ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
காப்புப்பருவம்2 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
காப்புப்பருவம்
1திருமால் வணக்கம்✓
தெய்வப் பிடியைக் குறமாதைச்
சேரும் பெருமா னயிற்பெருமான்
றீரா வினைதீர்த் தருள்பரியுஞ்
செவ்வேட் பெருமான் சிவபெருமான்
கைவைத் தெடுத்து முகத்தனைக்கக்
கௌரி முலைப்பா லமுதருந்திக்
களிப்பாய் ஆயர் குடிவாழுங்
கந்தப் பெருமான் றனைக்காக்க
மையிட் டழுத்தும் விழியுமையாள்
வாழ்த்துந் தமய னாகவந்த
வள்ளற் பெருமான் றிருவின்மண
வாளப் பெருமா னருட்பெருமான்
சைவத் துறைமே லோங்கிடத்தற்
காற்கும் பெருமான் சகப்பெருமான்
சத்து சித்தா னந்தமுறத்
தந்து வந்தாள் பெருமாளே.
2சிவபெருமான் துதி✓
தினகர னனைய வொளிவளர் கருணை
செயமுன மருவு விடைபாகன்
சிவசம யமுமே பெருகவு மமணர்
திறமதை யொழியப் புரியோகன்
திருவடி பணிய வரகர வெனவே
துதிசெய வளரு மதிமோகன்
செகமுழு வதுமே புகழவு மமரர்
சிறைவிட வருவோ மெனுந்தியாகன்
மனமது வுருகி நினைபவ ரகமே
மருவிய சிவமா யுறைநீதன்
மருவிய கயிலை யிறையவ னெனவே
வளர்குரு ஞான மருள்நாதன்
மலைமக ளிமய குமரியை மருவி
மனமகிழ் வுறவாழ் மறைபோதன்
மருளினை யகல வருள்வது கடமை
மழுவிடை யாயுன் சரணாமே.
3✓
சினமது பெருக வருமசு ரரையே
செயமுற வடிவேல் விடுவோனை
திடுதிடு வெனமுன் னவுணர்கள் பதறச்
செகமதி லமரே புரிவோனை
தினமயில் முதுகிற் பவனியும் வரவே
திருமலை வாயி லமர்வோனை
திருமரு கனுமாங் குறமகள் கொழுநன்
சிறியனைப் பாட வருள்வோனை
அனவர தனைமுன் னமரர்க ளுயவே
யருள்விட மமுதாய்க் கொளவேதா
னதுமிட றுறவே வமலையு முடனே
யதையமு தாகச் செயவேதான்
அருள்புரி கருணை யதுமிக வுதவி
யகமகிழ் வுறவே யதுவேளை
யறுமுக குமர சரவண பவனை
யாய்க்குடி வளர்முரு கையனைக் காக்கவே.
4உமையவள் துதி✓
சிந்தா மணிக்கதிர் விரித்திலகு மேனியுஞ்
சித்திரத் தெழுத வொண்ணாச்
சிகரவரை போலிலகு திண்புயத் தழகுடன்
செம்பொற் பதக்க மார்புந்
தந்தா மரைக்கையுறு சதுர்வேத முறைமையுந்
தானோங்கு கல்வி வியனுந்
தானாய் விளங்கவரு கோனாகு மாய்க்குடிச்
சண்முக வனைக் காக்கவே
செந்தா மரைத்தேவி யும்நாள்கள் சதமெனச்
சேவிக்க வந்த செல்வி
திருவருளின் மகிமையா லருள்பெருகு கருணையால்
சேயேனை யிதுச மயமே
வந்தா தரித்திடுவ துன்பார மலதினி
மறுவுதவி யில்லை யதனால்
மலையரையன் மகளான நிலைமையுறு முமைநினது
மலரடி யிறைஞ்சு வாமே.
5திருமகள் துதி✓
திங்கட் குடையுஞ் செங்கோலுந்
திறமாய் நடத்துஞ் சீர்மையினால்
திருமால் மருகன் பெருங்கருணை
சிறந்த முகச்செந் தாமரையுஞ்
செங்கை யதனில் வடிவேலுஞ்
சேவற் கொடியுந் தான்பிடித்துச்
சீரா ராயர் குடிச்சுப்பிர
மண்யத் தெய்வந் தனைக்காக்க
மங்கைப் பருவ முதலாக
மாலை மணந்த தேவியென
வழங்கு மெண்ணான் கறந்தழைக்க
வையத் தொளிருந் திருமகளாய்த்
தங்குந் தயாள குணநிதியே
தவமே யுருவாய்த் தானிலகுந்
தகுதி யுடைய சௌந்தரியே
தமியே னுனது சரணாமே.
6பராசக்தி துதி✓
ஆதியிரு ளந்தகா ரத்திலறி வசைவாகி
யதிலோசை யொளிவெளியுமாய்
அருளான விருண்டுவி லலியாய்ப்பெண் ணாண்நா
யயனாகி யரியரனுமாய்
சோதியாய் விஞ்சையுப தேசித்த சத்தியாய்
சுதனாய் விநாயகனுமாய்
சுப்பிரமண் யக்கடவு ளாகியாய்க் குடிவளர்
தோன்றலைக் காத்திடுகவே
சாதிபில பேதமா யோதிவரு மக்களாய்
சரவசர வஸ்துமுதலாஞ்
சகமும் படைத்திலகு முத்தொழில் புரிந்துவரு
தற்பரைநீ யிதுவரையிலுஞ்
சேதியென் னாவெனச் சேமமா யென்றுனது
திருவாய் திறந்ததிலையே
சேயினைத் தாய்தள்ள நீதியோ நவிலுவாய்
சிற்பரா சக்தியுமையே.
நாமகள் துதி✓
திருமால் புகழ்மகள் செயமோங் கிடுமகள்
செந்தமிழ் கொண்டமகள்
செகமெச் சிடுமக ளருளூற் றிடுமகள்
தீர மிகுந்தமகள்
மருவிய மகளுமென் னாவினி லுறைமகள்
வாணியு மதுரகவி
மழைமா ரிகளென வேபொழி யருள்மொழி
மாமக ளைப்பணிவாம்
குருபர னாயருள் தருமக னாய்வளர்
குமரக் கடவுளனாங்
குகமெய்ப் பரமனென் னகமொத் திடவருள்
கோமான் சீமானாங்
கரும மறிந்திது சமயமெ னாமறை
கழறுந் தேசிகனாங்
கங்கை மிகுந்திடு மாயர் குடிவளர்
கந்தனைக் காத்திடவே.
8✓
@todo add 10 missing lines
பண்புகொ ளும்படி நண்பொடு மருவிய
பரிசும் பார்த்தவர்கள்
கண்டுநின் சன்னதி யண்டையில் வந்து
கசிந்து கசிந்துருகி
காத்திட வேகண் பார்த்திட வேயருள்
கவிகள் தழைத்திடவே.
9வள்ளி தெய்வானை துதி✓
வள்ளிதெய் வானை மணவாளா
மாமயி லேறுங் குணவாளா
வானவர் போற்றுங் கோமானே
வையக மேத்துஞ் சீமானே
மௌளவ வந்தருள் குமரேசா
மேவின வர்க்கருள் பரமேசா
விகசித ரத்தின மணிவோனே
மேவலர் தமைவெலத் துணிவோனே
கள்ள மனத்தினர்க் ககல்வோனே
களங்க மிலாமறை புகல்வோனே
கங்கையி லுற்றிட வந்தோனே
கலிதீர்த் தருளது தந்தோனே
புள்ளிக் கலபத் திவர்வோனே
புண்ணிய மாந்துதி பகர்வோனே
புகழு மாய்க்குடி வளர்குமரா
பூவைய ரிருவரைக் காத்தருளே.
10பலதேவர் துதி✓
கின்னரர் வயிரவ ரிந்திரர் நாரதர்
கிம்புரு டாதியருங்
கிருபை பொருந்து நவக்கிர காதிபர்
கெருடர்சித் தாதியரும்
வன்ன மிகுந்துரு ஞஞ்சத் தியர்களும்
வானவர் தானவரும்
மலரய னரனரி யிம்பர்க ளென்பர்கள்
மாமுனி வோர்களுமே
சொன்னல மிஞ்சிய சூரியர் சந்திரர்
துதிசொலு நால்வர்களும்
தும்பி முகன்குக னைம்பு தத்தர்கள்
தொண்டர்க ளண்டர்களுங்
கன்னலின் முக்கனி யென்ன வருட்கவி
வாணரும் நாவலருங்
கருணை மிகுந்தரு ளாய்க்குடி முருகனைக்
காத்து முவந்திடவே.
11குமரகுருபரன்துதி✓
சரவண பவகுக வறுமுக குருபர
சண்முக னேகாக்க
தருண மறிந்துமுன் னருண கிரிக்கருள்
தற்பர னேகாக்க
பிரணவ முறைதனை யரனிட மோதிய
பெம்மா னேகாக்க
பேதைய ரிருவோர் தம்மை மணந்திடு
பெருமா னேகாக்க
அரவணை துயில்பவ னரிமரு மகனே
வறுமுக னேகாக்க
அந்தரர் கந்தரு வாதியர் போற்றிடு
மையனே நீகாக்க
சிரவண முறுமனு பூதியர் துதிசெய்
சேவல னேகாக்க
திருவள ராய்க்குடி முருகனைக் காத்தருள்
சின்மய குருபரனே.