முருகன் App
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
விநாயகர் காப்பு1 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை

விநாயகர் காப்பு

1வெண்பா✓
பிள்ளைக் கவியாம் பெரியபிர பந்தமதை
வெள்ளைக் கவியாய் விளம்புதற்கே—துள்ளுமத
வாரணத்தா னுன்னை வணங்குதுநல் வாக்கருளுங்
காரணத்தா லுள்ளங் கனிந்து.
2✓
பாடற் கினிமைதரும் பத்திக்கு வித்தாகும்
நாடற் கினிமைதரு நற்குநனைக்—கூடற்குப்
பங்கமிலா ஞானப் பரிசளிக்கும் பாரினிலே
சங்கரன்றன் பிள்ளைத் தமிழ்.
3அவையடக்கம்✓
பாலினீர் பிரித்துப் பருகும் புட்போல்
நூலி னுட்ப னுகரும் புலவர்கள்
மாலி னுக்கு மருகன் பிள்ளைத்தமி
ழாலின் னூலையன் பாகக் கையாள்வரே.
4✓
தேமேவு மாய்க்குடிவாழ் தேசிகன்பிள் ளைத்தமிழைப்
பாமேவு செந்தமிழாற் பாடவே—நாமேவும்
வாணியாள் வாலை மனோன்மணியா ளென்மனதில்
காணியாய் நின்றருள்வாள் காண்.
✓
காப்புச்செங் கீரையொடு கைத்தாலஞ் சப்பாணி
யார்ப்பமுத்தம் வாரானை யம்புலியே—பார்ப்பவளர்
சிற்றிற் சிறுபறைதேர் சேரும் பருவமுடன்
முற்றும்பாத் தாகவரு முன்.