முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
ஆண்டருள் செய்யும்2 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

ஆண்டருள் செய்யும்

3வெண்பா✓
ஆண்டருள் செய்யும் அறுமுகத் தெய்வமாய்
காண்டற் கரிதாய்க் கருத்துறைவோய்-வேண்டியதை
வேண்டுவோர்க் கீந்திடும் ரத்னகிரி வேலவா
ஈண்டெனை ஆள்வாய் இனிது.
4கட்டளைக் கலித்துறை✓
இனிதுளத் தொன்றாகி வேறாய் உடனாம் இறையவனே
பனிமொழி பார்வதி யும்சேர வந்தநற் பாலகனே
கனிவுடன் மெய்யடி யார்தமை யேற்கும்வேற் கையிறையே
இனியெனை ஆள்வையோ ரத்ன கிரியுறை இன்னமுதே.