முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
தேவர்க்காய்த் தெவ்வழித்துத்8 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

தேவர்க்காய்த் தெவ்வழித்துத்

15வெண்பா✓
தேவர்க்காய்த் தெவ்வழித்துத் தெய்வஎழிற் குஞ்சரிதன்
காவலனாய் நின்ற கதிர்மணியே-காவனம்
சூழ்ரத்னக் குன்றுறைவோய் சூழ்வினை போக்கிடுவாய்
பாழ்ப்பிறவி நீக்கவிப் பார்.
16கட்டளைக் கலித்துறை✓
பார்முதல் அண்டங் களனைத் தும்காணாப் பரம்பொருளே
கார்நிறக் கண்டன் குமரனே என்பாழ்ங் கரும்பிறவி
வேர்நீக்கித் தீரா மலப்பிணி தீர்த்திடும் வேலவனே
சார்ந்தேன் உனதடி ரத்ன கிரியுறை சண்முகனே.