ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
சிற்றிற்பருவம்9 / 10
ஆய்க்குடி முருகன் பிள்ளைத்தமிழ் · ஸ்ரீமான் சிவராமலிங்கம் பிள்ளை
சிற்றிற்பருவம்
73✓
மன்றல் கமழும் புதுப்புனலில்
வருநற் கனக மணற்கொழித்து
வருணன் கருணைப் பேரமுதை
வார்த்துச் சேர்த்துச் சுவர்வளர்த்து
துன்று பசியை யகற்றுதற்குச்
சோறே யடுகட் டியுயிரவில்
துயிலு மரங்கு மிதுநாளுஞ்
சுகிர்தா நினது பூசைசெயத்
தென்றல் மருவு மேடையிது
திண்ணை முத்த மிதுவெனவே
சிலபே ரமைத்து முக்கணிதேன்
றினமா வோடே யட்டதின
தென்றே நீயு மறியாயோ
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
திருவா மூாயர் குடிமுருகா
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே.
74✓
அளியாச் செனனப் பிணியுமல்ல
வசுரர் புரிந்த சிறையுமல்ல
அசலம் பொடித்த வயிலுமல்ல
வரக்கர் குறவர் காவலல்ல
வளியாங் குறத்தி குமருமல்ல
மதுரக் கவிஞர் வறுமையல்ல
வருத்துஞ் சிலத்து ரோகமல்ல
வாட்டுஞ் சிலவே ஞடலமல்ல
களியாங் கடலுஞ் சூருமல்ல
காம விடநோய் தானுமல்ல
கவந்தம் புரியுங் கோட்டியல்ல
காலன் விடுத்த பாசமல்ல
தெளியா தவையா தொன்றுமல்ல
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
திருவா மூாயர் குடிமுருகா
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே.
75✓
நீண்ட மாயப் பலசமய
நிலையில் வீழ்ந்தங் கழியாமல்
நீல விழியார் வலையிலுற்று
நெஞ்ச மயங்கிச் சுழலாமல்
வேண்டச் சுத்த சைவநெறி
மேவும் விரதந் தான்பூண்டு
விளங்குஞ் சரியைக் கிரியையொடு
மேலா யோக ஞானமுற்று
ஆண்ட குரவ னருளாலா
ணவத்தை யகழ்ந்து சுத்திசெய்து
அத்து விதமார்க் கத்தினனு
போக முறவு மயன்பொறியைத்
தீண்டி யழிக்குந் திருவடியாற்
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
திருவா மூாயர் குடிக்குகனே
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே.
76✓
சேடிப் பெண்க ளுடன்கூடிச்
சிறுவீ டமைத்து விளையாடத்
தினமு நீவந் தழிப்பதென்னே
சிறியேஞ் செய்த பிழையேதோ
ஆடி மகிழு முருகோனே
அரசே யெங்கட் காரமுதே
அரனார் களிப்புற் றெடுத்தணைக்கு
மருமைக் குழந்தாய் பாமாலை
சூடித் துதித்தோ மனமிரங்கித்
துன்பம் புரியா தருளன்பர்
துணைவா மூலத் துதித்தெழுந்த
சுடரே ஞான சொரூபனாய்ந்
தேடும் பொருளே தேசிகனே
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
திருவா மூாயர் குடிக்கரசே
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே.
✓
வழிக்குத் துணையாய் வருங்குருவே
வளர்மெஞ் ஞான மாந்தருவே
வளருங் கரும்பே மாங்கனியே
வடிவேல் பிடித்த சேவகனே
அழிக்கு மளிக்கும் படைப்பெனுமூன்
றான தொழிலைத் தான்புரிய
அறுமா முகனாய் வந்துதித்திங்
கமரர் சிறையை விடுத்தோனே
விழிக்கு மையிட் டுமைவருந்த
மென்பால் சுரப்ப விளையாடி
வீணா யெமையுந் துன்புறுத்த
வேண்டா மமுதந் தானருந்திச்
செழிக்க வளருஞ் சிவபோகச்
செல்வா சிற்றிற் சிதையேலே
தெங்கு நெருங்கு மாயர்குடித்
தேவே சிற்றிற் சிதையேலே.
78✓
பாடக கிடையாப் பழம்பொருளே
பாட்டிற் கிசைந்த தமிழ்க்கடலே
பசும்பூங் கிளியே மறைமொழியே
பாகின் ரசமே வானமுதே
நாடக கிடையாக் கிஞ்சுகமே
ஞானா னந்தப் பரசுகமே
நளின மலர்த்தாள் நோகாதா
நாங்கள் புகல லாகாதா
ஆடக் கிடையாப் பம்பரமே
ஆசை தவிர்க்கு மெம்பரமே
அடியா ரெவர்க்கு மதிபதியே
வருளைப் பெருக்கும் பசுபதியே
தேடக் கிடையாத் திரவியமே
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
திருவா மூாயர் குடிக்கரசே
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே.
79✓
வையம் புரக்குந் திருமகளு
மாமிக் கொடுமை புரியாமல்
வாணி தனது மாமிக்கு
மருகிக் கொடுமை செய்யாமல்
தெய்வ நாக ரீகமதாய்ச்
சிறப்பாய் வாழ்ந்தங் கறம்புரிந்து
சேம மாக நாயகன்சொற்
றிறம்பாக் கற்பி னெறிநடந்து
உய்ய விருவ ரொற்றுமையா
யுவகை யோடு நன்மதியா
யொருவர்க் கொருவ ரந்தரங்க
வுண்மை காட்டி யுபசரித்துச்
செய்கை தவறா தருள்குமரா
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
திருவா மூாயர் குடிக்குகனே
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே.
80✓
சொந்தப் பதுமச் சரவணமுஞ்
சோலை மலையுங் கந்தவெற்புஞ்
சுவாமி மலையுந் திருத்தணிகை
சுருதி வழுத்து மேரகமுங்
கந்த வாவி னன்குடியுங்
கழுக்குன் றுடனே கதிர்காமங்
கழுகு மலையுந் திருமலையுங்
கயிலை மலையுங் குற்றாலஞ்
சந்தம் பொலியும் பரங்குன்றந்
தனிலும் பழனி தென்னிலஞ்சி
சயிலந் தோறும் விளையாடி
சண்முக கவனாய் வீற்றிருந்து
சிந்து பூவின் மணம்பொருந்துந்
தேவே சிற்றிற் சிதையேலே
திருவா மூாயர் குடிக்கரசே
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே.
81✓
மேவி நினது சரவணையில்
மிகநீ ராடி நீறணிந்து
விளங்கு மெழுத்தா றையுஞ்செபித்து
விமல நினது திருமுன்பா
யாவி மெய்யும் பொருளுனக்கர்ப்
பணமா யுவந்து தந்துதன
தகமே யுருகத் திருப்புகழை
யன்பாய்ப் பாடி வலம்வந்து
கூவித் தொழுது கந்தசஷ்டி
குமரர்க் குகந்த கார்த்திகைநாள்
கூறும் வெள்ளி தினங்களிலும்
குகனின் விரதந் தானிருந்து
சேவித்து வந்து துதித்திடுவோஞ்
சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
தெங்கு நெருங்கு மாயர்குடித்
தேவே சிற்றிற் சிதையேலே.
82வேறு✓
செந்தமி ழோதிட வந்தரு ளுங்குக
சிற்றிற் சிதையேலே
சேவற் கொடிவடி வேல்கைக் கொண்டோய்
சிற்றிற் சிதையேலே
செந்தழல் போலொளி ருந்திரு மேனியாய்
சிற்றிற் சிதையேலே
செங்கம லங்கள் புகுந்தவள் மருகா
சிற்றிற் சிதையேலே
செந்தினை மாவன முன்சென் றவனே
சிற்றிற் சிதையேலே
சிறுகுற மான்றெய் வானை மணாளா
சிற்றிற் சிதையேலே
செந்தில் வளம்புகு மெந்தை யமர்ந்தவா
சிற்றிற் சிதையேலே
சீரா ராயர் குடிக்க ணுறைந்தவா
சிற்றிற் சிதையேலே.