முருகன் App
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை
வி. அண்ணாமலை முதலியார்
மலரவன் தானறியா1 / 10
இரத்தினகிரிப் பாலமுருகன் இரட்டை மணிமாலை · வி. அண்ணாமலை முதலியார்

மலரவன் தானறியா

வெண்பா✓
மலரவன் தானறியா மாபொருளின் உண்மை
நலமலி மாதுமையாள் நாதன்-வலச்செவி
தன்னிலோ திட்ட கிரியாய் தனிமுதல்வா
உன்னருளை எய்துநாள் ஓது.
2கட்டளைக் கலித்துறை✓
ஓதி உணர்தற் கரியாய் உணர்வில் உறுபவனே
பாதி மதியுடன் பாம்பணி கின்ற பரசிவன்றாள்
ஆதி அயன்முத லோர்வேண்ட வந்த அறுமுகனே
ஆதிரத் நாசல மெய்ப்பொருள் ஆவிகொண் டாண்டருளே.