முருகன் App
குறுக்குத்துறைக் கலம்பகம்
தி.சு. ஆறுமுகம்
புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்4 / 67
1பாயிரம்2மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா3ஆசிரியச் சுரிதகம்4புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்5குயிலை வேண்டுதல்6அம்மானை7மதங்கியார்8இரங்கல்9தவம்10மதங்கியார்11மேகவிடு தூது12நற்றாய் இரங்கல்13தழை - தோழி கூற்று14வண்டு15வலைச்சியார்16இரங்கல்17சித்திரகவி-அட்டநாகபந்தம்18கார்19இதுவுங் கார்20குறம்21காலம்-இரவுக்குறிவிலக்கல்22சம்பிரதம்23சந்திரனைப் பழித்தல்24சித்திரகவி-காதைகரப்பு25மறம்26களி27இதுவுமது28கையுறை-தோழி கூற்று29ஊசல்30வண்டு31இயலிடங் கூறல்32சித்து33மன்மதனைப் பழித்தல்34நாரைவிடு தூது35சித்திரகவி-மாலைமாற்று36சித்திரகவி - இரதபந்தம்37கிள்ளைவிடு தூது38சுரும்பு39இடமணித் தென்றல்40சித்திரகவி - கோமுத்திரிபந்தம்41தலைவி இடங்கூறல் - வினாவுத்தரம்42பாணமறுத்தல்43இரங்கல்44முல்லை கண்டிரங்கல்45சித்திரகவி - முரசபந்தம்46அம்மானை47சித்திரகவி - எட்டாரைச்சக்கரம்48சித்திரகவி - சுழிகுளம்49இடைச்சியார்50பிச்சியார்51தலைவன் கூற்று52கிள்ளை விடுதூது53ஊசல்54காலமயக்கு - தோழிதேற்றல்55இரங்கல்56தலைவன் கூற்று57வெறிவிலக்கல்58தழை - தோழிக்கூற்று59கைக்கிளை60எழுத அரிதென்றல்61தூது62இரங்கல்63சித்திரகவி - சதுர்நாகபந்தம்64தூது65நற்றாய் இரங்கல்66குறம்67இதுவுமது
குறுக்குத்துறைக் கலம்பகம் · தி.சு. ஆறுமுகம்

புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்

முதலடி✓
குடர்பசி யால்துடித் திடவுமை யார்நகிற்
குடங்களை யீர்த்திட உயர்ந்தன
கொடியிடைக் கார்த்திகை அரிவையர் மார்பிடைக்
குலவியன் னார்பிடர் அணைத்தன
குமுதமென் வாய்திறந் தழுதிடுங் கால்சுர
வணமிசை காலுடன் அசைந்தன
குலநவ வீரரைக் குணமுடன் கூடியுங்
குலவிடுங் கால்துடி துடித்தன
இரண்டாமடி✓
இடர்பட நான்முகன் தனைச்சிறை யேவின்
எளிதினில் யாவையும் படைத்தன
எரிவிழி யான்விரும் பியவிதம் ஞானமுத்
திரைகுவித் தோதிட உயர்ந்தன
எதிருறு மாமலை பிளந்தன நீறற
எறிதிரை வாரியை வடித்தன
இகலிய சூரனைத் தடிந்தன யானையின்
எழிலுயர் பாவையை மணந்தன
மூன்றாமடி✓
படர்பசுந் தோகையை அணைத்துயர் கோழியுட்
படுகொடி வானுற உயர்த்தன
பசுந்தினை யார்புன முறுமொரு பாவையும்
பிணைமகள் மார்பினைத் தழுவின
பலகலை யார்தமிழ் தனைக்குறு மாமுனி
பணிவுட னேற்றிடப் புகட்டின
பருவலி பூதம தொழித்திடக் கீரனும்
பகர்மুরু காற்றினை அணிந்தன
9நான்காமடி✓
தொடர்புற மாபுகழ் பரவிய சீரரு
ணகிரியின் பாடலும் அணிந்தன
துகளறு மூங்கையன் குருபர னோதிய
சுடர்கலிப் பாவையும் அணிந்தன
தொடைகமழ் தீந்தமிழ் மணமுடன் மாநறுங்
கடம்பணி மாலையும் சுமந்தன
திருவுரு மாமலை மருவிய வேலவன்
திறல்மிகும் ஆறிரு புயங்களே.