முருகன் App
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி
பாவலர் பேகன்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்6 / 8
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி · பாவலர் பேகன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

51தேனினைச் சொல்லில் வைத்துத்✓
தேனினைச் சொல்லில் வைத்துத்
தினைப்புனம் காத்த செல்வி!
வானினை வளைத்த நெற்றி!
மயிலினை ஒத்த சாயல்
கானிடை அணங்காம் வள்ளி
கருத்தினுட் புகுந்த எந்தாய்!
கோனென வாழ எற்குக்
கொடுத்தருள் நினது சக்தி!
52சக்திவேல் கழல்கள் தம்மை✓
சக்திவேல் கழல்கள் தம்மை
தம்சிரம் வைத்த சான்றோர்
பக்தியால் பெறுவர் பாக்கியம்!
பலன்திகழ் உடல்நற் பாங்கும்!
யுக்தியால் உள்ளத் திண்மை
உரைநலம் பெறுவீர்!எற்கு
முக்தியை முதல்வா தாராய்!
முழுமுதற் கடவுள் போற்றி!
53கனவினில் வந்தான் கந்தன்!✓
கனவினில் வந்தான் கந்தன்!
கண்களும் நிறைந்த நீரால்
எனதரும் குருவின் ஏற்ற
எழில்மிகும் உருவில் வந்தான்!
நனவினில் என்னை நாடும்
நாளதை நவில்க எற்கு!
புனல்மலி ஏர கத்தாய்
புகழ்புரி முருக வேளே!
54ஏரகத் துறையும் ஈசன்✓
ஏரகத் துறையும் ஈசன்
இணையடி சென்னி வைத்தோம்
பாரினில் எம்மைக் காக்கும்
பாரமும் அவனுக் காமே!
ஊரெலாம் எதிர்த்திட் டாலும்
ஒன்றுக்கும் அஞ்ச மாட்டோம்!
தேருக எனது நெஞ்சே
செயமுண்டு முருக னுண்டால்!
55ஆலிலை மேல்ப டுத்த✓
ஆலிலை மேல்ப டுத்த
அரியவன் மருக! பட்டு
நூலிழை போலி ளைத்த
நுசுப்புடை வள்ளி கள்வ!
பாலிடை நெய்போ லென்றன்
பாவிடை உறையும் செல்வ!
வேலியாய் எம்மைக் காப்பாய்
வேலவ ஏரு ரானே!
56ஏரகத் திருந்தே இந்த✓
ஏரகத் திருந்தே இந்த
எழிலுல கெல்லாம் ஆளும்
சீர்மிகு தலைவா! நின்றன்
திருவடி கோடி போற்றி!
பேறெனக் கருள்க நன்கு!
பிறர்மெச்ச வாழச் செய்வாய்!
தாரணி மார்பா! நின்றாள்
தழுவினேன் கடைக்கண் பாராய்:
57ஆய்வது செய்யின் பார்மேல்✓
ஆய்வது செய்யின் பார்மேல்
ஆருளார் தெய்வம் உன்போல்!
மாய்வது செய்யார் மாந்தர்
மனத்தகத் துன்னை வைத்தால்!
காய்வது செய்யும் மாற்றார்
கருத்தினைத் தேய்க்கும் கந்தா!
பாய்வது கவிதை வெள்ளம்
பருகிட ஓடி வாவா!
58வானவர் துயரம் தீர்த்த✓
வானவர் துயரம் தீர்த்த
வள்ளலே என்றன் நெஞ்சில்
மோனமாய்க் குடியி ருக்கும்
முதல்வனே! என்றன் பாடல்
கானத்தில் (இ)லயித்து நிற்கும்
கருணையங் கடலே! என்றன்
ஈனமாம் பிறவி போக்க
எனக்கருள் முருகன் வாழ்க:
59கருத்தினில் கந்தா நின்றன்✓
கருத்தினில் கந்தா நின்றன்
கழலலால் வேறே காணாப்
பொருத்தமாம் பொருளைத் தாராய்!
புகழெலாம் உனக்கே: யாரும்
வருத்திடா வாழ்வு வேண்டும்
வகைவகைச் செல்வம் வேண்டும்!
திருத்தணி வள்ளால்! எற்குச்
சிறந்தநற் பரிசில் ஈவாய்!
60பரிசில்கள் ஈவாய் பாண்டிப்✓
பரிசில்கள் ஈவாய் பாண்டிப்
பரமனே பரவெ ளிக்கண்
துரிசினைக் கடந்த சோதி!
துரியத்தை வென்ற பாட்டு!
கருதிநான் ஒன்று கேட்டால்
கருணைசெய் பரிதி கோடி
சொரிதரும் வெள்ளச் சோதி!
துதித்தனன் நின்க ழல்கள்!
61நின்கழல் என்சென்னி சூடினேன்✓
நின்கழல் என்சென்னி சூடினேன் மகுடமென
நீடூழி வாழ்க நின்றாள்
என்குரு வாகிஎனை இரவுபகல் காத்தருள்
எனதுகுல தெய்வம் போற்றி
பொன்பொருட் காகுயான் புரிகுவன்
கொல்லோசொல்
புகழல்ல காரி யங்கள்?
என்குறை நீக்கியருள் இல்லாமை ஓட்டியருள்
ஏரகத்து வள்ளல் வேலா!
62வேலவ விண்ணோர்கள் போற்றியே✓
வேலவ விண்ணோர்கள் போற்றியே விழுங்கிமகிழ்
விழுப்பொருளே! ஞானத் தேனே!
கோலா கலப்பிரியாகுரத்திபின் சென்றவா!
கூற்றையும் எதிர்க்கும் ஆற்றல்
சீலமுடன் ஞாலமதில் மேலதென என்றனுக்குச்
சேர்த்தவா! ஏர கத்தின்
பாலக! பரமனுக் கருள்புரிந்த பண்டித!
பாண்டியன்நோய் தீர்ப்பாய் ஐயா!
63ஐயாற் றரசர் அரவணைக்கும்✓
ஐயாற் றரசர் அரவணைக்கும் ஆறுமுக!
அடியேன்நற் குருவாய் வந்து!
மெய்யாய் விளங்கும் விழுப்பொருளே! வேதாந்தப்
பெருவெளியே! வெளியின் உள்ளே
ஐயமற ஓங்கார மாகியே உலகமெல்லாம்
பாலிக்கும் அருள்வி லாச!
உய்யும் வழிஎனக் குரைத்தருள் உன்கழல்
ஒருநாளும் மறவேன் அப்பா!
64அப்பாஎன் றுனையழைத்தேன் ஆறுமுகா✓
அப்பாஎன் றுனையழைத்தேன் ஆறுமுகா ஓர்கண்ணால்
அடியேனைக் கடைக்கண் பாராய்!
தப்பாதுன் தீங்கழலே சரணமெனக் கொண்டதலால்
சண்முகனே அறியேன் வேறே!
முப்பாலை வடித்தெடுத்து முருகஉன் சன்னிதியில்
முன்வைத்தேன் மனமு வந்தே!
இப்பால்இப்பா வேற்றே எனதாவல் தீர்த்துவைப்பாய்
ஏரகத்தென் குருவே வேலா!
65ஆவியிலே நிறைந்துள்ள ஐயனே!✓
ஆவியிலே நிறைந்துள்ள ஐயனே! அடியேனை
ஆட்கொண்ட ஞான குருவே
பாவியேன் படுதுயரம் பார்க்கிலையோ நிதம்நிதம்
பாவியற்றிப் பகரு கின்றேன்!
தூவியே மலர்கொண்டு தொழுதனன் ஆசையொடு
தும்பிக்கை தழுவும் இளவால்!
தேவிபரா சக்திஎன் கனவிலே வந்தென்பால்
தேவைநல் லமுதம் என்றாள்!
66நல்லமுதம் தேவையென நவின்றதிரு✓
நல்லமுதம் தேவையென நவின்றதிரு நாயகி
நயந்துமகிழ் முருக வேளே!
சொல்லமுதம் தினமும்உன் திருமுன்னே படைக்கின்ற
சொல்லுநன் முறையிற் றானோ
வெல்லற் கரியவள் சொல்லினள் சொன்னதில்
விளக்கத்தை அருள்க வேலா!
வல்லமை பெற்றியான் வாழ்வாங்கு வாழ்ந்திட
வழிசொல்லும் ஏரு ரானே!
67வழிசொல்லும் ஏருராய் வண்டமிழ்க்✓
வழிசொல்லும் ஏருராய் வண்டமிழ்க் கருள்புரியும்
வள்ளாலுன் திருவைக் கண்டேன்
விழிசொல்லும் ஆனந்தப் பெருக்கினை மிக்கொளியால்
மேன்மையுறத் தடையாய் நின்ற
பழிசொல்லும் வழியெல்லாம் தடுத்தென்னை ஆட்கொண்டு
பாராட்டும் தாயின் மேலோய்!
பொழிசொல்லும் கருணையாய்! புண்ணியா நின்னடி
பொழுதெல்லாம் சென்னி வைத்தேன்!
68சென்னியில் உன்கழல் சேர்த்தலும்✓
சென்னியில் உன்கழல் சேர்த்தலும் என்னுள்ளம்
செம்மாந்து நிற்கு தையா!
பன்னியதைப் பாரோர்கள் புரிகின்ற வழியினிலே
பகன்றிட ஒட்டா தையா!
புண்ணியம் அடியேன் பலகோடி யுகமாகப்
புரிந்திட்ட பாக்கி யத்தால்
பன்னிருகை என்னப்பன் பாலிக்கும் பாங்கிதுவோ!
பதவிஇது பெரிதே யம்மா!
69அம்மா எனக்கு நீ!அப்பா✓
அம்மா எனக்கு நீ!அப்பா எனக்குநீ!
அழகிய மனைவி நீயே!
இம்மா உலகில் எனக்குற்ற செல்வம்நீ!
என்குழந்தைச் செல்வம் நீயே!
வெம்மாயை வெல்லும் திறம்நல்கும் வேல்நீ!
வேதமும் நாதாந் தம்நீ!
பெம்மான்நீ! பேரின்பம் நல்கின்ற அமுதுநீ!
பிஞ்ஞகன் பெற்ற வேளே!
70பிஞ்ஞகன் பெற்ற பெருவாழ்வே!✓
பிஞ்ஞகன் பெற்ற பெருவாழ்வே! சீரடியேன்
பிறவிப் பிணிம ருந்தே!
மெஞ்ஞானச் சூரியனே! மேன்மைக் கிலக்கணமே!
மேதினியில் தீயோ ருக்கும்
அஞ்சாமல் வாழயாம் திண்மை அருள்குருவே
ஆபத்துக் குதவும் நண்பா!
மஞ்சுலா ஏரகத்து மாமணியே! வள்ளிஎன்ற
மரகதம் பொதித்த பொன்னே!
71பொன்னும்நீ மணியும்நீ பொருளும்✓
பொன்னும்நீ மணியும்நீ பொருளும் நீயே!
பூமிதனில் எனக்குற்ற போகம் நீயே!
கண்ணும்நீ ஒளியும்நீ காட்சி யும்நீ!
கைகள்நீ கால்கள்நீ கரணம் நீயே!
எண்ணும்நீ எழுத்தும்நீ! என்றன் நெஞ்சில்
எழுகின்ற இன்றமிழின் வேட்கை நீயே!
மண்ணும்நீ வானும்நீ! வாழ்வாங் கிங்கே
வாழஎன வைக்கின்ற வள்ளல் நீயே!
72நீயே எனக்குவழி காட்டிஅருள்✓
நீயே எனக்குவழி காட்டிஅருள் செய்வாய்
நித்தநித்தம் என்சித்தம் தடுமா றுங்கால்
சேயென்றன் கண்திறந்து சிறந்த பாதை
தெளிவிக்கும் திறம்மிகுந்த தந்தை யொப்பாய்
பேயான என்னாசைப் பித்து நெஞ்சுள்
பிரபுநீ ஒளிமயமாய் இருப்ப தாலே
நாயேனும் உய்ந்திடுவேன்! சாக மாட்டேன்
நான்மறையின் உட்பொருளே கந்த வேளே!
73கந்தவேள் கருணைவேள் காம✓
கந்தவேள் கருணைவேள் காம வேளைக்
கண்டித்த முக்கண்ணர் கண்ட நல்வேள்!
சொந்தவேள் என்றனுக்குத் துணையாம் நல்வேள்
தூயதண் டமிழுக்கு மனமி ரங்கி
சிந்தைமிக மகிழும்வேள் செகத்தில் என்னைத்
தேடியே ஆட்கொண்ட சிறந்த ஓர்வேள்!
மந்தமா ருதம்வீசும் ஏர கத்தில்
மணிமுடிவைத் துலகாளும் முருக வேளே!
74முருகவேள் எனவென்றன் மனமு✓
முருகவேள் எனவென்றன் மனமு வந்து
மொழிந்திடவே மோனநிலை கூடு தையா!
திருவெல்லாம் கிடைத்தியான் செகத்தின் மீதில்
செயக்கொடி நாட்டிடுவேன்! செந்த மிழ்க்குப்
பருவரல் வாராமல் பாது காப்பேன்!
பாண்டியன்யான் பலகாவி யங்கள் சொல்வேன்!
பெருகுபுனல் ஏரகத்தின் ஈசன் தந்த
பேரானந் தக்கடலில் குளிக்க லானேன்!
75கடல்தனில் குளிப்பதில் காயந்✓
கடல்தனில் குளிப்பதில் காயந் தன்னைக்
கெளவிய நோயனைத்தும் நீங்கும்! ஞானக்
கடல்தனில் மூழ்கிடக் கந்தா நின்றன்
கருணையாம் பேரமுதம் கிட்டும்! விண்ணார்
தடமதில்சூழ் திருஏர கத்து ரையே
தந்தைக்குக் குருவான சக்தி பாலா!
கடையேனுக் கும்வாழ்வு தந்த வள்ளால்
கமலமலர் நின்பாதம் மறப்பேன் கொல்லோ?
76மறப்பதிலேன் மணிவண்ணன் மருகா✓
மறப்பதிலேன் மணிவண்ணன் மருகா நினறன்
மாறாத பேரருளை! அவச ரத்தில்
சிறுதுவறு செய்தியான் பணியாற் றுங்கால்
செய்தபிழை தனைஅரணாய் மாற்றிக் காட்டி
புறமிருந்தும் உள்ளிருந்தும் காக்கின் றாயால்!
புண்ணியனே என்னகைம் மாறு செய்கேன்!
இறப்பறியேன் இரப்பறியேன் எந்தாய் நின்றாள்
துறப்பறியேன் ஏரகத்துத் துரையே வாழ்க!
77துரைவாழ்க ஏரகத்தி லிருந்தே✓
துரைவாழ்க ஏரகத்தி லிருந்தே இந்தச்
நற்புவனம் அத்துணையும் ஆளும் சீமான்!
நரைதிரைமூப் பில்லாமல் நான்வா ழற்கு
நல்லவழி சொல்லுகுரு நாதன் வாழ்க!
பிறைமுடியில் கொண்டவன் பெற்ற பிள்ளை!
பிரமனுக்கு மந்திரத்தைச் சொன்ன தாத்தா
குறைவறும்என் நெஞ்சகத்துக் கோயில் கொண்ட
குகன்எளிமை வியப்பினிலும் வியப்பே யம்மா!
78அம்மம்மா ஆறுமுகக் கடவுள்✓
அம்மம்மா ஆறுமுகக் கடவுள் என்னை
ஆட்கொண்ட பேரருளை என்ன வென்பேன்
சும்மாயான் திரிந்துமிகச் சுழன்று வாழ்ந்தேன்
சுப்பிரம ணியன்என்னை அழைத்தே மேலாய்
இம்மாநி லம்வியக்க எழுதச் சொன்னான்
எழுதியதும் மந்திரமென் ற்றிந்தேன் இல்லை
பெம்மானின் பெருமைஎல்லாம் சொற்க டங்கா
பிழைபுரிந்த சேய்காக்கும் தாயின் மேலான்
79தாயினும் மேலானான்! தந்தை✓
தாயினும் மேலானான்! தந்தை மிக்கான்!
தண்ணளியில் தனக்குவமை இல்லா வேந்தன்!
சேயனையேன் செய்பிழைகள் பொறுத்துக் கொள்ளும்
திருமலியும் பூமியினும் பொறுமை மிக்கான்
தூயதிரு வழிஎன்முன் தோன்றச் செய்து
துணையாகக் கைகொடுத்து நடத்திச் செல்வான்!
ஆயகலை அனைத்தையும்தான் அறியச் செய்யும்
ஆசிரியர் ஏரகத்தான் அறிந்தேன் மாதோ!
80அறிந்திடயான் வைத்தனனால் அறிப✓
அறிந்திடயான் வைத்தனனால் அறிப வெல்லாம்
அறிவுடனே தெளிவினையும் அமைதி தந்து
செறிந்தநல் ஞானமும் அருளும் சீலம்
சேர்ந்ததிரு குருவனையான் செந்தூ ரானே!
பொறிகரணம் பழிபாவம் போந்தி டாமல்
போதாந்தம் அருள்கின்ற நாதன்! மேலாம்
மறைதெரிந்தோர் மனக்கோயில் எழுந்து நிற்கும்
மாமுருகன் ஏரகத்தான் மலர்த்தாள் வாழ்க!