முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
சண்முகா! சார்ந்தார்க்9 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

சண்முகா! சார்ந்தார்க்

17வெண்பா✓
சண்முகா! சார்ந்தார்க் கருள்செயும் சற்குருவாய்க்
கண்கயற் பாவைக்குறக் கன்னியையே-நண்ணி
அடைந்த அறுமுகவா ரத்னகிரி வேலா
அடைக்கலம் உன்றாள் அலர்க்கு.
18கட்டளைக் கலித்துறை✓
அடைக்கல மாக மலர்த்தாள் புகுந்த அறிவிலியை
உடைக்கல மாக அருளிடாய் என்னை உடையவனே
துடைக்கினும் நின்றாள் அகலேன் கிரியுறை தூமணியே
கடைக்கணின் உய்ய அருளாய் கருணைக் கடலமுதே.