முருகன் App
குறுக்குத்துறைக் கலம்பகம்
தி.சு. ஆறுமுகம்
சம்பிரதம்22 / 67
1பாயிரம்2மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா3ஆசிரியச் சுரிதகம்4புயவகுப்பு - இருபத்தெண் சீராசிரிய விருத்தம்5குயிலை வேண்டுதல்6அம்மானை7மதங்கியார்8இரங்கல்9தவம்10மதங்கியார்11மேகவிடு தூது12நற்றாய் இரங்கல்13தழை - தோழி கூற்று14வண்டு15வலைச்சியார்16இரங்கல்17சித்திரகவி-அட்டநாகபந்தம்18கார்19இதுவுங் கார்20குறம்21காலம்-இரவுக்குறிவிலக்கல்22சம்பிரதம்23சந்திரனைப் பழித்தல்24சித்திரகவி-காதைகரப்பு25மறம்26களி27இதுவுமது28கையுறை-தோழி கூற்று29ஊசல்30வண்டு31இயலிடங் கூறல்32சித்து33மன்மதனைப் பழித்தல்34நாரைவிடு தூது35சித்திரகவி-மாலைமாற்று36சித்திரகவி - இரதபந்தம்37கிள்ளைவிடு தூது38சுரும்பு39இடமணித் தென்றல்40சித்திரகவி - கோமுத்திரிபந்தம்41தலைவி இடங்கூறல் - வினாவுத்தரம்42பாணமறுத்தல்43இரங்கல்44முல்லை கண்டிரங்கல்45சித்திரகவி - முரசபந்தம்46அம்மானை47சித்திரகவி - எட்டாரைச்சக்கரம்48சித்திரகவி - சுழிகுளம்49இடைச்சியார்50பிச்சியார்51தலைவன் கூற்று52கிள்ளை விடுதூது53ஊசல்54காலமயக்கு - தோழிதேற்றல்55இரங்கல்56தலைவன் கூற்று57வெறிவிலக்கல்58தழை - தோழிக்கூற்று59கைக்கிளை60எழுத அரிதென்றல்61தூது62இரங்கல்63சித்திரகவி - சதுர்நாகபந்தம்64தூது65நற்றாய் இரங்கல்66குறம்67இதுவுமது
குறுக்குத்துறைக் கலம்பகம் · தி.சு. ஆறுமுகம்

சம்பிரதம்

34பதினான்கு சீராசிரிய விருத்தம்✓
ஒழித்தசுரக் குலந்தனை யும்பர்பா லருள்புரிந்த
உன்னதன்கு மார வேலன்
உறைந்தருளுந் திருவுரு மாமலையை வணங்கியான்
உற்றிடுசம் பிரதம் சொல்வேன்
அழித்திந்தப் பிரமனை யவன்மனைவி யறுதலியை
அம்பட்டன் அனையச் செய்வேன்
அரிதன்னைப் பயமடையச் செய்குவேன் பெண்ணாக்கி
அழகுமகன் பெறவுஞ் செய்வேன்
பழித்திடுமா றவன்றனை மீனாமை சிங்கமாய்ப்
பன்றியாய்ப் படைத்தும் விடுவேன்
பாரிலலை விண்டுவுக் குருவமிலா தாக்குவேன்
படருருவம் அரியுங் கொண்டு
செழித்துயர்ந் தாலுமொரு செப்பினி லடைத்தவனின்
தேகமதைக் கருப்பு மாக்கித்
தேவாதி தேவனத் திருமாலே எனஅலையும்
தாதர்பால் தந்தி டுவனே.
35இதுவுமது✓
தந்தமா தங்கமதைத் தழையருந்தச் செய்குவேன்
தழைத்துவரும் நெற்க திரிலே
தரமாக நவமணிகள் தமைவரப் பண்ணுவேன்
தாமரையில் குவளை தருவேன்
சந்தனமும் பால்குடிக்கச் செய்குவேன் காற்றுக்குச்
சரியான காலும் அளிப்பேன்
சலியாமல் எலிமீது யானைவரப் பண்ணுவேன்
வானத்தை ஓட்டை யிடுவேன்
கந்தனுறை திருவுரு மாமலையில் வாழ்பவர்க்
கரியசெய லேது முளதோ
கரும்போடும் எறும்பதனைக் களிறாக்கு வேனெழில்
கண்ணைவா யாக்கி விடுவேன்
சந்தமுறெம் மாதரையும் சதுராகக் கதிரவனைச்
சுற்றியருண் டாடச் செய்வேன்
சங்கரனுக் குபதேசம் செய்க்குகனே தலைவனெனச்
சரணமடைந் துய்கு வேனே.