முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சங்கக் கடலுடைசூழ்4 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சங்கக் கடலுடைசூழ்

4✓
சங்கக் கடலுடைசூழ் தங்க விலங்கைசா
ரங்கச் சிரமா மசலமிழி நீருற்ற
வங்கச் சலதி யரனோ டிடங்கொளரு
ணங்கை யுருவாய் அவரருளின் ஞான்றிடுமப்
பங்கங் குடைந்து குளிர்சுடர்க ளோடெழுந்த
வங்கங்கைத் தோய்வி னதீதமா மாறருளே.