முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
அருணகிரி அன்று5 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

அருணகிரி அன்று

9வெண்பா✓
அருணகிரி அன்று விராலிகூன் றேக
இருளில் வழிகாட்டும் எந்தாய்-கருவிருளில்
வந்தயான் உய்ய மறலி வருமுன்னே
வந்துன் வழிகாட் டுவந்து.
10கட்டளைக் கலித்துறை✓
உவந்த ருணகிரிப் பாடற் றிளைத்தே உளம்நெகிழ்ந்து
தவத்திரு அம்மை மடியிருந் தோடிய சற்குருவே
பவத்தொடர் சம்பந்தாண் டான்மறைந் தோடும் பரம்பொருளே
பவப்பிணி போக்கும் கிரியானே என்னுள் பதிந்தருளே.