முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
அருட்கடலாய் ஆன்மா6 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

அருட்கடலாய் ஆன்மா

11வெண்பா✓
அருட்கடலாய் ஆன்மா அகத்திருத்தும் காண
அரும்பொருளாய் நல்லார் அணுகும்-பெரும்பொருளே
உன்னடியார் கூட்டத் துறைசெய் உமைகுமரா
பொன்னடியிற் சேர்வேன் புகுந்து.
12கட்டளைக் கலித்துறை✓
புகுந்துயிர் ஒட்டிய ஆணவ மான புரையறுத்தே
மிகுமருட் செந்தேன் பொழியும் கருணை மிளிர்உருவே
தகுதிமி யென்றாடு மாமயில் மீதருள் தந்தருளாய்
நகுதலை மாலையன் செல்வக் குமரா நயந்தினிதே.