திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி
பாவலர் பேகன்
இன்னிசை வெண்பா5 / 8
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி · பாவலர் பேகன்
இன்னிசை வெண்பா
31பாங்கோடு வாழ அருள்புரிவாய்✓
பாங்கோடு வாழ அருள்புரிவாய் பண்டிதனே
மாங்கனி யாலுன் மகிமையெலாம் இவ்வையம்
பாங்கா அறியவைத்தாய்! பக்தர்களைக் காத்தருளும்
ஓங்காரன் உன்துணை உண்டு!
32உண்டொரு தெய்வம் எனஉணர்த்தி✓
உண்டொரு தெய்வம் எனஉணர்த்தி அத்தெய்வம்
தண்டா யுதனெனச் சாற்றியே சார்ந்திருக்கும்
அண்டமெலாம் ஆளும் அரசனாம் ஈசனே
கண்டிருப்பன் கந்தனையான் ஏற்று
33ஏற்றனனால் என்னெஞ்சில் ஏரகத்தின்✓
ஏற்றனனால் என்னெஞ்சில் ஏரகத்தின் ஈசன்றாள்
மாற்றில்லா மாமணியே என்றுணர்ந்து நாற்றிசையும்
போற்றுமால் என்றன் புதுக்கவிதை மாமுருகன்
வீற்றிருப்பான் என்நெஞ்ச வீடு!
34என்நெஞ்ச வீடே இளங்குமரன்✓
என்நெஞ்ச வீடே இளங்குமரன் இன்மகிழ்வாம்
கன்னல் கவிமலரும் கற்பகத் தோட்டமாம்
முன்னம்செய் நற்றவத்தால் மூத்தோர்செய் வேள்வியினால்
என்னகம் ஏற்றான் இனிது!
35இனிதின் இனிதேகாண் ஏரகன்✓
இனிதின் இனிதேகாண் ஏரகன் பொற்றாள்
கனிவேட்கும் வேலன் கமல நனியருட்டேன்
நானுண்டேன் உண்டேன் நவிலஒரு அச்சமில்லை
கோனென வாழ்வாம் கொழித்து!
36கொழித்திடு நெல்வயல்சூழ் கோலமிகு✓
கொழித்திடு நெல்வயல்சூழ் கோலமிகு நாட்டர்
செழித்திடநீர் சேவிப்பீர் செந்திலையன் பொற்றாள்
ஒழித்திடுவீர் உம்பகையை உண்மையிது சொன்னேன்
விழித்திடுவீர் வீடுபெற வே!
37வேலன் விழுமம் துடைப்பவன்✓
வேலன் விழுமம் துடைப்பவன் ஏரகச்
சீலன் திருச்சீ ரலைவாய் அசுரனுக்குக்
காலன்! எனஅறி நெஞ்சே கலங்கல்வள்ளி
லோலன் உனதுநண் பன்.
38நண்பன்என் நாயகன் நான்பாடும்✓
நண்பன்என் நாயகன் நான்பாடும் முத்தமிழ்ப்பா
உண்பன் உவந்துநிதம் ஓம்என்ற தத்துவத்தின்
பண்பன்இப் பாண்டியன் காவலன் வள்ளியவள்
கொண்கனையே எஞ்ஞான்றும் கூறு.
39கூறுவது வேலன் குளிர்அமுதப்✓
கூறுவது வேலன் குளிர்அமுதப் பொற்கழலே
மாறுபடு வேறுபகை வந்திடுமோ மாநிலத்தில்?
ஏறுநிகர் எந்தை இளைய குமரனெனைச்
சீராக வைப்பான் தினம்!
40தினம்தினம் யான்புனையும் செந்தமிழ்✓
தினம்தினம் யான்புனையும் செந்தமிழ் மாலை
மனமுவந் தேற்றருள்வான் மாமுருகன்! வள்ளி
தினைப்புனத்தள் தன்னைத் திருடும் குறவன்
புனல்மலிஏ ரூரன் புகலு!
41உலகெலாம் வாழ்த்த உயிரெலாம்✓
உலகெலாம் வாழ்த்த உயிரெலாம் உய்ய
உதித்திடும் ஆதவன் கோடி
கலைஎலாம் வீசிக் கருணையம் வாரிதி
காட்டியா னந்தவெள் ளத்தில்
பலஊழி காலமிப் பாண்டியன் இன்புறப்
பண்ணிய விண்ணவர் கோனை
மலிபுனல் ஏரக மன்னனை வேலனை
வாழ்த்துவ தென்பணி யாமே:
42ஆமேடம் நல்லெருது மீன்நண்டு✓
ஆமேடம் நல்லெருது மீன்நண்டு கன்னி
ஐந்திடத்தே யான்பெறவே ஆறுமுகக்
கோமான் எனக்கருள் தந்தான் குவலயத்தில்
கூறிடவோர் கூற்றொன்றும் இல்லை காண்பாய்
ஏமனமே ஏமனையும் நீவெல்லும் ஆற்றலுளாய்!
ஈசனாம் ஆறுமுகன் ஆணை கண்டாய்
நாமநிகர் ஏரக மாமுருகன்மேல்நவின்று
நாளும் நன்கு வளர்க நனி!
43நனிநடம் செய்வாய் நலம்பல✓
நனிநடம் செய்வாய் நலம்பல செய்ய
நவஅவ யங்காண் மனமே!
இனிபயம் ஏனோ இறைவன் வந்தானே
எழில்மிகு பாடலாய் என்முன்!
முனிபுங்கர் சென்னி முடிந்திடும் மௌலி
முருகனின் பொற்றாள் அறிவாய்!
புனல்மலி ஏரூர் புகழ்புரி வேலன்
புனைகழல் காப்பது தானே!
44தானே வளர்ந்த தனிப்பெருஞ்✓
தானே வளர்ந்த தனிப்பெருஞ் சோதியைத்
தண்ணார் தமிழ்மேல் அடங்காத
தானே தணியாத வேட்கை கொள்வானை
தடங்கண் குறத்திரு வள்ளியம்மை
மானே விரும்பி கிழவுருக் கொண்டான்
மன்னனை எந்தையை என்மனத்தில்
யானே இறுத்தினன் இன்பண் சுரந்திடும்
ஏரகன் பொற்றாள் என்துணையே!
45ஏரகத்து ஈசா இளமயில்✓
ஏரகத்து ஈசா இளமயில் ஏறும்
இறைவா எனது குறைதனைக்கேள்
பாரில் சிறந்திடும் ஊர்தியை ஈகவே
பாண்டி யனுக்குநீ பக்குவமாய்
மாரியின் செல்வ: மணிநீ!என் தந்தைஉன்
மார்பில் புரண்டு விளையாடும்
சீராடும் இச்சிறு சேயின் பிழைபொறு
செந்திற் கதிபதி தேவே!
46தேவே இனும்நீ சிறுவிளை✓
தேவே இனும்நீ சிறுவிளை யாடல்
சிறியே னுடனே செயுமாறென்!
பாவே புனைந்துன் பரிமளச் சீரடி
பாண்டியன் சென்னியில் வைத்தனன்!
கோவே: மறைந்து விளையா டுவதேன்
குமரா விளையா டலுக்கும்என்
கோநீ ஒளிந்திட ஒப்பேன் குணநிதி
கும்பிட்டேன் முன்வா குதித்து!
47குதித்துக் குதித்துத் ததித்தோம்✓
குதித்துக் குதித்துத் ததித்தோம் ததித்தோம்
ததிங்கிணத் தோமென இன்பச்
சுதியுட னேமயில் ஆடும்! துதிசெய்து
சுந்தர உன்திரு மேனி
பதித்த வைரம்போல் பச்சைமேல் மின்னும்
பரவச வெள்ளத்தில் பாண்டி
விதிபிற ழாப்பாப் புனைந்து வணங்குவன்
வேலா யுதநனி மகிழ்ந்தே!
48மகிழ்ந்தேன் மனையாள் உடனிருக்க✓
மகிழ்ந்தேன் மனையாள் உடனிருக்க எற்கே
மனமுவந் துன்னருள் தாராய்!
முகில்கிழித் தோங்கும் முழுமதி அன்ன
முகமும்நற் கூந்தலும் பெற்றாள்!
அகில உலகில் அவளினும் நல்லாள்
அறிந்திலன் உன்னருள் என்னே!
தகவுடன் எங்களைக் காத்தருள் சண்முக
சாற்றினன் நின்மலர்ப் பாதம்!
49நின்மலர்ப் பாதாரம் நிறைந்தசெல்வம்✓
நின்மலர்ப் பாதாரம் நிறைந்தசெல்வம் என்றனுக்கு
நீடூழி வாழ்க அடியார்கள்!
என்மலம் எல்லாம் எரித்து சிவயோக
ஈடில் நெறியில் எனைநிறுத்தி
சென்மம் கடைத்தேறச் செய்யும் திருமுருக
செந்தி அரசேநீ வாழ்கவே!
பொன்மலர்ச் சோலைப் பொழில்சூழ் ஏரகப்
பூமாநின் பொன்னடி போற்றியே!
50போற்றியே செய்தேன் புகழ்புரி✓
போற்றியே செய்தேன் புகழ்புரி ஏரகப்
புண்ணிய நின்மலர்ப் பாதமே
மாற்றலர் அஞ்சிடும் வண்ணம் எனக்குநல்
வாழ்வது தந்தருள் செய்குவாய்!
ஏற்றமே என்றும்எஞ் ஞான்றும் இனிஅச்சம்
எள்ளளவும் இல்லை! உன்னரசை
மாற்றிடச் சூழ்ச்சி வகுப்பவர் தோற்றிட
வந்தருள் தந்துதமிழ் காப்பதே!