ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
வருகைப்பருவம்7 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
வருகைப்பருவம்
53✓
கற்றோ ருளத்துட் குடியிருக்குங்
கலையே வருக மெஞ்ஞானக்
கடலே வருக வள்ளிதெய்வை
கணவா வருக வானந்த
முற்றா ரறிவில் முளைத்தெழும்பே
ரொளியே வருக மலமூன்று
மொழித்தே நல்ல பத்திதரு
மொருவா வருக திருவருளைப்
பெற்றார்க் கருளும் பேரின்பப்
பெருக்கே வருக அடியர்பெறும்
பேறே வருக சிவபெருமான்
பிள்ளாய் வருக பாவலர்சொல்
வற்றாத் தமிழின் மொழிபகரும்
வாயாய் வருக வருகவே
மலம தகற்று மாயர்குடி
வடிவே லவனே வருகவே.
54✓
அய்யா வருக வாறுமுகத்
தரசே வருக வருள்புரியு
மமலா வருக வுதித்தெழும்பே
ரறிவே வருக பன்னிரண்டு
கையா வருக காருண்யக்
கடலே வருக செந்திலமர்
கந்தா வருக வெனதிருகண்
மணியே வருக காத்தருளு
மெய்யா வருக விமலசிகா
மணியே வருக மெஞ்ஞான
விளக்கே வருக பத்திக்கு
வித்தே வருக விருவிழிக்கு
மையார் வள்ளி தெய்வானை
மணாளா வருக வருகவே
மலம தகற்று மாயர்குடி
வாழ்வே வருக வருகவே.
55✓
கந்தா வருக தமிழ்மதுரக்
கவியே வருக வுமையீன்ற
கண்ணே வருக வருளுதவுங்
கதியே வருக மெய்யன்பர்
சிந்தா குலத்தைத் தவிர்த்தருளுந்
தேவே வருக சிவஞானச்
செல்வா வருக வழகொழுகுஞ்
செயலே வருக வளந்தந்
தந்தா தரிக்கும் பேரின்பத்
தரசே வருக பரசமயத்
தலைவா வருக கலியகற்றுந்
தருவே வருக வெம்பெருமான்
மைந்தா வருக மாமயில்வா
கனனே வருக வருகவே
மலம தகற்று மாயர்குடி
வாழ்வே வருக வருகவே.
56✓
சிறிது மரையிற் கலன்பூட்டேன்
செய்ய விழிக்கு மையெழுதேன்
திருவா ணுதலிற் றிலதமிடேன்
செம்பொற் சிலம்பு தாட்கணியேன்
வெறும்வாய் திறந்து பாலாருத்தேன்
மேனி துடைத்துப் பூச்சூடேன்
விரும்பும் மழலைச் சொற்கேளேன்
வெண்பட் டாடை தானுடுத்தேன்
அறுமா முகத்தைத் தான்பாரே
னருள்மெய் யுச்சி யதைமுகரேன்
அப்பா வரசே யெனவன்பா
லழைத்தால் வாராப் பிள்ளையுண்டே
மறுமை விளையாட் டிங்குமுண்டோ
வடிவேல் முருகா வருகவே
மலம தகற்று மாயர்குடி
வாழ்வே வருக வருகவே.
57✓
ஐந்து முகத்தா லழியாத
வாயுள் பெற்ற வசுரேசன்
ஆயி ரத்தெட் டண்டமர
சாக்ஷி புரியு மாக்ஷியினால்
நைந்து துடிக்க வமரரையு
நலிய மெலியச் சிறையிலிட்டு
நானென்றிறு மாணவங்க் கொண்டு
நாகர் வேந்தைத் துன்புறுத்திப்
பைந்தாள் சிவக்க வன்பரெலாம்
பரமா நினது கயிலைவந்து
படும்பா டதனைத் தான்புலம்ப
பதரா தீரென் றாறுமுக
மைந்த னாயா தரிப்பனென
வரமீய்ந் தவனே வருகவே
மஞ்சு தவழு மாயர்குடி
வாழ்வே வருக வருகவே.
58✓
பூமா திலங்க யோத்திநகர்
புகழுந் தசர தன்புதல்வன்
போந்த வுதாரன் ஸ்ரீராமன்
பூவை சீதை தனைமணந்தே
கோமா னென்ன வருஞ்சமயங்
கூனி செய்த சதியாலே
கொடுங்கா னேகக் கோதைதம்பி
கூடப் பிரிந்த வேளையிலே
காம விடங்கொண் டிராவணனுங்
கபட வேட மாகவந்து
கன்னி யவளைக் கொடுபோக
கைமாத் திரைப்போ தமர்புரிந்து
சேம மாகச் சிறைமீட்டுந்
திருமால் மருகா வருகவே
திருவாழ்ந் திலங்கு மாயர்குடித்
தேவே வருக வருகவே.
59✓
திங்கட் கிரணத் திருவொளியே
தேவர் புகழுஞ் சிவவொளியே
தேனே பாலே தெள்ளமுதே
திகட்டாக் கனியே கனிவளமே
யெங்கள் குலத்துக் கதிபதியே
யினிய மழலைச் சொற்கிளியே
யெந்தை முகம்பார்த் தமுதிரங்கி
யெக்கி வயிறு குழைந்திடவே
தங்கள் சிவகா மித்தாயார்
தான்கை சேர்த்தங் கெடுத்தணைத்துத்
தான்கை யமர்த்திப் பாலாட்டித்
தாலாட் டிடவே வளர்குமரா
மங்கை வள்ளி தெய்வானை
மணாளா வருக வருகவே
மலம தகற்று மாயர்குடி
வாழ்வே வருக வருகவே.
60வேறு✓
ஊனசம் பந்தம்வந் துற்றவிது நாள்வரை
யுலகமா யையிலுழன்று
ஓடியோ டித்திரியுந் துறவினர்கள் சொற்கேட்டிங்
குண்டுண் டுறங்குவதலால்
ஈனசம் பந்தமாம் வினையுட்டி யெனையோட்டி
யேமாந் திருக்கவைத்தாய்
என்னகுறை செய்தனன் முன்னமியான் புகலுவா
யிறைவனே நீயிரங்கி
ஞானசம் பந்தனாய் நற்குருவ தாய்வந்து
நானுமுன் றொண்டுபுரிய
நல்லவுப தேசமரு ளில்லையெனில் விடுவதிலை
ஞானா கரக்கடவுளே
மானசம் பந்தமெனை வாட்டுதலை மாற்றிட
வடிவேலவா வருகவே
மாமேவு மாயர்குடி வாழுமுரு கையனே
வள்ளிகணவா வருகவே.
61சந்தம்✓
மனநிலை தளர விடுவது மழகா
மதிதரு குழகா முருகேசா
வருவது கடமை யிதுததி யெனவே
மயில்மிசை பவனி வருநேசர்
மகிமையு மிதுவா வுளமதி னினைவா
மறுபதி லுடனே யருள்வாயே
மழவிடை யுடையார் சுதனென வளரு
மறுமுக விரைவிற் றருவாயே
அனலவன் மதியன் கதிர்வன சலன
டியவர் புகழ வருவோனே
அசடனை விகடக் கபடனை யுனது
அடியினை பணிய வுருள்வாயே
அசுரரை மடிய விடுபடை யதிர
வமரது புரிய வணைவோரும்
அதிசய முறவே பகைவர்க ளுடனே
அபசெய முறவே அடுதீரா
கனவினி லுனது தெரிசன மருளக்
கருணைசெய் வதுவுன் கடனாமே
கடுவிட மதனைப் பருகிய சிவனார்
களிகொளப் பொருள்தோ தியவீரா
கருநிற வசுரா தியர்குல கலகா
கௌணியன் மதலா யெனுநீதா
கனகனை நிகர்போ தகனையு மகலக்
கடிதமர் சிறையி லெனவோதச்
சினமதை விடுதி யெனவரன் வினவத்
திருமலை யரசா யுறவோனே
சிவனனு பவமே பெறவரு தவமே
திருவடி பணிய வருள்வாயே
தினகர னனைய குருமுனி வார்சொற்
செவிபுகு குகனே வருகவே
திகழுமாய்க் குடிவா ழரகர முருகா
தெய்வசி காமணி வருகவே.
62✓
பகையக லருண கிரிமன முருகப்
பழனிவேல் முருகா வருகவே
பகல்நிசி சரரை யிகலியே வாகை
பன்னுநற் றலைவா வருகவே
நகைதிரி புரமே யெரிசெய்த பரம
நாயகன் பாலா வருகவே
நடனம திடவே காளியும் நாண
நாடிய சிவமே வருகவே
முகையது விரிய நவமது பெருக
முளரியந் தாளா வருகவே
முருகவிழ் மணமே வியகுற மகளை
முறுவல்செய் திடுவோய் வருகவே
வகையென சொலுதி யெனவரி வையர்முன
வருகுரு பரனே வருகவே
மலைமகள் முலையா ரமுதது பருகி
வளருமாய்க் குடிவேள் வருகவே.