ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
அம்புலிப்பருவம்8 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
அம்புலிப்பருவம்
63சந்திரனைத் தாதியரழைத்தல்✓
விந்தையாய் வெண்ணிறந் திகழவரு வாயிவனும்
வெண்ணீ றணிந்து வருவான்
மீனக் கணங்களு முண்டுனக் கிவனுடன்கு
வெற்றியுறு கணமு முண்டு
சுந்தரம தாயுறு மாதரு மகிழவே
தோன்றுமெய் யுடைய குகனாந்
துரிதமா யவர்மகிழ மயிலின்மிசை பவனிவரு
தோன்றலா னென்று வருவான்
செந்தமிழ்ப் பாவலர்கள் போற்றுவா ருனையிவன்
றிருவடிப் பெருமை நவில்வார்
சிவன்முடியி லுற்றவனு மாவைநீ யிவனுமத்
திருவிழிப் பொறிய தாவான்
அந்தமகி மையிருவ ருக்குமுண் டாதலா
லம்புலி யாட வாவே
அன்பர்குடி கொண்டிடு மாயர்குடி வேலனுட
னம்புலி யாட வாவே.
64✓
தேவருக் கமுதுதவு சீலனீ யிவனருட்
செய்யபே ரமுது தவுவான்
தேய்பிறை யுனக்குண்டிங் கியாரு மறியவே
செஞ்சுடரை யுற்ற மெய்யன்
பூவுலகை வலம்வர வுனக்குமொரு மதிசெலும்
புனிதனிவன் மயிலி லேறி
பூலோக மெங்கணு மொருநொடியி லிவனுமே
போய்வரவும் வல்ல னாவான்
பாவலர்கள் சிலருனைப் போற்றுவா ரிவனையும்
பரமகுரு வென்று புகழ்வார்
பதினாறு கலைதா னுனக்குண் டிவர்க்காறு
பத்துநால் கலைக ளுண்டு
ஆவலுட னிவனுனை யழைக்கத் தகாதுகா
ணம்புலி யாட வாவே
அன்பர்குடி கொண்டிடு மாயர்குடி வேலனுட
னம்புலி யாட வாவே.
65✓
சஞ்சார மாயிரவு பாதிநாள் மட்டுநின்
தன்வெண் ணிலாவி ரிப்பாய்
சகலகா லங்களிஞ மிலையபதி பூசியே
தண்டமிழ்க ளோதி வருவான்
நெஞ்சா லுகந்துனை யழைத்தின்னம் வரவிலை
நீலக் கலாப முடையான்
நீங்காத கோபமுற் றானெனி லண்டமும்
நெறுநெ றெனவே நடுங்குங்
கஞ்சா தனத்தனைச் சிறையிட்டுக் கீரன்
கடுஞ்சிறை யையே மீட்டினான்
கைவேல்செய் மாயமு மெய்வேள்செய் நேயமுங்
கண்டிலை போலு நீயே
அஞ்சா தொளித்திடவு மிடமுண்டு மோயிலை
யம்புலி யாட வாவே
அன்பர்குடி கொண்டிடு மாயர்குடி வேலனுட
னம்புலி யாட வாவே.
66வேறு✓
பச்சைக் கலபத் தாலரவின்
பகையுந் தவிர்ந்தே வோரேழு
பவசா கரத்தை யொழிக்கவருட்
பக்தி நெறியி லேபுகுந்திங்
கிச்சை யுடனீ ரணிந்தேயா
ரிருளை யகற்றி மூலவன
லெழுப்பி யாறு நிலங்கடந்தங்
கியங்கும் வாசி தனையடக்கி
முச்சந் தியுமே யகன்றண்ட
முகட்டிற் புகுந்து முருகனுமே
முனியா தருளும் பேரின்ப
முற்றும் பெறலாம் விரைவினிலே
அச்சந் தவிர்க்குங் குருபரனோ
டாடா வருவா யம்புலியே
அழகா ராயர் குடிக்குகனோ
டாடா வருவா யம்புலியே.
67✓
நானா னென்னு மகந்தையதால்
நலிந்து மெலிந்து நாள்நாளாய்
நகைப்பார்க் கிடமா யுருவெடுத்து
நல்ல மதியை யிழந்துதிரிந்
தோனா யுலக பாசமதி
லுழன்று மாயை யாற்கலங்கி
ஓடி ஓடி மனதுட்கி
யுக்க மற்று மலைந்துநித்த
மானாய் மயங்கிக் கெட்டதொரு
மதியே நான்சொல் வாசகத்தின்
வழியே நடந்தால் நோயகன்று
வாழ்வா யதனாற் குகன்றோழன்
ஆனா யென்று பிறர்புகழ
வாட வருவா யம்புலியே
அழகா ராயர் குடிக்குகனோ
டாடா வருவா யம்புலியே.
68✓
தரியா தோட்டுஞ் சனிசென்மந்
தன்னில் மதியுங் கதிரேழில்
தானெட் டினிற்சேய் புகுநாலிற்
றக்க குருவு மூன்றினிலே
வுரிய வெள்ளி யாறினிலே
யொன்ப ததனி லிருபாம்பு
முற்ற பகையும் பெரும்பணியு
முண்டு முனக்கிங் குலந்துரைத்தால்
பெரிய நோயாம் பேயாட்டும்
பேரா வினைஞர் செய்வினையும்
பிரிந்தே யோடு மிவன்கண்டால்
பிள்ளா யுனக்குத் தெரியாதா
அரியோன் மருகன் குகனிவனோ
டாடா வருவா யம்புலியே
அழகா ராயர் குடிக்குகனோ
டாடா வருவா யம்புலியே.
69சந்தம்✓
கண்கள் சிவந்து கனற்பொறி சிந்திடு
கந்தக் கடவுளிவன்
கண்டிடு மண்டர்கட் தொண்டு புரிந்து
கமல மலர்த்தாளன்
பெண்க ளுவந்து பணிந்துற வந்தருள்
பெம்மா னிவனாவான்
பிஞ்சுக னென்றொரு மஞ்ஞை யிவர்ந்தருள்
பிரானு மிவனாவான்
தண்கட லுண்டிடு கும்பன் குருவாய்த்
தான்புகழ் கொண்டவனாந்
தண்டை சிலம்பு புலம்பிடு கின்ற
சரணமலர்த் திருவான்
விண்கள் புரந்தவன் றன்மரு கன்விளை
யாடவா வம்புலியே
விளங்கிடு மாயர் குடிக்குக னாம்விளை
யாடவா வம்புலியே.
70✓
சிங்கத் திறலு நடுங்கச் செந்தமிழ்
செப்புந் திருவாயன்
செம்பொற் சுப்பிர மஞ்சத் தைப்பெறு
செல்வச் சிவநேயன்
சங்கத் தினர்புக ழங்கத் தினர்மகிழ்
சண்முக குருபரனாம்
சந்தப் புகழ்சொல வந்தற் புதமரு
தயாநிதி யோனிவனாம்
கங்கைச் சடையின ரங்கைப் புகவளர்
கண்மணி யோனிவனாங்
கண்டுற் றிடுமொழி தந்தக் கரையொடு
கைகூப் பிடவருவான்
அங்கைக் கயில்கொடு வந்தருள் குருபர
னாடவா வம்புலியே
அழகா ராயர் குடிக்குக னிவனோ
டாடா வம்புலியே.
71✓
புவிரா சன்புகழ் வளவன் செழியன்
புண்ணிய மதுபெறலாம்
பொருது ரைப்பொரு கதையாங் கந்த
புராணப் பொருளுறலாம்
கவிரா சன்பெயர் சிவராம லிங்கன்
கவிகற் றருள்பெறலாம்
கந்தபி ரான்பின் னைக்கவி சிந்து
கலம்பகம் வினவிடலாம்
தவிரா வினைதீர்த் திடுமா றெழுத்தைச்
சாற்றி மகிழ்ந்திடலாஞ்
சன்னிய தானத் தருள்சந் தப்புகழ்
தன்னை யுரைசெயலாம்
அவிரா டன்கோ விற்குக்க னிவனோ
டாடா வம்புலியே
அழகா ராயர் குடிக்குக னிவனோ
டாடா வம்புலியே.
72✓
கிரியைப் பொடிசெய் தொருவே லாலே
கீர்த்தியு முற்றவனர்
கீரன் சிறையை விடுத்தே பூதங்
கேடுறச் செய்தவனாம்
கரியை யுரித்தோன் விழியதில் வந்த
கனற்பொறி யிவனாமே
கஞ்சனை யன்று முனிந்தவன் மருகன்
காதாற் கேட்டிவையோ
சரியா டல்நீ செய்யுந் தரமோ
சண்முக வேலனுடன்
தண்டஞ் செயுமுன் வருவ துனக்குத்
தகுதிய தானதினால்
அரியே றென்ன நடமிடு குமரனோ
டாடவா வம்புலியே
அழகா ராயர் குடிக்குக னிவனோ
டாடவா வம்புலியே.