முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
எழில்நிறை வள்ளிநன்4 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

எழில்நிறை வள்ளிநன்

7வெண்பா✓
எழில்நிறை வள்ளிநன் நாயகி ஏத்தக்
கழிபெருமெய் யன்பாற் கடிதில்-வழிநடந்து
கானவனாய் வந்தேற்ற ரத்னகிரிக் காவலனே
மோனகுரு வந்தருளென் முன்.
8கட்டளைக் கலித்துறை✓
முன்னமுன் பேர்வண்ணம் மற்று முளகேட்டு முற்றுணர்ந்த
பின்னரே ரத்ன கிரியானென் றோர்ந்தயான் பித்தடைந்தே
என்அத்தன் அன்னை தனையும் மறந்தேன் எழிலரசே
இன்றே அணிவித்தேன் பாமாலை உன்னடிக் கேற்றருளே.