முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
இனியாய் உயிர்கட்7 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

இனியாய் உயிர்கட்

13வெண்பா✓
இனியாய் உயிர்கட் கெளிவரும் தேவே
கனிவுடன் என்வினை கவ்வி-இனிதேற்பாய்
செந்நெல் வளர்ந்தோங்கு செய்யரத் நாசலனே
இந்நாளில் எய்துவன் யான்.
14கட்டளைக் கலித்துறை✓
யான்என தென்னும் செருக்கை அகற்ற இரத்னகிரி
தான்நில மென்றுணர்ந் தெல்லாரும் சார்ந்திணைத் தாள்வணங்கின்
மான்மழுக் கையுடை யான்செல்வ வள்ளி மனமுவக்கத்
தேன்தினை மாவுண்போய் ஆள்வை இனிதுண்மை தேவரசே.