முருகன் App
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
சப்பாணிப்பருவம்5 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை

சப்பாணிப்பருவம்

32✓
அடைக்கல மெனச்சுரர்க ளசுராதி பகையுறவு
மஞ்சலி லுவந்துவந்து
அந்தகா ரத்திருள கன்றுபுற மேகிடவா
றெழுத்ததனை உன்னிப்
படைக்கல மிதாமெனப் பத்திநிலை நின்றாசைப்
பசாசைத் துரத்திவிட்டுப்
பாமகுரு பரனருளி னுபதேச வழிசென்று
பாதபங் கயம்வணங்கி
இடைக்கலப் பொருளாக வுடலாவி பொருள்மூன்று
மெந்தைநிற் கர்பணமதா
யிருந்துநைந் துருகிமெஞ் ஞானவொளி கண்டிருந்
தேகாந்த யோகமுற்றுச்
சடைக்கடவு ணின்கருணை கொண்டுய்ய வும்பரம
சப்பாணி கொட்டியருளே
தண்டமிழ் விளங்கிடு மாய்க்குடிக் குமரனே
சப்பாணி கொட்டியருளே.
33✓
நான்மறையி னங்கத்தி னுட்பொருள் கவர்ந்தினிய
நற்றமிழி னடிகள்பெயர
நற்சாது சங்கத்த ருற்சாக மேபெற
நளினமல ரடிகள்பெயர
நூல்முறை யுணர்ந்தகவி வாணர்மது ரக்கவி
நுவலுமவ ரடிகள்பெயர
நுண்ணிடை மடக்கொடியர் கண்ணிடை மயங்கியவர்
நோக்குமவ ரடிகள்பெயர
கான்முறை யடக்கியருள் கண்டுநட னங்களின்
காக்ஷியி னாகஷிபெயர
கானகக் குறமகள் தெய்வானை யடிபெயர
கைப்பாணி யடிகள்பெயரத்
தானுமறை யதையுணர்ந் தோதிவரு குமரனே
சப்பாணி கொட்டியருளே
சந்தத் திருப்புகழ் விளங்குமாய்க் குடிமுருக
சப்பாணி கொட்டியருளே.
34✓
பாரோடு மீரேழு லோகமுந் தாங்கிவரு
பணிராச ராசமகுடப்
பந்தியா னதுபெயரத் தந்தியெட் டும்பெயரப்
பவளவெண் குடைகள்பெயரச்
சூரோடு மகரரடி யும்பெயர மாருதச்
சுழல்காற்றி னடிகள்பெயரத்
தோன்றும்வா ரிதிபெயரத் தும்புருவர் நாரதர்
தொல்மலைக் கரசுபெயர
நீரோடு மாகாய கங்கைமக ளடிபெயர
நீலமயி லடிகள்பெயர
நீங்காத குறவள்ளி தெய்வானை யடிபெயர
நேமியோ னடிகள்பெயர
தாரோடு நூல்பெயரத் தன்னிருகை சேர்த்துநீ
சப்பாணி கொட்டியருளே
சந்ததம் புகழ்பெருகு மாயர்குடி வேலனே
சப்பாணி கொட்டியருளே.
35✓
மெய்வைத்த பரிபூர ணக்கிரண மிளிரவே
மெஞ்ஞானக் கதிரொளிரவே
விண்ணவர்க் கமுதுதவு பண்ணவர்க் கன்புகூர்
வேலனே விமலமணியே
பொய்வைத்த வஞ்சக நெஞ்சினர் களும்புகழ்
பூம்பூன லாடுடையர்
பொருளாசை யதுகொண்டு மருளாசை யதுகண்டு
புலையாடு கின்றகடையர்
கைவைத் தழைத்துவந் துபசார மொழிபேசிக்
கைவசம துற்றகினிபோற்
கைக்காசி னைப்பறித் துட்கார வைத்திடுங்
கணிகையர்கள் விரகமூட்டுஞ்
சையோக முற்றிடா தருள்புரியு மெய்யனே
சப்பாணி கொட்டியருளே
சங்கடமெ லாந்தவிர்த் தருளுமாய்க் குடிமுருக
சப்பாணி கொட்டியருளே.
36✓
ஏழைத் திறங்கொண்ட வாழைக் குலஞ்சாடி
யிகல்பூக மடல்கள்கிழிய
எருதுகா லடிபடவு முழுசாலி யும்விளைய
யிப்பியின் றுகுத்தமுத்தை
வாழைக் குலைக்கனிகள் மாமயக் கங்கொள
வளருமஞ் சளுமிஞ்சியும்
மால்நிறங் கொள்பச்சை மேனிமுத் துஞ்சொரிய
வன்பரவை யலையுமதிர
கோழைப் படாச்செல்வ மேழியர்கள் கையுறக்
குபேரரா யன்புமுதிர
கொண்டல்முத் துஞ்சொரிய விண்டனத் தம்பெருகு
குமரியின கர்க்குவடபால்
தாழைக் குலைப்பூநெ ருங்குமாய்க் குடிமுருக
சப்பாணி கொட்டியருளே
சாற்றிடு முருணகிரி போற்றிட வருங்குகா
சப்பாணி கொட்டியருளே.
37✓
கடவாய் கிழித்தழுத குரலோசை செவிபுகக்
கண்டுவெண் ணிலாவிரிப்பக்
காதிலிடு வயிரமென வேமுறுவல் காட்டிடக்
கருணைகூர்ந் தோடிவந்து
மடமாது பார்வதியின் முலையமுத மூட்டவே
வாய்மடித் தேதுடித்து
வயிறுநிமி ரப்பருகி விளையா டிடச்சரவ
ணையருகில் முக்கண்ணனும்
அடவா யெடுத்தியென வம்மெகை சேர்த்திட
வப்பா வருத்தியரசே
ஆனைமுக வற்கிளைய குகனையத் தந்தைமடி
யதனிற் கிடத்திவிட்டுத்
தடமா டிடத்தேவி யிடமேவி டப்பரம
சப்பாணி கொட்டியருளே
சந்தத் திருப்புகழ் விளங்குமாய்க் குடிமுருக
சப்பாணி கொட்டியருளே.
38வேறு✓
பவளக் காடுஞ் செழுங்கனியும்
பன்னீ ருடன்சந் தனமிசையும்
பகர்செண் பகப்பூ வாதிமணம்
பரிவா யெங்கும் பரிமளிக்கக்
குவளை மலர்கண் சிவப்பவந்து
கொடுக்க முலைப்பா லமுதருந்திக்
குலுங்க நகைத்து விளையாடிக்
குலவி யுலவி வரும்வேளை
துவளும் புழுதி மேனியதைத்
துடைத்து வாச நீராட்டிச்
சுடர்வா ணுதலிற் றிலதமிட்டுத்
தொட்டி லிட்டுத் தாலாட்டித்
தவள நிறத்தா னாயுதித்தோய்
சப்பா ணியுமே கொட்டுகவே
தருக்கள் சூழாய்க் குடிமுருகா
சப்பா ணியுமே கொட்டுகவே.
39✓
காசி னாசைப் பேய்பிடித்துக்
காம விடனா கப்பகுவாய்
கடக்க மயங்குந் தேரையெனக்
கலங்கி மயங்கிப் பரதவித்துப்
பேசும் வழியொன் றில்லாமற்
பெருமூச் சிட்டுப் போதமற்றுப்
பிரியா நிழல்போற் பின்தொடர்ந்துந்
பிரிய மாக முன்னம்வரும்
வேசை யவர்தன் விரகமுற்று
வீணாட் கழிக்கும் வெறுவியனை
விரைவா யுன்மேல் மதுரகவி
விளம்ப வேண்டும் விடைபுரிந்துன்
தாச னெனையாண் டருள்முருகா
சப்பா ணியுமே கொட்டுகவே
தருவா மூாயர் குடிக்கரசே
சப்பா ணியுமே கொட்டுகவே.
40வேறு✓
இந்திரன் வந்து புகழ்ந்து புகழ்ந்து
மிறைஞ்சு மலர்த்தாளா
யென்று முனிந்து சிவந்து சிவந்து
மிகல்புரி கின்ற விறற்றோளா
மந்திர மஞ்சு நினைந்து நினைந்து
மகிழ்ந்திட வந்த வடிவேலா
மங்கையர் சொந்த விருந்து விருந்தென
மருவிய புகழுள விறைபாலா
சுந்தர மிஞ்சு மதன்தனை யைந்து
சுரந்து புகுந்த கிரிவாசா
சொந்தனை யன்பு துணிந்து துணிந்து
தொடர்ந்திட வந்திடு முருகேசா
குந்த மரிந்தவன் மருகா முருகா
கொட்டுக சப்பாணி
கொங்கு பொழிந்திடு மாயர் குடிக்குகா
கொட்டுக சப்பாணி.
41✓
சங்கர னுங்கௌ மாரியும் புகழும்
சரவண பவகுகனே
தண்டமிழ் மாலை புனைந்திட வந்தருள்
சண்முக குருபரனே
இங்கரி யோன்மரு கோனாய் வந்திங்
கிலகிய கதிர்வேலா
இந்திரன் மகளை யுகந்து மணந்திட
வேகிய குமரேசா
ஐங்கர னுக்கிளை யவனா யன்பரை
யாதரித் தருள்குகனே
அசுரரை முடிவுற விடுபடை வேலவா
வமரர்கள் புகழ்குருவே
கொங்கு பொலிந்தரு ளாயர் குடிக்குகா
கொட்டுக சப்பாணி
குறமக ளைப்புணர் திறமுள வித்தகா
கொட்டுக சப்பாணி.