முருகன் App
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி
பாவலர் பேகன்
நேரிசை வெண்பா7 / 8
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி · பாவலர் பேகன்

நேரிசை வெண்பா

81ஏரகத்தாய் நின்றன் மலரடி✓
ஏரகத்தாய் நின்றன் மலரடி என்றுணையே
பாரில் பருவரல் வாராதே — தேர்மயில்மேல்
ஏறிஎன் முன்னே இனிதே வருகவையால்
மாறிலா வள்ளிகண வா!
82வாசிமயில் மீதேறி என்பால்✓
வாசிமயில் மீதேறி என்பால் வருகவையால்
மாசில் மணியே! வளவயல்சூழ் — தேசமாம்
ஏரகத் தாளும் இணையற்ற வேந்தேஎன்
சீரருமை வெண்பா தெளிந்து!
83தெளிந்த மதியருளும் செந்தி✓
தெளிந்த மதியருளும் செந்தி லரசே
குளிர்ந்த பொழில்சூழ் குகனே! — ஒளிந்த
பகைகண்டு வாகைகொண்ட பாண்டியன் வேந்தே
தகவுடனே வாழஅருள் தா!
84அருள்தா அடியேற் ககில✓
அருள்தா அடியேற் ககில உலகின்
பொருள்தா தவம்யான் புரிய — மருள்தான்
எமையணு காத எழில்உயர் வைத்தா
உமைமக னேநீ உவந்து!
85உலகெலாம் வாழ உதிக்கின்ற✓
உலகெலாம் வாழ உதிக்கின்ற சோதி
பல்குலாம் இன்பப் பரிதி — கலைஎலாம்
சேர எழுந்த திருச்சோதி என்னையன்
ஏரகத்தன் தாளின் இயல்பு!
86இயல்பார் களிமயில் என்கண்ணின்✓
இயல்பார் களிமயில் என்கண்ணின் முன்னே
மயக்கமறத் தோன்றிமகிழ் விக்கும் — செயமே
முருக னடியார்க்கு மூன்றுலகும் நாளும்
குருதொழுவார்க் கேதே குறை!
87குறைவற்ற செல்வம் குகனே!✓
குறைவற்ற செல்வம் குகனே! தெளிந்தேன்
நிறைவுற்ற என்றன்நல் நெஞ்சம் — மறைகற்ற
மூதறி வாளர்சொல் மூத்த முழுப்பொருளே
தீதறு செந்தில் திரு!
88திருவுடையார் பெற்ற திருச்செல்வர்!✓
திருவுடையார் பெற்ற திருச்செல்வர்! ஞானக்
கருவுடையார் போற்றுங் கவிஞன்! — பருவரல்
வாராமல் வாழ வரமருள் சண்முகன்
ஏரகனுக் கேதே இணை?
89இணையில் மரகதம்மேல் மாணிக்கம்✓
இணையில் மரகதம்மேல் மாணிக்கம் என்றன்
புணையாகத் தோன்றும் புதுமைக் — கிணையாக
ஒன்றில்லை! ஈசன் உயர்ந்தகழல் வாழ்கவே
நன்றுபுரி வேலனருள் நாடு!
90நாடென் மனமேஓர் நான்மறையும்✓
நாடென் மனமேஓர் நான்மறையும் நாளிரவாத்
தேடித் திரியும் சிவகுமரன் — வாடா
மலர்த்தாளை! வாழ்வு வளமாகும் உன்னை
உலகம் புகழும் உயர்ந்து!