திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி
பாவலர் பேகன்
வெண்செந்துறை8 / 8
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி · பாவலர் பேகன்
வெண்செந்துறை
91உலகெலாம் தந்திடு உச்சிமேற்✓
உலகெலாம் தந்திடு உச்சிமேற் கொள்பொருள்!
கலையெலாம் போற்றிடும் கந்தனை! தந்தையை!
பலகா வியங்கள் பயனுடன் பாடியே
குலவிடு வேன்யான் கொழிதமி ழாலே!
92கொழிதமி ழாலெனைப் பாமழை✓
கொழிதமி ழாலெனைப் பாமழை கொட்டிடச்
செழுங்கரு ணைத்திரு செந்திலோன் செப்பினன்!
விழுமம் துடைக்கும் வினையிதைச் செய்தனன்
தொழுமவர் நோய்தீர் துணைவ னவனே!
93துணைவன் முருகன் தொடர்ந்தெனைக்✓
துணைவன் முருகன் தொடர்ந்தெனைக் காப்பவன்!
இணைஇல் மயில்மீ திவரும் பெருமகன்!
கணைகொள் திருமால் மருகன் கவிஞனென்
புணையெனப் போந்தவன் பொற்கழல் போற்றுவாம்!
94போற்றுவாம் தண்டை புனைகழல்✓
போற்றுவாம் தண்டை புனைகழல் வேலனை!
மாற்றில் மணியை மரகத மாமயில்மேல்
வீற்றிருக்கும் என்பெரும் வெற்றித் திருவினை!
கூற்றை உதைக்கும் குகன்பொற் கழலே!
95குகன்பொற் கழலினைப் போற்றுவாம்✓
குகன்பொற் கழலினைப் போற்றுவாம் காதலால்!
இகபர மீதில் இதுசுகம் என்பதால்
பகலவன் கோடி பரிணமிக் கும்ஒளித்
தகவுடை வேலன் தண்ணளி நீழலே!
96ஏனோ முருகா இனுஞ்சோ✓
ஏனோ முருகா இனுஞ்சோ தனைதான்
யானோ மனவலி வற்றவன்! என்னிடம்
தானோ வலிவுகொள் சோதனை! வள்ளியான்
மானோ எனக்கொடு வாராய் மகிழ்ந்தோ!
97மகிழ்ந்தென் கவியமு துண்டருள்✓
மகிழ்ந்தென் கவியமு துண்டருள் மன்னா!
உகிர்காற் கொடியோய்! உலகம் புரப்போய்!
தகவுடைத் தென்றேஎன் சாற்றுப்பா தோளில்
மிகமகிழ்ந் தேற்குநின் மேன்மை வியந்தேனே!
98தேனே! தெவிட்டா அமுதே!✓
தேனே! தெவிட்டா அமுதே! திடமுடைஎன்
ஊனே! உயிரே! உயிரின் ஒளியே!ஓர்
வானே! சுடரே! சுடரின் இயக்கமே!
யானே எனதென் பொருளே இறைவனே!
99ஏரகன் எந்தை எனைநா✓
ஏரகன் எந்தை எனைநா டிடும்பகை
பாரகம் புக்கிடப் பண்ணும் துணையவன்
தேரகம் ஏற்கவன்! சீரார் கழற்றுணை
தாரக சூரனும் தாங்கிடு வானோ?
100வானோர் துயர்தீர்த் தருள்செயும்✓
வானோர் துயர்தீர்த் தருள்செயும் வள்ளல்தான்
தானே விரும்பி எனைத்தடுத் தாண்டனன்!
யானோ தவஞ்சிறி தேனும் அறிகிலேன்!
கோனே எனையாட் குகவே லவனும்.
101பரமன் குருவாம் முருகன்✓
பரமன் குருவாம் முருகன் வருவான்
உருகி மனமே உரைக்க இதையே!
பெருகிடும் சித்தி சுருங்கிடும் துன்பம்
குருதுணை யுண்டால் குறைவே இலையே!