முருகன் App
குறுக்குத்துறைக் கலம்பகம்
தி.சு. ஆறுமுகம்
இதுவுமது67 / 67
1பாயிரம்2மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா3ஆசிரியச் சுரிதகம்4புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்5குயிலை வேண்டுதல்6அம்மானை7மதங்கியார்8இரங்கல்9தவம்10மதங்கியார்11மேகவிடு தூது12நற்றாய் இரங்கல்13தழை - தோழி கூற்று14வண்டு15வலைச்சியார்16இரங்கல்17சித்திரகவி-அட்டநாகபந்தம்18கார்19இதுவுங் கார்20குறம்21காலம்-இரவுக்குறிவிலக்கல்22சம்பிரதம்23சந்திரனைப் பழித்தல்24சித்திரகவி-காதைகரப்பு25மறம்26களி27இதுவுமது28கையுறை-தோழி கூற்று29ஊசல்30வண்டு31இயலிடங் கூறல்32சித்து33மன்மதனைப் பழித்தல்34நாரைவிடு தூது35சித்திரகவி-மாலைமாற்று36சித்திரகவி - இரதபந்தம்37கிள்ளைவிடு தூது38சுரும்பு39இடமணித் தென்றல்40சித்திரகவி - கோமுத்திரிபந்தம்41தலைவி இடங்கூறல் - வினாவுத்தரம்42பாணமறுத்தல்43இரங்கல்44முல்லை கண்டிரங்கல்45சித்திரகவி - முரசபந்தம்46அம்மானை47சித்திரகவி - எட்டாரைச்சக்கரம்48சித்திரகவி - சுழிகுளம்49இடைச்சியார்50பிச்சியார்51தலைவன் கூற்று52கிள்ளை விடுதூது53ஊசல்54காலமயக்கு - தோழிதேற்றல்55இரங்கல்56தலைவன் கூற்று57வெறிவிலக்கல்58தழை - தோழிக்கூற்று59கைக்கிளை60எழுத அரிதென்றல்61தூது62இரங்கல்63சித்திரகவி - சதுர்நாகபந்தம்64தூது65நற்றாய் இரங்கல்66குறம்67இதுவுமது
குறுக்குத்துறைக் கலம்பகம் · தி.சு. ஆறுமுகம்

இதுவுமது

96எண்சீராசிரிய விருத்தம்-வேறு✓
சீர்முருகர் சேருமுரு மாம லைதனில்
செல்வியேநீ கொண்டதுண்மைக் காய்ச்ச லல்லடி
கார்முருகு கூந்தலேநீ கந்த ரைமுனம்
கண்டதனால் கொண்டதொரு காமக் காய்ச்சலே
நீர்பெருகு மாறுநண்ணில் நீவ ருந்திடேல்
நிச்சயமாய் நாளையவர் நாடி வருவார்
தார்பெறுவாய் பாரவருந் தாம தஞ்செயார்
தாட்டிகமாம் என்குறிநீ கேட்டி டாயமே.
97நேரிசை வெண்பா✓
கேட்டினை விட்டே கிருபேசர் வேலவன்
மாட்டினி யேனும் வருவீரே - பாட்டில்
திருவுரு மாமலையின் சீர்கூறு வீரேல்
வெருவினை யேதுபுல வீர்.
98கட்டளைக் கலித்துறை✓
புலவீர் திருவுரு மாமலை தன்னைப் புகழ்ந்திடுவீர்
வலவே லவனின் பெயர்களைப் பாடி வழுத்திடுவீர்
இலவே றுதுணை இவனல் லதினி யெனவுணர்வீர்
கலவீ ரொருவே றுதெய்வ முமது கனவிலுமே.
99எண்சீராசிரிய விருத்தம்✓
கனவினிலு முனைமறவேன் கந்தா என்றன்
காதலினை யினுமுணர விலையோ சொல்வாய்
மனதிலுனை வரித்ததன்பின் மகிழ்ந்து நீதான்
வந்தெனையுட் கொளவிலையேல் மதிப்பார் யாரே
தினமினிய சாறுபொலி நெல்லை தன்னுள்
திருவுருமா மலையுறுந் தேவ தேவா
நினதினிய நிழலதிலே நிலைத்து வாழும்
நேரமதே எனக்கினிய நேரங் கண்டாய்.
100பன்னிரு சீராசிரிய விருத்தம்✓
காண்பேன் நினது வடிவமொன்றே
காணேன் பிறிதே கதிர்வேலா
கலங்க எனையே நீவிடுத்தால்
கண்டார் பழித்தே நகையாரோ
பூண்பே னுனது கடம்பினையே
பூணேன் பொன்னும் மணியேனும்
பொழிலார் குறுக்குத் துறைநாதா
பிழையென் புரிந்தேன் பெருமானே
மாண்பார் நினது மலரடிக்கே
மறுவில் தொண்டு புரிவதலால்
மறந்தே பிறவும் நினையேனே
மனம்நீ யிரங்கி யருளாயோ
வீண்பார் மவுன மினுமமேனோ
வியனா ருலகந் தூற்றவெனை
விடுப்பா யோகொண் டணைப்பாயோ
வேறே கதியும் அறியேனே.
101நேரிசை வெண்பா✓
அறியாமல் யாதும் அடிமையான் தீது
புரியாநின் றாலும் பொறுத்துச் - சிறியேனை
வந்தாள் திருவுரு மாமலை மன்னும்வேற்
கந்தா திருமுரு கா.