முருகன் App
ஆறெழுத்துப்பத்து
தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை
சந்த மறைப்பொருளாந்10 / 10
ஆறெழுத்துப்பத்து · தா.மூ.பூ. பொன்னம்பலப் பிள்ளை

சந்த மறைப்பொருளாந்

10✓
சந்த மறைப்பொருளாந் தாரகமே நீபத்தா
ரத்தமதி சீரினிறை யாறுநய மாராறு
வத்திரமுங் காண மழையலரோ பூவலர்வண்
ணத்தருவி யோபரம் வானந்தத் தேன்குடையும்
பத்திமையோ விங்குள்ள பாசங் கழிவென்றார்
வந்தடைந்தே யுய்ந்தே னினிச்செய் வகையருளே.