இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
அம்புலிப்பருவம்7 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்
அம்புலிப்பருவம்
61சாமம்✓
தரணியில் எங்குஞ் சரிசம மாகத்
தண்ணொளி பொழிவதனால்
தண்ணொளி பருகுஞ் சரபங்க னடியார்
தமைமிகக் கொண்டுளதால்
அரன்புரந் தருளும் அப்புக லூரணம்
அண்டிய மேன்மையினால்
அல்லிருள் கடியும் அரும்பணி புரியும்
அப்பெரும் புண்ணியத்தால்
பெருநில வாம்நீ பிறங்குசெங் கோன்தனைப்
பீடுற ஒத்தல்கண்டான்
பிலகமு தின்வாய்ப் பெருகிட ஆடப்
பேரருள் கொண்டழைத்தான்
அரும்பிணி கழுவும் அருட்கிண றூற்றம்
அமையிணு வைப்பதியில்
அலைமுகில் வானம் அவ்வழி அனுப்ப
அம்புலி ஆடிடவா.
62✓
சுடர்விடும் வெள்ளித் தொழுகையர் சூழ்ந்து
தொழுதிட இருப்பதனால்
துயில்விழி இன்மை தொண்டர்நல் லாழித்
துள்ளிசைத் தோத்திரத்தால்
அடிமனம் இருகட் டழகியர்த் தழுவும்
ஆவலிற் குழைந்திடலால்
அள்ளுசெந் தமிழின் அழகிய கவிக்கும்
அழுதினை ஊற்றுவதால்
தடமலர்க் கண்ணான் தன்னைநீ ஒத்தல்
சரிவரக் கண்டதனால்
தன்னுடன் ஆட உன்னையும் அழைத்தான்
தண்தவப் பயனுடையாய்
குடந்துயிர் பால்நெய் குங்குமம் தேன்தீங்
கொழுங்கனிச் சாற்றினிலே
குடமுழக் காடுங் கோவுறை இணுவைக்
கோயிலம் புலியாடவா.
63✓
இருள்மறைத் திடுங்கால் இடையிடை ஒளித்தல்
இந்திரன் அன்புடைமை
இரவலர்த் தாங்கும் இன்னரு ளாலே
எல்லொளிப் பொன்முகத்தால்
திருமன மழலைத் திகழ்ந்தொளிர் வதனால்
சீதனக் காட்சியினால்
சேந்தனெம் பெருமான் தேர்ந்தறிந் தொப்புச்
சிறுகரத் தாலழைத்தான்
வருதுயர் யாவும் மலமறு தீர்க்க
வருவன இதையறிந்து
வரந்தர நோற்று மனபலந் தேடி
வருத்தம்வெல் பக்குவத்தர்
திருவுளச் சீட்டால் சேய்சித்தங் கண்டு
தீர்ப்பென ஏற்பவர்ஊர்த்
திருப்பதி இணுவைச் செறிமணல் வீதித்
தேர்ந்தம்பு லீயாடவா.
64பேதம்✓
ஒருமுகங் கொண்டோய் ஒண்முகம் ஆறாய்
உள்ளவன் எம்மழகோன்
உறுமறு கொண்டாய் உன்னிடம் மாசாய்
ஒன்றிலன் நம்மெழிலோன்
ஒருகலை தினமும் ஒழிந்துபின் வளர்ந்தே
உலைபவன் நீசெய்யனோ
உள்ளதே உளவா றோங்குசத் தியமாய்
உயிர்க்குலங் கழுவல்செய்வோன்
வருகஎன் றுன்னை மகிழ்ந்தாறு வாயால்
மலர்க்கரங் கொண்டழைத்தான்
வள்ளியந் தோட்டம் மண்டுசெங் கிழங்கை
வாஞ்சையாய்க் கல்லிவந்து
தருபவர் பொங்கி தவஇணு வைக்கோன்
தளதள மண்டபத்தில்
தழுவியே ஆடுந் தவப்பயன் காண்பாய்
தண்ணம்பு லீயாடவா.
65✓
வருகையில் போகாய் வருகிலை போங்கால்
மாடிறை சூத்திரம்போல்
மயில்மிசை ஏறி மகிழ்சுதந் திரனாய்
வந்துசென் றாடும்எங்கோன்
நரித்தக்கன் சாபம் நலித்திட நலிவோய்
நலிக்கரும் இறைமைகொண்டு
நான்முகற் கூட நறுக்கெனுங் குட்டு
நல்கிய இறைவன்எஞ்சேய்
பெருமையில் ஒல்காப் பேதையுற் கிரங்கிப்
பேரருள் முருகழைத்தான்
பெற்றது போதும் பிடிசாபம் சிகிச்சைப்
பிழையணு காஇணுவைப்
பெருந்தளி நிரம்பும் பெருங்களி யுணர்ந்து
பிறையம்பு லீயாடவா
பேரிறை நாமென் பிழையணு காணர்ப்
பிறையம்பு லீயாடவா.
66✓
இரவினில் மட்டும் எழிலொளி பெய்வாய்
ஏற்பகல் வெளிறிடுவாய்
இரவினி லன்றி ஏற்பகல் தனிலும்
இன்னொளி பொங்கும்நஞ்சேய்
பெருவயி றென்று பிள்ளையார்ப் பழித்துப்
பெற்றசா பத்திழிந்தாய்
பிள்ளையா ரண்ணன் பேணிடுந் தம்பி
பிறங்கொளி நங்கடம்பன்
அருகினில் வன்னி அகில்கடம் புபன்னீர்
அளையுஞ்சந் தனமரங்கள்
அரளிசண் பகம்நெஞ் சள்ளிடுங் கமழ்பூ
அடவிவிஞ் சிணுவைக்கந்தன்
கருதிலன் ஒல்வாக் களங்கங் கைநீட்டிக்
களித்திட அழைத்தமர்ந்தான்
கண்டிட மண்ணில் களிமிகும் விண்ணூர்
கனிந்தம்பு லீயாடவா.
67தானம்✓
கண்கவர் புள்ளிக் களிமயில் மீது
காத்துன்னை ஆடவைப்பான்
கமலப்பூ முகங்கள் கருவிழி கனிந்து
களித்தீவன் நயனதீட்சை
கொண்டலையுஞ் சேவற் கொடிபிடித் தாடக்
கொடுத்துன்னை உருகவைப்பான்
கொடிபிடி கைகள் கூத்திடுங் கால்கள்
கொள்ளென்று தந்தருள்வான்
தண்டடையுங் கால்கள் சதங்கைகள் பாடச்
சாரலங் குரவையிட்டுத்
தலையசைத் தேநீ தட்டிடத் தாளம்
தனைமறந் தேசிரிப்பான்
வண்டலம் பாவை சிறுமியர் வைக்கும்
மணல்மலி தெருக்களண்டும்
வளர்இணு வைக்கோன் வாவெனச் சொன்னான்
மகிழ்ந்தம்பு லீயாடவா.
68✓
ஆவணித் திங்கள் அணைசதுர்த் தியிலே
அடியரேச் சுண்டுன்சாபம்
ஐங்கர அண்ணற் கெஞ்சியும் நீக்கி
அருள்செய்வன் அத்தினொடு
பாவியத் தக்கன் பகர்ந்தசா பத்தின்
படியினுந் தேய்ந்திழுக்குண்
பழியொழித் தருளப் பரமன்நல் தந்தை
பணிந்துடன் வரம்பெறுவான்
தூவியஞ் சேலைச் சுடர்த்திரை மாடம்
துன்னுமா ளிகைகள்விட்டும்
சுகந்தரு கோயில் தூநிழல் தூங்கத்
துண்டினை விரித்துவீழ்வோர்
ஓவியக் காட்சி ஒன்றிணு வைக்கோன்
ஓங்காரங் கொண்டழைத்தான்
ஓங்கிய விண்ணை ஒய்யென நீங்கி
உவந்தம்பு லீயாடவா
69தண்டம்✓
மறைகளுங் காணா வல்லப மிக்கோன்
வல்லசு ரர்ச்செகுத்தோன்
மதித்தொடுங் காத மலரயற் குட்டி
வன்சிறைப் பூட்டிவைத்தோன்
வெறிகொடு வந்த வேடரைக் கொடியில்
வெஞ்சேவல் கூவவீழ்த்தோன்
வெகுண்டெழுந் தானேல் வீழ்த்துவன் உனையும்
விரும்பியச் சேயழைத்தான்
வறியவ ரென்று மயிலவன் அருளை
மன்னிடா அவர்களையே
வழமையாய் எள்ளும் மாண்பதி இணுவை
மண்டிய தேவர்களும்
செறிபூத கணங்கள் சிவனுமை வீரர்
சித்திவி நாயகரும்
சேந்தன்தொண் டருமே சேர்ந்திங்கு காணத்
திகழ்ந்தம்பு லீயாடவா.
70✓
உலகியல் பற்றில் ஒன்றும்ஒட் டாமல்
ஒருவிய நெஞ்சுடையோர்
உடன்சதி சேய்கள் உறுதுணை வேலென்
றோர்ந்த சுதந்திரராய்
நிலவில்லக் கடன்கள் நெஞ்சமொட் டாமல்
நிகழ்த்தினக் கணமுமுளம்
நின்மலப் பூங்கால் நிறைநறை மாந்தும்
நீடிய ஆனந்தராய்
மலபரி பாகம் வளர்க்கவேல், ஞானம்
மன்னிய தகைமையினால்
வந்துசற் குருச்சேய் வழங்குமெய்ஞ் ஞான
வானுயர் தீட்சைபெற்றோர்
பலப்பல ரேத்தும் பரன்சின வாமுன்
பயபக்தி கொண்டவனாய்
பசும்மயில் மேலான் பதியிணு வைக்கண்
பறந்தம்பு லீயாடவா.