திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி
பாவலர் பேகன்
கட்டளைக் கலித்துறை3 / 8
திரு ஏரகத்து இறைவன் பல்வண்ணத் தந்தாதி · பாவலர் பேகன்
கட்டளைக் கலித்துறை
11தந்தாய் எனஉனைச் சண்முக✓
தந்தாய் எனஉனைச் சண்முக வேலவ சார்ந்ததனால்
எந்தையும் தாயும் இனிமையும் நட்பாய் இருப்பவனே
கந்தா கடம்பா கருணா நிதியே கவிஞனெனை
முந்தி முனம்வந்து காக்கும் குருவே முழுமுதலே!
12முதலே நடுவே முடிவே✓
முதலே நடுவே முடிவே அறிவின் முழுப்பிழம்பே
முதலும் நடுவும் முடிவும் இலாத முழுப்பொருளே!
நிதமும் கவிமலர் நின்கழல் சூடும் நிறைந்தசெல்வம்
இதமாய் எனக்கருள் ஏரக இன்மலர் ஏற்றருளே:
13அருளே பழுத்த அரிய✓
அருளே பழுத்த அரிய கனிவே அடியனுடைப்
பொருளின் பொருளே பொலிவின் பொலிவே புகழ்புரிந்த
திருவின் திருவே செழுமைசெய் வாழ்வே தினமுமெனைச்
சுருதி சொலச்சொலும் சுப்ர மணிஎன் துணைநலமே
14துணைநல மேஎன் துணிவே✓
துணைநல மேஎன் துணிவே துணிவின் துலங்குதிரு
கணையே எனதுபா விற்கு! பகையைக் கலங்கிடச்செய்
தணலே: எனையாள் தயவே தருமம் தனைநிறுவும்
புணையே குருவே புகழ்ஏ ரகத்துப் புகழ்துரையே!
15துரையே முருகா துயர்தனை✓
துரையே முருகா துயர்தனை நீக்கத் துணிந்ததிரு
மருந்தே மணியே மரகத மேஎன் மனநிறைவே!
குறையிரந் தோரின் கொடியதுன் பங்கள் விலக்கிடுவோய்
மறையின் கருவே மயில்மீ திவரும்ஓர் மன்னவனே!
16ஏனென நாதி யிலாதவ✓
ஏனென நாதி யிலாதவ ருக்கும் இரங்கிடவே
தானென வந்தப யந்தரும் சண்முக! சங்கரனார்
கோனென மெச்சு குருபர என்றன் குலவிளக்கே!
மானெனும் வள்ளியை ஏற்றருள் ஏரக மங்களனே!
17மங்கள னேமால் மருகனே✓
மங்கள னேமால் மருகனே மானவள் வள்ளியம்மை
கொங்கைக் களபக் குணமிகு சாந்தில் குளிப்பவனே!
தங்க மயில்மீ திவர்ந்துவந் தெந்நோய் தவிர்ப்பவனே!
சிங்கார வேலவ சிக்கல் அரசன் திருவருளே!
18ஏரக ஈசன் இணைமலர்✓
ஏரக ஈசன் இணைமலர் போற்றி எழுத்தசைசீர்
சீருற வைத்துத் தினம்தினம் பாக்கள் செயுந்தவமே
பேறெனப் பெற்றேன்! பிறிதினி நோயும் பெரும்பகையும்
வேரற வீழும் விரைவுகொள் வெற்றியை வேல்பெறுமே!
19விரைவுகொள் வெற்றியை வேல்பெறு✓
விரைவுகொள் வெற்றியை வேல்பெறு மேஇன்று மேதினியில்
புரைகொளும் அஞ்ஞானப் புண்கொள் அசுரன் புகுந்துடலம்
திரைநிறை செந்திற் பதியில் அசுரர் திணறிடுவர்
மறையவர் வாழ்த்திட மங்கையர் பாடிட வாகையதே:
20தேறுக என்றன் சிறுமனம்!✓
தேறுக என்றன் சிறுமனம்! தெய்வத் திருமறைகள்
ஆறினில் காவிரி யாகியே நாளெலாம் அஞ்சலிசெய்
ஆறு முகன்நற் றுணையுண் டதனால் அலமறற்க
கூறும் திருஏ ரகஇறை வன்கழற்(கு) அஞ்சலியே!