முருகன் App
குறுக்குத்துறைக் கலம்பகம்
தி.சு. ஆறுமுகம்
மறம்25 / 67
1பாயிரம்2மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா3ஆசிரியச் சுரிதகம்4புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்5குயிலை வேண்டுதல்6அம்மானை7மதங்கியார்8இரங்கல்9தவம்10மதங்கியார்11மேகவிடு தூது12நற்றாய் இரங்கல்13தழை - தோழி கூற்று14வண்டு15வலைச்சியார்16இரங்கல்17சித்திரகவி-அட்டநாகபந்தம்18கார்19இதுவுங் கார்20குறம்21காலம்-இரவுக்குறிவிலக்கல்22சம்பிரதம்23சந்திரனைப் பழித்தல்24சித்திரகவி-காதைகரப்பு25மறம்26களி27இதுவுமது28கையுறை-தோழி கூற்று29ஊசல்30வண்டு31இயலிடங் கூறல்32சித்து33மன்மதனைப் பழித்தல்34நாரைவிடு தூது35சித்திரகவி-மாலைமாற்று36சித்திரகவி - இரதபந்தம்37கிள்ளைவிடு தூது38சுரும்பு39இடமணித் தென்றல்40சித்திரகவி - கோமுத்திரிபந்தம்41தலைவி இடங்கூறல் - வினாவுத்தரம்42பாணமறுத்தல்43இரங்கல்44முல்லை கண்டிரங்கல்45சித்திரகவி - முரசபந்தம்46அம்மானை47சித்திரகவி - எட்டாரைச்சக்கரம்48சித்திரகவி - சுழிகுளம்49இடைச்சியார்50பிச்சியார்51தலைவன் கூற்று52கிள்ளை விடுதூது53ஊசல்54காலமயக்கு - தோழிதேற்றல்55இரங்கல்56தலைவன் கூற்று57வெறிவிலக்கல்58தழை - தோழிக்கூற்று59கைக்கிளை60எழுத அரிதென்றல்61தூது62இரங்கல்63சித்திரகவி - சதுர்நாகபந்தம்64தூது65நற்றாய் இரங்கல்66குறம்67இதுவுமது
குறுக்குத்துறைக் கலம்பகம் · தி.சு. ஆறுமுகம்

மறம்

38எண்சீராசிரிய விருத்தம்✓
பாராளும் நும்மரசன் திருமு கத்தைப்
பாவைதனை வேண்டியிவண் விடுத்த தாலே
சீராகத் தலையெடுத்து விட்டான் என்றும்
சிரஞ்சீவி யாகவேதான் இருப்பான் தூதா
பேரான திருவுருமா மலையில் வாழும்
பெம்மானின் அருளடைந்த வேங்கை நாங்கள்
நேரான இளவரசுக் கேற்ற வாறு
நீசென்றவ் இளவாலைப் பெண்கேட் பாயே.
39பதினான்கு சீராசிரிய விருத்தம்✓
கேட்டு நீயுன் காவ லன்சொல்
ஏற்றுச் சிந்தி யாமலே
கிறுக்கல் ஓலை யோடு நாடிக்
கேடு தேடும் தூத!நீ
வேட்டு வந்த மறவர் வஞ்சி
வியன்கு றுக்குத் துறையிலார்
வேலின் மீது படரு மன்றி
அரசின் மீது படருமோ
நாட்டு மன்னர் கோடி முன்னர்
நாடி வந்து பட்டதை
நானெ டுத்துச் சொல்வ தோஇந்
நாடு னக்குச் சொல்லுமே
ஓட்டு வாருன் தலைய றுத்துக்
காட்டு வாருன் அரசிடம்
ஓங்கும் எம்சி றார்கள் கண்ணி
லுறுமுன் ஓடிப் பிழையடா.
40வஞ்சித் தாழிசை✓
அடாதனவுஞ் செய்தேநீ
அடம்பிடிப்ப தேனோதான்
படரொளிவேல் பரம்பொருளும்
பரிவுடையார் மடமனமே
கண்டவர்கள் விண்டதெலாம்
கண்டிருந்தும் அவர்மிசைநீ
கொண்டதெவன் ஐயமிதே
அண்டிடுவார் மடமனமே
திருமுருகர் வருமளவும்
ஒருகுறையும் எண்ணாமல்
திருவுருமா மலைநினைந்தே
வெருவறவாழ் மடமனமே.
41தவம்-கொச்சக்கலிப்பா-மடக்கு✓
மனங்கனிந்து திருவுருமா மலையடைந்து திருவுருமா
கனங்குறைந்து வணங்கிடவே கண்டகுறை வணங்கிடவே
தினங்கனிந்து மருள்வானே தொடரயமன் மருள்வானே
வனங்களூறைந் திருப்பீரே வந்துமனந் திருப்பீரே.
42இன்னிசை வெண்பா✓
பீர்கொள்ள வேண்டாங்காண் போய்க்குறுக் குத்துறையில்
நீர்கொள்ளா வாறருளும் நீர்கொண்ட தண்பொருநை
முங்கி யொருக்கால் முருகா எனவுரைப்பின்
தங்கிடு மோபிறவி தான்?
43கட்டளைக் கலித்துறை✓
தானவ ரின்படை யுட்சென் றவரைத் தடிந்துமனம்
வான ரின்படை யும்படிச் செய்தோய் வனிதையிரு
மானவ ரின்படை யுட்சேர் திருவுரு மாமலையாய்
நானவ ரின்படை யுட்புகா தேக நயந்தருளே.
44குறள் வெண்பா✓
அருள்வாய் திருவுரு மாமலையா யுன்றன்
சரணங்களே என்றுந்தஞ் சம்.