முருகன் App
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்
ச.வே. பஞ்சாட்சரம்
தாலாட்டுப்பருவம்3 / 10
இணுவை முருகன் பிள்ளைத்தமிழ் · ச.வே. பஞ்சாட்சரம்

தாலாட்டுப்பருவம்

21✓
சுடரும் பசும்பொன்னின்
தூயமணித் தொட்டிலிலே
சுருளும் நுரையள்ளித்
தொக்கபனி மெத்தையெனுங்
கடிபூங் கமழ்சேக்கைக்
கமலப்பூ ஆறினது
கட்டாய்ச் சிரித்துக்
களிப்பவனே தாலேலோ
வடியும்உன் வாய்த்தேன்
மாந்திநிமிர் உமையம்மை
வாஞ்சை முகங்கனிந்து
மகிழ்ந்தாட்டும் பொன்னழகே
அடியர் மலியிணுவை
ஆனந்த சொர்க்கமென
ஆக்கும் அருளாளா
ஆரமுதே தாலேலோ.
22✓
அங்குன் றன்தந்தை
ஆதிக்கே பிரணவத்தின்
ஆழப் பொருளைமுன்
அந்தரங்க மாயுரைத்தோய்
கங்குச் செதில்பாய்
கருமேனிப் பனைகளெலாங்
காவடிக ளாடிக்
களிகூருங் குளக்கரையில்
இங்கெம் மிணுவில்
இடங்கொண் டெழுநிறைவே
எண்ணச் சுகசாந்தி
இறைக்கும்வான் கற்பகமே
பொங்கும் அமிழ்தேசிவ
போகச் சிகரமதே
பொன்னே மணியே
புதுப்புனலே தாலேலோ.
23✓
அண்டம் பலவும்
ஆனந்த மாயுன்றன்
ஆடுந் தொட்டில்
அசைவினிலே சேர்ந்தாடும்
தொண்டர் அகநாச்
சுவையூறி அள்ளூறத்
துதையத் துதையத்
துளும்புந்தேன் வான்மலரே
தண்டைச் சிலம்பின்
சல்சல் ஒலிகங்குற்
சாமத் தணுங்குஞ்
சிவசந்திப் பதியிணுவை
மண்டுஞ் சுகமே
மங்கலமே ஊழ்தீர்க்கும்
மந்திரமே நல்லோர்
வணங்கிறையே தாலேலோ.
24✓
பொட்டல் மணல்வழியில்
பொசுங்கும் வெயில்வேளை
பொல்லாக் களைப்போடு
புரியாமல் உன்வேடம்
சுட்ட பழங்கேட்ட
சூதறியா ஒளவைக்குச்
சுட்ட பழம்வீசிச்
சுடர்க்குஞ் சுடார்வீந்தோய்
இட்டேன் அடைக்கலமாய்
எனையுன் அருட்சித்த
இன்ப வழிபோக்க
என்போர் இணுவையனே
கட்டிக் கரும்பே
கடவுட் கனிச்சாறே
கண்கள் துயின்றிடினுங்
காண்விழியாய் தாலேலோ.
25✓
@todo add 4 missing lines
பச்சைப் புனம்மேல்
பச்சைவயல் தாழ்ந்ததுவாய்
பச்சைப் பசுங்கிளிகள்
ஏராளம் படிந்திங்கும்
அச்சில் அடங்கா
அரியதிருப் புகழ்பாடும்
அருண கிரிக்கிளிகள்
ஆயிரமாய்த் தெரிகின்ற
இச்சைக் கினிய
இணுவைக் கொருபுகலே
இந்தக் கலங்கரையில்
ஏற்றொளியே தாலேலோ.
26✓
அண்டுந் தலங்கள்
ஆறுபடை வீடுகளில்
ஆடும் மயிலில்
ஆனந்த மாய்ப்புகுந்தே
அண்டர் அரணே
அருள்மாரி தூர்ப்பவனே
அயில்கொண் டந்நாளில்
ஆழி வறுத்தவனே
வண்டு விழிக்கா
முன்னம் மகிழ்ந்தெழுந்து
மலரா முன்னம்
வண்ண மலர்பறித்துக்
கொண்டுன் னடிகள்
குவித்து வணங்கடியார்
குடியோங் கிணுவைக்
கொஞ்சொளியே தாலேலோ.
27✓
கேட்டுக் கிடைத்த
வரங்காக்கும் என்றவுணர்
கேடு புரிந்தார்
கேவலமாய் வீழ்ந்தார்கள்
ஈட்டென் காப்பில்
இருந்தல்ல செய்வீரேல்
இதுதான் உமக்கும்
என்றுள் ளுரைப்போனே
ஆட்டுக் கடாக்கள்
அன்னபுகைக் கன்றுகளுள்
ஆங்காங்கே முருகா
ஆர்க்கும் ஒலிகேட்கும்
தோட்ட வெளிசார்
தொல்லிணுவைப் பதிக்கென்றுஞ்
சொக்குங் குழந்தாய்
சுகவுற்றே தாலேலோ.
28✓
கச்சியப் பன்சந்தக்
கவிதைத் தலைமகனே
கச்சிப்பே ரம்மை
காந்தத் திருமகனே
நொச்சிக் குழைநாட்டி
நுண்கனவில் எழுந்தன்பர்
நோற்குந் தளியங்கு
நாட்ட நுவன்றவனே
அச்சங் களிப்போ
டன்றமைத்த ஆலயமாய்
அழகார் இணுவைப்
பதியமர்ந்த அற்புதமே
பிச்சிக் குறவள்ளிப்
பித்தனென ஆனவனே
பிள்ளைக் கனியே
பேரமுதே தாலேலோ.
29✓
ஏறும் மயிலான
மாமன் தேவேந்திரற்கும்
இன்பம் அளித்த
எழில்நிலவே இங்குவரும்
வீறுண்ட உச்ச
வெளிநாட்டுக் கலைஞருமே
மெய்மறந்து வீழும்
மிகுங்கருணை ஆறுமுகா
நாறு மலர்க்கூந்தல்
நன்மாதர் பூமழையால்
நாளும் அருளோங்கும்
நல்லிணுவைப் பூஞ்சுடரே
ஆறுமனம் பார்த்தென்
றாறுமுகங் கொண்டோனே
ஆளும் மலர்த்தொகையே
அள்ளமுதே தாலேலோ.
30✓
செந்நெல் உமியாய்ச்
செம்பில் களிம்பாகச்
சீவனிலே நின்று
தீராப் பிணிநல்கும்
இன்னல் மலங்கழுவி
இன்பிய மாயையினால்
ஏற்ற களமாக
எழிலார் பிரபஞ்சம்
மன்னும் ஆறாறு
வாழ்வீயுந் தத்துவங்கள்
வனைந்துயிருள் வைத்து
மண்ணுக் கனுப்பி
அன்னார்ச் சகலத்தில்
அத்துவித மாய்க்கலந்தும்
ஆதிமலம் தேய்த்திணுவை
அமர்வோனே தாலேலோ