளிய துணர்ந்தேனஃ துரையினி நீயெம்மை
எள்ளுநன் மறைத்தலோம் பென்பாளைப் பெயர்த்தவன்
காதலாய் நின்னியல் களவெண்ணிக் களிமகிழ்
பேதுற்ற விதனைக்கண் டியானோக்க நீயெம்மை
ஏதிலா நோக்குதி யென்றாங் குணர்ப்பித்தல்
ஆய்தேரான் குன்ற வியல்பு.
ஐவளம் பூத்த வணிதிகழ் குன்றின்மேல்
மைவளம் பூத்த மலரேர் மழைக்கண்ணார்
கைவளம்பூத்த வடுவொடு காணாய்நீ
மொய் வளம் பூத்த முயக்கம்யாங் கைப்படுத்தேம்
மெய்வளம் பூத்த விழைதகு பொன்னணி
நைவளம் பூத்த நரம்பியையீர்ப் பொய்வளம்
பூத்தன பாணாநின் பாட்டு.
தண்டளிர் தருப்படுத் தெடுத்துரைஇ
மங்குன் மழைமுழங்கிய விறல்வரையாற்
கண்பொருபு சுடர்ந்தடர்ந்திடந்
திருள்போழுங் கொடிமின்னால்
வெண்சுடர் வேல்வேள் விரைமயின்மேன் ஞாயிறுநின்
ஒண்சுட ரோடைக் களிறேய்க்கு நின்குன்றத்
தெழுதெழி லம்பலங் காமவே ளம்பின்
தொழில்வீற் றிருந்த நகர்.
ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி
சூர்ததும்பு வரைய காவாற்
கார்ததும்பு நீர்ததும்புவன சுனை
ஏர்ததும்புவன பூவணி செறிவு
போர்தோற்றுக் கட்டுண்டார் கைபோல்வ கார்தோற்றும்
காந்தள் செறிந்த கவின்.
கவின்முகை கட்டவிழ்ப்ப தும்பிகட் டியாழின்
புரிநெகிழ்ப்பார் போன்றன கை.
அச்சிரக் காலார்த் தணிமழை கோலின்றே
வச்சிரத் தான்வான வில்லு.
வில்லுச்சொரி பகழியின் மென்மலர் தாயின
வல்லுப்போர் வல்லாய் மலைமேன் மரம்
வட்டுருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டுச்
சீர்ததும்பு மரவ முடன்சிறந்து
போர்ததும்பு மரவம் போலக்
கருவி யார்ப்பக் கருவிநின்றன குன்றம்
அருவி யார்ப்பமுத் தணிந்தன வரை
குருவி யார்ப்பக் குரல்குவிந்தன தினை
எருவை கோப்ப வெழிலணி திருவில்
வானி லணித்த வரியுதும் பன்மலராற்
கூனி வளைத்த சுனை.
புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து
சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி
எரியுரு ககிலோ டாரமுங் கமழும்
செருவேற் றானைச் செல்வநின் னடியுறை
உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப்
பிரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே.
இசையமைத்தவர்: நல்லச்சுதனார்
பண்: காந்தாரம்