முருகன் App
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி
பாவலர் பேகன்
நூல்2 / 8
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி · பாவலர் பேகன்

நூல்

1ஓமென உருவம் உடைய✓
ஓமென உருவம் உடைய அண்டங்கள்
நாமம் பெறுமந் நனிமுன் நாளில்
சொல்லாய் இருந்து துளிர்த்த பொருளை
வல்லதை உள்ளதை நல்லதை, உணர்ந்தோர்
செப்புவர் முருகனெனத் தேர்ந்து
அப்பொருள் எனக்கே அரிய துணையே
2துணையா எனையே தொடரும்✓
துணையா எனையே தொடரும் மயிலே
புணையா வருமே புகழ்குக் குடமே
அயில்வேல் வருமே அடியேன் துணையா
பயில்செந் தமிழாய்ப் பலுகி வருமே
சொலும்ஓம் மெனுமச் சுடரும் எழுத்தே
ஒலியா உதித்திவ் வுலகம் அனைத்தும்
படைத்துப் புரந்து துடைக்கும் பொருளா
உடைய ததையே உணர்ந்தோர் விழைந்தே
முருகா முதல்வா முழுமைப்
பொருளே குருவே எனவுணர் வாரே!
3ஏர கத்தின் ஈசா!என்னைச்✓
ஏர கத்தின் ஈசா!என்னைச்
சீராய்க் காக்கும் செல்வா! நின்றன்
தண்டைக் காலைப் பற்றிச் சார்ந்தேன்
அண்டம் யாவும் ஆளும் வேந்தே
என்றன் புன்பா ஏற்கும் நண்பா!
உன்றன் அன்பை என்றும் மறவேன்
பாலா சீலா கோலா வேலா
நூலா காண்போர் நுட்பம் ஆனோய்
பாடல் செய்தேன் பாண்டி
ஊடா மல்நீ ஓடி வாராய்:
4வாராய் எனதரும் வாகாம்✓
வாராய் எனதரும் வாகாம் தலைவனே
சீராய்ப் புரந்திடச் சேயாய் வருகவே:
மாறாய் உரைந்திடும் மாற்றைத் தகர்க்கவே
கூர்ஆம் உனதரும் வேலைக் கொணர்கவே
பாரோர் வணங்கிடச் சீருறச் சமைத்தனை
ஏர்ஆம் அகத்தினை ஏந்தால் வனைந்தனை
கூறாய்க் குடிலத்தைக் கோவே குருபரா
தேர்ஆம் வழிதனை சேவற் கொடியோய்:
5கொடியோர் கொடுத்திடும் கொடுமை✓
கொடியோர் கொடுத்திடும் கொடுமை ஒழிந்திட
அடியார் அனைவரை அணைத்தே புரந்திட
வடிவே லெடுத்துமுன் வருவாய் சிவகுக
பொடியே பகைப்புலம் புகழே உனக்கென்றும்
உலகோர் தலையினில் உவந்தே அணிகுவர்
குலதே உனதரும் கழலே: ஒருமுறை
எனதாம் சிரசினில் இனிதணிந் தனன்உன்
கனகாம் மணித்தண்டைக் கழலே சிவகுக!
உனையே உருகி உணர்ந்தேன்
எனைநீ புரந்தருள் இனிதுசெய் குவையே!
6அருள்மிகு பால அடியனைக்✓
அருள்மிகு பால அடியனைக் காக்க
விரைவினில் வாஎன் வினையினைத் தீர்உன்
கழலினைப் பாடிக் கவிதைகள் கூறி
மெழுகென வாகி உருகினன் ஐய:
உனதரும் ஓவிய வுருவை மாட்டி
எனதிலில் போற்ற இயைந்தனன் வேட்கை
அருள்வதுன் பாரம், அடியனும் வீரம்
செறிநல யாக்கை அடைந்திட வாழ்த்து!
முனிவரும் தேவர் முழுவதும்
கனிவுடன் போற்றும் கருணையம் வேலா!
7ஆவி நன்குடி ஐயா✓
ஆவி நன்குடி ஐயா வந்தருள்!
கூவிச் சொல்லினன் கோலா வந்தருள்!
ஏர கத்துறை ஏந்தால் என்முனம்
சீரு டன்வர தேவே அன்புசெய்!
யாரும் என்றனுக் கிங்கிலை என்பதால்
மாறா மல்எனை மன்னவ காத்தருள்!
பாடல் செய்ததைப் பார்த்தே
ஈடில் நற்பரி சீந்தருள் வேலவா!
8ஆவது நன்மைகள் ஆகஎ✓
ஆவது நன்மைகள் ஆகஎ மக்கிவண்
நோவது இல்லையே நோற்பது கந்தனின்
தீதறு புண்ணிய தெய்வநா மங்களே!
போதவிழ் இன்னிதழ் கொண்டுபு னைந்தநல்
மாலைகள் எம்மிறை அம்கழல் சூட்டுவேன்
காலையும் பின்வரும் நண்பகல் மாலையும்
ஆறுநற் காலமும் வேறுபல் இல்லமும்
ஆறுமு கன்நலம் அன்புடன் காத்திடல்
தேறுக நீமனம் சிந்தித்து
மாறுப டும்பகை மண்ணிலே புக்குமே!
9ஏனோ இனுமெனக் காத்திட✓
ஏனோ இனுமெனக் காத்திட வில்லை
வானோர் வணங்கிடும் வள்ளல் வேலா!
கூவும் குயிலுடன் கோலம் காட்டும்
வாவி நிறைந்திடும் ஏரக ஈசா
நாளும் உனதடி நத்திடும் யானும்
ஊனப் படுவது உன்தனக் காமோ
சூழும் இருளெனச் சுற்றிடும் மாற்றை
வீழும் படிஅடி: வெம்பகை வீழ,
ஞான ஒளிதிகழ் நன்மறை போற்றும்
மோனத் தவமிகு வேல்கொடு வாஅவ்
வீணப் பகையினை இற்றிடு
கானக் குறத்தியின் கள்வன் வேலனே!
10ஏர கத்தின் ஈசன்✓
ஏர கத்தின் ஈசன் தன்னின்
சீர்மிகுந்த பாதம் சென்னி
காதல் கொண்டு சூடிக் கொண்டேன்
ஏது மில்லை தீது மிங்கே!
வாழி என்று வேலன் கஞ்சம்
தாழ்ந்து சொன்னார் வீழ்ந்த தில்லை
ஞான அப்ப: நன்ம றைக்குள்
காணும் மார்க்கம் வேணு மென்றேன்
வாக்கு நன்றென் றாக
நீக்கென் அச்சம் ஆக்கம் தந்தாய்!