முருகன் App
குறுக்குத்துறைக் கலம்பகம்
தி.சு. ஆறுமுகம்
பாயிரம்1 / 67
1பாயிரம்2மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா3ஆசிரியச் சுரிதகம்4புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்5குயிலை வேண்டுதல்6அம்மானை7மதங்கியார்8இரங்கல்9தவம்10மதங்கியார்11மேகவிடு தூது12நற்றாய் இரங்கல்13தழை - தோழி கூற்று14வண்டு15வலைச்சியார்16இரங்கல்17சித்திரகவி-அட்டநாகபந்தம்18கார்19இதுவுங் கார்20குறம்21காலம்-இரவுக்குறிவிலக்கல்22சம்பிரதம்23சந்திரனைப் பழித்தல்24சித்திரகவி-காதைகரப்பு25மறம்26களி27இதுவுமது28கையுறை-தோழி கூற்று29ஊசல்30வண்டு31இயலிடங் கூறல்32சித்து33மன்மதனைப் பழித்தல்34நாரைவிடு தூது35சித்திரகவி-மாலைமாற்று36சித்திரகவி - இரதபந்தம்37கிள்ளைவிடு தூது38சுரும்பு39இடமணித் தென்றல்40சித்திரகவி - கோமுத்திரிபந்தம்41தலைவி இடங்கூறல் - வினாவுத்தரம்42பாணமறுத்தல்43இரங்கல்44முல்லை கண்டிரங்கல்45சித்திரகவி - முரசபந்தம்46அம்மானை47சித்திரகவி - எட்டாரைச்சக்கரம்48சித்திரகவி - சுழிகுளம்49இடைச்சியார்50பிச்சியார்51தலைவன் கூற்று52கிள்ளை விடுதூது53ஊசல்54காலமயக்கு - தோழிதேற்றல்55இரங்கல்56தலைவன் கூற்று57வெறிவிலக்கல்58தழை - தோழிக்கூற்று59கைக்கிளை60எழுத அரிதென்றல்61தூது62இரங்கல்63சித்திரகவி - சதுர்நாகபந்தம்64தூது65நற்றாய் இரங்கல்66குறம்67இதுவுமது
குறுக்குத்துறைக் கலம்பகம் · தி.சு. ஆறுமுகம்

பாயிரம்

1கணபதி காப்பு✓
நேரிசை வெண்பா
சீரார் பதிநற் றிருவுரு மாமலைமேல்
ஏரார் கலம்பக மேபாட—ஓரானைக்
கன்றி னிருபதத்தைக் கானார் மலர்தூவி
நன்று மனத்தணிவம் நாம்.
2முருகன் காப்பு✓
கட்டளைக் கலித்துறை
நாக மடுத்திடு மேனி நமலனின் நன்னுதற்கண்
ஆக மெடுத்தவன் ஆறு முகத்தவன் அந்தரத்தார்
நாக மடுத்தவன் றானிக் கலம்பகம் நல்கிடுவான்
தோக மடுத்திடு பேதை யெனதுளம் தோன்றிநின்றே.
3சிவபிரான் காப்பு✓
கட்டளைக் கலித்துறை
அருவுரு வானவன் அம்பலத் தாடிடும் அண்ணலவன்
வெருவறு மாறென் மனத்திடை யன்புடன் மேவிடலால்
வருமொரு தீதெது முண்டோ சிறியேன் வழியறிந்து
திருவுரு மாமலை மீது கலம்பகம் செப்பிடவே.
4சக்தி காப்பு✓
அறுசீராசிரிய விருத்தம்
அண்ட மெல்லாம் பம்பரம் போல்
ஆட்டி வைப்பாள் அருட்சக்தி
சண்ட முடையே னெனினுமனைத்
தள்ளா தருளைப் பொழிவளெனத்
தண்ட னிட்டே அவளடிகள்
சார்ந்தே இன்றிக் கலம்பகத்தைத்
தொண்ட னறையத் துணிந்தேனே
தொல்சீர்க் குறுக்குத் துறைமீதே.
5கலைமகள் காப்பு✓
அறுசீராசிரியம்-வேறு
கவிபொழி வாணர்க் கெல்லாம்
கரங்கொடுத் துதவி செய்யும்
சவிபொழி மாது நல்லாள்
சதுர்முகன் தேவி தன்னின்
துவிபொலி பாதம் போற்றித்
திருவுரு மாம லைக்கே
கவிபொலி வாரு மிந்தக்
கலம்பகம் பகர்வன் மாதோ.
6அடியார் காப்பு✓
எழுசீராசிரிய விருத்தம்
சங்கமு தல்வ னாயநக் கீரன்
சந்தமார் திருப்புகழ் தந்த
துங்கமு றுஞ்சீ ரருணகி ரியுடன்
துகளறு குமரகு ருபரன்
புங்கமு றுமிவர் போன்றமெய் யடியார்
பொற்பத மென்சிரங் கொண்டே
பொங்கமு றுங்க லம்பக மிதனைப்
புனைந்திட வேதுணிந் தேனே.
7அவையடக்கம்✓
எண்சீராசிரிய விருத்தம்
புகழோங்கு பேரறிஞர் பலரும் முன்னர்ப்
புனைந்தளித்த கலம்பகங்கள் பலவற் றுள்ளும்
திகழோங்கு மொன்றிரண்டில் நுனிப்புல் மேய்ந்த
சிறியவனென் சிந்தையுறு மாவ லாலே
இகழோங்கு மென்பதறிந் திடினு மிந்த
எளிமைசேர் கலம்பகத்தை யிசைத்த லந்தோ
திகழோங்கு வான்சுடர்கள் தம்மைக் கண்டே
சிற்றுயிர்மின் மினியொளிரும் செய்கை யாமே.