முருகன் App
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி
பாவலர் பேகன்
வண்ணம்4 / 8
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி · பாவலர் பேகன்

வண்ணம்

21(தான தான தானானா)✓
ஏலோ லம்மறை இன்மொழிவாய்
சீல நங்கையர் சிந்திடவே
மாலே பற்றிட மாந்தினையோ
வேலா என்தமிழ் வேட்டனையே!
22ஏற்றாய் என்றனின் இன்பாவே✓
ஏற்றாய் என்றனின் இன்பாவே
மாற்றாய் வந்திடும் மாப்பகைக்கே
கூற்றாய் வந்திட மாட்டாயோ
நோற்றோர் நோவதும் உண்டுகொலோ!
23ஓகோ என்றழு துன்முன்னம்✓
ஓகோ என்றழு துன்முன்னம்
பாகு தண்டமிழ்ப் பாட்டிசைத்தேன்
நோக நீஎனை விடுவாயோ
போகம் தந்தருள் புண்ணியனே!
24ஏற்றம் மிக்குடை இல்லத்தை✓
ஏற்றம் மிக்குடை இல்லத்தை
மாற்றில் லாமலே வழங்கிடுக
தோற்ப துன்றனின் தொல்புகழை
மாற்றும் வேலவ மறந்திடற்க!
25கற்றுப் பாடமே காவென்று✓
கற்றுப் பாடமே காவென்று
பற்று வைத்தியான் படித்தபினே
நற்ற வத்துனை நான்நினைந்து
வெற்றி பெற்றனன் வேல்வாழ்க:
26வாழ்க வேலவன் வண்கழல்கள்✓
வாழ்க வேலவன் வண்கழல்கள்
வீழ்க நெஞ்சக வெறுப்புப்பேய்
சூழ்க வாகையே சுப்ரமணி
தாழ்க சென்னிவேல் தண்டையின்மேல்
27மேலாம் வீடுருள் வேலன்தான்✓
மேலாம் வீடுருள் வேலன்தான்
தோலா நல்லிசை சூட்டுங்கான்
ஏலா நெஞ்சமே ஏற்றாய்காண்
பாலா வாஎனப் பண்பாடி!
28பாடி வந்தனன் பாராயோ✓
பாடி வந்தனன் பாராயோ
மோடி வள்ளியி டஞ்செய்யும்
ஈடில் வேலுடை ஈசாகேள்
நாடி னேனுனை நான்விடேன்!
29நான்வீ டேனுனை நால்வேதம்✓
நான்வீ டேனுனை நால்வேதம்
தான்தே டுந்திரு சற்குருவே
வான்வேண் டேனுன் வாடாத்தாள்
தான்வேண் டுந்திரு சண்முகனே!
30ஏர கத்துறை ஈசன்தான்✓
ஏர கத்துறை ஈசன்தான்
சீரா ரண்டங்கள் செய்தான்காண்
தேர்ந்தோர் வேலவன் சேவடியைப்
பாரில் வாழலாம் பாங்கோடு.