முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
கடலமுதே கார்த்திகைப்10 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

கடலமுதே கார்த்திகைப்

19வெண்பா✓
கடலமுதே கார்த்திகைப் பெண்முகைப்பால் மாந்தி
அடல்மிகு சூரை அழித்த-வடிவேலாய்
என்னாவி காத்திட இன்றுநீ வந்தருளாய்
உன்னையல்லால் யார்தான் உறவு.
20கட்டளைக் கலித்துறை✓
உறவுடன் நின்றாளை உள்ளத் தமைத்திடும் உத்தமர்க்கே
நிறமுரு இல்லாதாய் நின்னுருக் காட்டிடும் நின்மலனே
அறவிடை யேறும் அரன்றன் குமரா அறுமுகனே
மறவா தெனையாள் எனதாவி சேர்த்தேன் மலரடிக்கே.