முருகன் App
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி
ச. வயித்தியலிங்கம் பிள்ளை
தோத்திர மிசைத்திடு3 / 10
செல்வச் சந்நிதி முருகன் திருப்பள்ளியெழுச்சி · ச. வயித்தியலிங்கம் பிள்ளை

தோத்திர மிசைத்திடு

3✓
தோத்திர மிசைத்திடு மடியவ ரொருபால்
சுற்றியஞ் சலிசெயு மடியவ ரொருபால்
காத்திடு வெனவரு மடியவ ரொருபால்
கைகுவித் தேதொழு மடியவ ரொருபால்
பூத்திரள் சிந்திடு மடியவ ரொருபால்
பொற்புற வெங்கணு நிறையவந் தெடுத்தார்
நேத்திர மணியென குருபர வளச்சந்
நிதியரசே பள்ளி யெழுந்தரு ளாயே.