முருகன் App
குறுக்குத்துறைக் கலம்பகம்
தி.சு. ஆறுமுகம்
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா2 / 67
1பாயிரம்2மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா3ஆசிரியச் சுரிதகம்4புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்5குயிலை வேண்டுதல்6அம்மானை7மதங்கியார்8இரங்கல்9தவம்10மதங்கியார்11மேகவிடு தூது12நற்றாய் இரங்கல்13தழை - தோழி கூற்று14வண்டு15வலைச்சியார்16இரங்கல்17சித்திரகவி-அட்டநாகபந்தம்18கார்19இதுவுங் கார்20குறம்21காலம்-இரவுக்குறிவிலக்கல்22சம்பிரதம்23சந்திரனைப் பழித்தல்24சித்திரகவி-காதைகரப்பு25மறம்26களி27இதுவுமது28கையுறை-தோழி கூற்று29ஊசல்30வண்டு31இயலிடங் கூறல்32சித்து33மன்மதனைப் பழித்தல்34நாரைவிடு தூது35சித்திரகவி-மாலைமாற்று36சித்திரகவி - இரதபந்தம்37கிள்ளைவிடு தூது38சுரும்பு39இடமணித் தென்றல்40சித்திரகவி - கோமுத்திரிபந்தம்41தலைவி இடங்கூறல் - வினாவுத்தரம்42பாணமறுத்தல்43இரங்கல்44முல்லை கண்டிரங்கல்45சித்திரகவி - முரசபந்தம்46அம்மானை47சித்திரகவி - எட்டாரைச்சக்கரம்48சித்திரகவி - சுழிகுளம்49இடைச்சியார்50பிச்சியார்51தலைவன் கூற்று52கிள்ளை விடுதூது53ஊசல்54காலமயக்கு - தோழிதேற்றல்55இரங்கல்56தலைவன் கூற்று57வெறிவிலக்கல்58தழை - தோழிக்கூற்று59கைக்கிளை60எழுத அரிதென்றல்61தூது62இரங்கல்63சித்திரகவி - சதுர்நாகபந்தம்64தூது65நற்றாய் இரங்கல்66குறம்67இதுவுமது
குறுக்குத்துறைக் கலம்பகம் · தி.சு. ஆறுமுகம்

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா

எட்டடித் தரவுகள் 2✓
கார்பூத்த உடலுறுங் கரிமுகனின் பின்னவனே
நீர்பூத்த செஞ்சடையன் நுதல்விழிக்கண் வந்தவனே
பரணிதனக் கடுத்துளநற் பைங்கிளிமார் பேணிடவும்
சரவணமார் பொய்கையினில் தங்கிவளர்ந் தோங்கியவா
சக்தியருள் கொண்டுதிரு சண்முகமு மானவனே
பக்தியுடன் பணிவார்க்குப் பரிந்தருளைச் செய்பவனே
வடிவேலு மெடுத்தவனே வரைமுகட டுத்தவனே
கடிகடம்ப மாலையணி கந்தனெனுந் திருமுருகா
✓
மண்ணகமும் விண்ணகமும் மருண்டுகுலை நடுங்கிடவே
எண்ணவொணா இன்னலெலாம் எத்தனையோ புரிந்தலைந்த
சூரபது மனையவனின் சுற்றமுடன் தொலைத்தழித்தும்
ஆரபரி வோடவனை அணிமயிலுஞ் சேவலுமாய்க்
கொண்டுமயி லேறியந்தக் குக்குடத்தைக் கொடியுயர்த்திக்
கண்டுமொழி மாதரிரு கவின்புறமும் நின்றிலங்க
அருள்வதனம் ஆறுடனே ஆறிரண்டு விழிகளுடன்
மருள்தவிர்த்து மாநிலத்தை வாழவைக்கும் மதலாய்கேள்
ஈரடித் தாழிசைகள் 6✓
மூவருமாய் மூவருக்கும் முதல்வனுமாய் அண்டமெலாம்
யாவருமாய் யாவினுமாய் இலங்குசிவன் தனக்கிறைநீ
போதகுரு நாதனெனப் பொலிந்தவனே உன்றனிரு
பாதமல ரலதொருவர் பாலடையேன் தலைவணங்கேன்
விண்கொண்ட தேவதைகள் வேணவையுண் டாமெனினும்
கண்கண்ட தெய்வமுன்போல் கண்டதுண்டோ சுந்தரனே
அண்டமெலா மாக்கியரு ளளித்துபுரந் தழிப்பதுநீ
கண்டவிளை யாட்டெனின்யான் கழறுவதோ நின்பெருமை?
உலகுயிர்க ளனைத்தினுமே உள்ளவனாய் உள்நிறைந்தே
இலகிடுமுன் புகழ்தனையே எளியனெடுத் தோதுவதோ
அங்கிங்கென் னாதவிதம் எங்குமொளி வடிவினனாய்த்
தங்கியுள சண்முகநின் தாள்வணங்கி உய்ந்திடுவேன்.
ஈரடி அராகங்கள் 4✓
உளனென இலனென உரைத்திட நிறைந்தனை
அளவருந் திருமறை அறிந்திட அரியைநீ
எவரெவர் தமதுளம் இசைவுறத் தொழுதிட
அவரவர் உளப்படி அருளுவை யுருவுடன்
நிலமெனப் புனலென நெருப்பெனச் செறிந்தஅ
நிலமென விசும்பென நிறைந்தருள் புரிந்தனை
அனலளி கதிரவன் அமுதளி மதியவன்
அளவில வுடுக்கண மனைத்தினும் நிறைந்தனை;
பெயர்த்தும் ஈரடித் தாழிசைகள் 4✓
பிறந்திலைநீ யிறந்திலைநீ பெரியவன்நீ சிறியவன்நீ
துறந்திலையிவ் வுலகியல்நீ தொடருமொரு குணமிலைநீ
அண்டமெலாம் படைத்திடுவான் அயனென்பர் அவ்வயனோ
தண்டனையுன் பாலடைந்து தனிச்சிறையில் வாடியவன்
அழுகிவிழும் மாங்கனிக்காய் ஆண்டியெனச் சென்றையென்பர்
விழுக்கனியாம் ஞானமென மெய்யறிவர் அறியாரோ?
குன்றாத நித்தியனாம் குணக்கடலாம் நின்னையந்தோ
குன்றவனென் றோதுவதேன் குறைமதியர் காண்பாய்நீ.
நாற்சீர் ஈரடி அம்போதரங்கங்கள் 2✓
இச்சையுங் கிரியையும் இருசா ரணிந்தனை
விச்சையும் ஞானமும் விரும்பி யளிப்பைநீ
இருவினை யுருவமும் இன்பமுந் துன்பமும்
திருவொடு வறுமையும் சேருவ துன்னருள்
(முச்சீர் ஓரடி அம்போதரங்கங்கள் 6)✓
அலைகடற் பதியி லமர்ந்தனை
அணிபரங் கிரியில் செறிந்தனை
ஆவிநன் குடியை அடைந்தனை
ஏரகம் நிறைந்து சிறந்தனை
பழமுதிர் சோலை படர்ந்தனை
குன்றுதோ றாடி மகிழ்ந்தனை
(இருசீர் ஓரடி அம்போதரங்கங்கள் 8)✓
விண்ணில் பிறந்தனை
மண்ணில் உறைந்தனை
கண்ணில் நிறைந்தனை
பண்ணில் ஒளிர்ந்தனை
அசுரர் ஒழித்தனை
அமரர்க் கருளினை
அயிலும் எடுத்தனை
மயிலும் அடுத்தனை
தனிச் சொல்✓
அதுகண்டு