முருகன் App
குறுக்குத்துறைக் கலம்பகம்
தி.சு. ஆறுமுகம்
ஆசிரியச் சுரிதகம்3 / 67
1பாயிரம்2மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா3ஆசிரியச் சுரிதகம்4புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்5குயிலை வேண்டுதல்6அம்மானை7மதங்கியார்8இரங்கல்9தவம்10மதங்கியார்11மேகவிடு தூது12நற்றாய் இரங்கல்13தழை - தோழி கூற்று14வண்டு15வலைச்சியார்16இரங்கல்17சித்திரகவி-அட்டநாகபந்தம்18கார்19இதுவுங் கார்20குறம்21காலம்-இரவுக்குறிவிலக்கல்22சம்பிரதம்23சந்திரனைப் பழித்தல்24சித்திரகவி-காதைகரப்பு25மறம்26களி27இதுவுமது28கையுறை-தோழி கூற்று29ஊசல்30வண்டு31இயலிடங் கூறல்32சித்து33மன்மதனைப் பழித்தல்34நாரைவிடு தூது35சித்திரகவி-மாலைமாற்று36சித்திரகவி - இரதபந்தம்37கிள்ளைவிடு தூது38சுரும்பு39இடமணித் தென்றல்40சித்திரகவி - கோமுத்திரிபந்தம்41தலைவி இடங்கூறல் - வினாவுத்தரம்42பாணமறுத்தல்43இரங்கல்44முல்லை கண்டிரங்கல்45சித்திரகவி - முரசபந்தம்46அம்மானை47சித்திரகவி - எட்டாரைச்சக்கரம்48சித்திரகவி - சுழிகுளம்49இடைச்சியார்50பிச்சியார்51தலைவன் கூற்று52கிள்ளை விடுதூது53ஊசல்54காலமயக்கு - தோழிதேற்றல்55இரங்கல்56தலைவன் கூற்று57வெறிவிலக்கல்58தழை - தோழிக்கூற்று59கைக்கிளை60எழுத அரிதென்றல்61தூது62இரங்கல்63சித்திரகவி - சதுர்நாகபந்தம்64தூது65நற்றாய் இரங்கல்66குறம்67இதுவுமது
குறுக்குத்துறைக் கலம்பகம் · தி.சு. ஆறுமுகம்

ஆசிரியச் சுரிதகம்

1✓
சரவண நின்னடி சரணம் அடைந்துள்ளேன்
தருணம் அறிந்துநீ தடுத்தெனை ஆளுவாய்
கதியுனை யல்லது காணிலேன் நின்னையே
துதிபுரி ஏழையென் துன்பம தவிர்த்திடு
திருவுரு மாமலைத் தேவனே
அருளொடு மெனையாள் அணிவடி வேலே.
2நேரிசை வெண்பா✓
வேலனைச் சக்தி விமலையாம் பார்வதி
பாலனை மங்கையிரு பாங்கனைக்-கோலத்
திருவுரு மாமலைத் தேவனை நெஞ்சே
கருவற வாழ்த்தாய் கனிந்து.
3கட்டளைக் கலித்துறை✓
கனிந்தவன் பாத கமலம் வணங்கல் கடனுனக்கே
முனிந்துனைத் தள்ளா தருளுவ தன்னான் முழுக்கடனே
புனைந்திடு சீர்கொள் திருவுரு மாமலைப் புங்கவனை
நினைந்திடு வேறு நினையேல் எனதரும் நெஞ்சகமே.
4அறுசீராசிரிய விருத்தம்✓
அகமது கனிந்து நின்றே அங்கமும் புளக மார
முகமெலாங் கண்ணீர் சோர முருகனின் புகழைப் பாடின்
இகமதில் நல்வாழ் வாகும் எளிதிலே வீடும் வாய்க்கும்
சுகமுறச் சேர வாரீர் திருவுரு மாம லைக்கே.
5எண்சீராசிரிய விருத்தம்✓
மாமலைகள் நீர்சொரிந்து தாமவனைப் போற்றும்
மரங்களெலாம் மலர்தூவிச் சிரங்களைத் தேற்றும்
காமலியும் புட்களெலாம் கரைந்துருகி யேத்தும்
கடலதுவோ முழக்கமுடன் கரம்தூக்கிப் போற்றும்
நீமலைத லேன்மனமே தாமதஞ்செய் யாதே
நீடுவடி வேலனையே நாடுபுகழ் பாடு
மாமலியுந் திருவுருமா மலைமுருகன் தன்னின்
மலரடிகள் நாடுபவர்க் கிலையிடரே கண்டாய்.
6நேரிசையாசிரியப்பா—ககர வருக்க மோனை✓
கண்டவர் வைத்த கண்ணினை யெடாஅது
காணவே யீர்த்திடுங் கவின்பெறு வடிவினன்
கிட்டுவார் மீண்டும் எட்டியே காமல்தன்
கீழடிப் படுத்தும் கிருபை நிறைந்தவன்
கும்பிடும் அடியார் கொள்துய ரெல்லாம்
கூர்வடி வேலால் கொய்தருள் செய்பவன்
கெண்டை விழியாள் கிளிமொழி வள்ளியின்
கேள்வன் தேவ குஞ்சரி நாதன்
கைத்தல மோடு கண்களீ ராறன்
கொண்டுழ சூழ்திரு வுருமா மலையன்
கோல மயிலவன் கோதிலாக்
கௌரியின் பாலனே கலியுகத் தேவே.
7நேரிசை வெண்பா✓
தேவர் குறைதீர் திருவுரு. மாமலையின்
தேவனே என்றுந் துணையாவான்—மேவுந்
திரிமூர்த்தி யென்பார் சிறிதருளார் சும்மா
திரிமூர்த்தி யென்றே தெரி.
8பஃறொடை வெண்பா✓
தெரிவையர் மீதும் சிறுவர்கள் மீதும்
உரிய பொருள்மீது முள்ள - பிரியமதில்
எள்ளள வேனும் இவன்பால் செலுத்துவையேல்
உள்ளதுயர் போமென் றுணராயோ - பள்ளமதைத்
தேடிவிரை நீராய்த் திருவுரு மாமலையை
நாடிவிரைந் தோடுவாய் நன்கு.